search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Global T20 Canada"

    கனடாவில் நடைபெற்றுவரும் குலோபல் டி20 லீக் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் வின்னிபெக் ஹாக்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணியை வீழ்த்தியது. #GlobalT20 #CanadaT20 #MontrealTigers #WinnipegHawks

    டொரோண்டோ:

    உலகின் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கனடாவில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் குலோபல் டி20 லீக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன.

    நேற்று நடந்த லீக் போட்டியில், லசித் மலிங்கா தலைமையிலான மாண்ட்ரியல் டைகர்ஸ் - டுவெய்ன் பிராவோ தலைமையிலான வின்னிபெக் ஹாக்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதில் டாஸ் வென்ற மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வின்னிபெக் ஹாக்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லெண்டில் சிம்மன்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் பென் மெண்டெர்மோட் களமிறங்கினார். சிம்மன்ஸ் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டேரன் பிராவோ களமிறங்கினார். அவர் மெண்டெர்மோட் உடன் இணைந்து ரன் குவித்தார்.



    இருவரும் அரைசதம் கடந்தனர். பிராவோ 29 பந்தில் 54 ரன்கள் (3 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். மெண்டெர்மோட் 68 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹாக்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. மில்லர் 15 பந்தில் 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டைகர்ஸ் பந்துவீச்சில் மலிங்கா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    அதன்பின் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரரான டுவெயின் ஸ்மித் டக்-அவுட் ஆனார். அதன்பின் சுனில் நரேன் - மோசஸ் ஹென்ரிகஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த போட்டியின் போது பந்துவீச்சாளர் வீசிய பவுன்சர் நரேனின் முகத்தை பதம் பார்த்தது. இதனால் நரேன் 16 ரன்களில் காயம் காரணமாக வெளியேறினார். 



    மோசஸ் ஹென்ரிகஸ் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜார்ஜ் வாக்கர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து நரேன் மீண்டும் களமிறங்கினார். அவர் சிகந்தர் ரசா உடன் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். ரசா 13 பந்தில் 3 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி உட்பட 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நரேன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதைத்தொடர்ந்து தினேஷ் ராம்தின் பிராவோ பந்தில் டக்-அவுட் ஆனார். டைகர்ஸ் அணியின் வெற்றிக்கு 6 ஓவரிகளில் 100 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் டைகர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் ஹாக்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாக்ஸ் அணி பந்துவீச்சில் பிராவோ, ஜுனையத் சித்திக் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், அலி கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #GlobalT20 #CanadaT20 #MontrealTigers #WinnipegHawks
    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி விளையாட தடைவிதிக்கப்பட்டதை அடுத்து குளோபல் டி20 கனடா லீக்கில் விளையாடிய ஸ்மித் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    குளோபல் டி20 கனடா லீக் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். 6 அணிகள் மோதும் இதில் பங்கேற்கும் டொராண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால தடைபெற்ற ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் இடம்பிடித்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற குளோபல் டி20 கனடா போட்டியில் களம் இறங்கினார். 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 61 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஸ்மித்திற்கு ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றது. ஸ்மித்துடன் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய டேவிட் வார்னரும் இந்த லீக்கில் விளையாடி வருகிறார்.


    ஸ்மித் இந்த லீக் போட்டியில் கிடைக்கும் வருமானத்தை அடிமட்டத்தில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் திட்டத்திற்கு (grassroots cricket programs) வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பேசிய கிறிஸ் கெய்ல், 'ஸ்மித் மற்றும் வார்னர் செய்த குற்றங்களுக்கு அவர்கள் தண்டனை அனுபவித்து விட்டனர். அவர்கள் மற்ற கிரிக்கெட் வீரர்களை போன்று மகிழ்ச்சியாக வாழ உரிமை உள்ளது. தங்கள் குடும்பத்திற்காக அவர்கள் உழைக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கான இடத்தை வழக்க வேண்டும். மனிதர்கள் தவறு செய்வது வழக்கம். அதனை திருத்திக் கொள்ள அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க வேண்டும்' என கூறினார்.

    கிரிக்கெட் விளையாடும் பல்வேறு நாடுகள் டி20 லீக் தொடரை நடத்திவரும் நிலையில் கனடா கிரிக்கெட் வாரியமும் டி20 லீக் தொடரை நடத்துகிறது.
    கிரிக்கெட் விளையாடும் பல்வேறு நாடுகள் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இதில் கனடாவும் தற்போது இணைந்துள்ளது. கனடா கிரிக்கெட் சங்கம் சென்னையின் மெர்குரி குரூப் உடன் இணைந்து ‘குளோபல் டி20 கனடா’ என்ற பெயரில் லீக்கை நடத்துகிறது. இந்த தொடர் ஜூன் 28-ந்தேதியில் இருந்து ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது.

    இதில 6 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். பிளேஆஃப்ஸ் சுற்றுகள் ஐபிஎல் தொடரில் நடைபெறுவதுபோல்  நடக்கும்.
    ×