என் மலர்

  செய்திகள்

  கனடா டி20 லீக் - மாண்ட்ரியல் டைகர்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வின்னிபெக் ஹாக்ஸ்
  X

  கனடா டி20 லீக் - மாண்ட்ரியல் டைகர்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வின்னிபெக் ஹாக்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கனடாவில் நடைபெற்றுவரும் குலோபல் டி20 லீக் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் வின்னிபெக் ஹாக்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணியை வீழ்த்தியது. #GlobalT20 #CanadaT20 #MontrealTigers #WinnipegHawks

  டொரோண்டோ:

  உலகின் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கனடாவில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் குலோபல் டி20 லீக் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆறு அணிகள் கலந்துகொண்டுள்ளன.

  நேற்று நடந்த லீக் போட்டியில், லசித் மலிங்கா தலைமையிலான மாண்ட்ரியல் டைகர்ஸ் - டுவெய்ன் பிராவோ தலைமையிலான வின்னிபெக் ஹாக்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதில் டாஸ் வென்ற மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வின்னிபெக் ஹாக்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லெண்டில் சிம்மன்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். வார்னர் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் பென் மெண்டெர்மோட் களமிறங்கினார். சிம்மன்ஸ் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டேரன் பிராவோ களமிறங்கினார். அவர் மெண்டெர்மோட் உடன் இணைந்து ரன் குவித்தார்.  இருவரும் அரைசதம் கடந்தனர். பிராவோ 29 பந்தில் 54 ரன்கள் (3 பவுண்டரி, 5 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். மெண்டெர்மோட் 68 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹாக்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. மில்லர் 15 பந்தில் 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டைகர்ஸ் பந்துவீச்சில் மலிங்கா 2 விக்கெட் வீழ்த்தினார்.

  அதன்பின் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரரான டுவெயின் ஸ்மித் டக்-அவுட் ஆனார். அதன்பின் சுனில் நரேன் - மோசஸ் ஹென்ரிகஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த போட்டியின் போது பந்துவீச்சாளர் வீசிய பவுன்சர் நரேனின் முகத்தை பதம் பார்த்தது. இதனால் நரேன் 16 ரன்களில் காயம் காரணமாக வெளியேறினார்.   மோசஸ் ஹென்ரிகஸ் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜார்ஜ் வாக்கர் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து நரேன் மீண்டும் களமிறங்கினார். அவர் சிகந்தர் ரசா உடன் ஜோடி சேர்ந்து ரன் குவித்தார். ரசா 13 பந்தில் 3 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி உட்பட 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நரேன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

  அதைத்தொடர்ந்து தினேஷ் ராம்தின் பிராவோ பந்தில் டக்-அவுட் ஆனார். டைகர்ஸ் அணியின் வெற்றிக்கு 6 ஓவரிகளில் 100 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் டைகர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் ஹாக்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாக்ஸ் அணி பந்துவீச்சில் பிராவோ, ஜுனையத் சித்திக் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், அலி கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #GlobalT20 #CanadaT20 #MontrealTigers #WinnipegHawks
  Next Story
  ×