search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "clash"

    • இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
    • அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் அரசியல் கட்சி தலைவரின் பாடலுக்கு அவரது கட்சியினர் ஆட்டம் போடுவது போல திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டு வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

    அதில் மற்றொரு தரப்பினர் ஜாதி பெயரை குறிப்பிட்டு அவதூறான கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். அதற்குக் கீழ் கல்பகனூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு சமுதாயம் குறித்து அவதூறு வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார்.

    தலையில் காயம் அடைந்த ஏட்டு முருகவேல்

    தலையில் காயம் அடைந்த ஏட்டு முருகவேல்

    மேலும் அதனை தனது வாட்ஸ்-அப் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு சமுதாயத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து தலைமையில் ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்னர்.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் 3 போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே போலீசார் பேசிக் கொண்டிருக்கும்போதே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் செங்கற்களை மாறி மாறி வீசினர்.


    இதனால் அப்பகுதியில் உள்ள இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் மற்றும் அந்த பகுதியில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்து சேதப்படுத்தினர். அப்போது அந்த பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது. தொடர்ந்து நடைபெற்ற கல்வீச்சில் பாதுகாப்பு பணிக்காக வந்த வீரகனூர் போலீஸ் ஏட்டு முருகவேல் என்பவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் கல்பகனூரில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்திய போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர்.

    இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், ஆத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ் ஆகியோரும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் வெளியூர் நபர்கள் உள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.
    • போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜ்குமார் பணிபுரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக கதிரேசன் உள்ளார்.

    இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு ஆவணங்கள் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசனை அழைத்து விவரம் கேட்டுள்ளார்.

    இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த விளக்கம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாருக்கு திருப்தி ஏற்படவில்லை.

    இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த போலீசார் 2 பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் 2 பேரும் போலீஸ் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டிக்கு தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரித்து அவர்களை கண்டித்துள்ளார். அதன் பிறகு 2 பேரும் பணிக்கு திரும்பினர்.

    பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய போலீசாரே போலீஸ் நிலையத்தில் மல்லுக் கட்டிய சம்பவம் நெட்டப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • செந்துறையில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது
    • மோதல் தொடர்பாக 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பால் பண்ணை அருகே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அலுவலகம் உள்ளது. இந்தநிலையில், அ.தி.மு.க.வினர் தங்களது அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் இருந்த சுற்றுச்சுவரை அகற்றி டீக்கடை வைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் டீக்கடை வைக்கும் பணியினை நேற்று முன்தினம் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் அந்த கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனைதொடர்ந்து இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். பின்னர் கல்வீச்சில் போலீசார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் 82 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இரு தரப்பினர் மோதல்; 9 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ளது கீழக்குளம் கிராமம். இங்குள்ள மந்திரமூர்த்தி அய்யனார் கோவிலில் கடந்த வாரம் புரவிடுப்பு விழா தொடங்கி யது. இந்த திருவிழா தொடர்பாக கீழக்கு ளத்தைச் சேர்ந்தவரும் கே.ஆர். பட்டணம் ஊராட்சியின் துணைத் தலைவருமான பெரியசாமி தரப்பிற்கும், முதுகுளத்தூர் திமுக ஒன்றிய செயலா ளரான சண்முகம் தரப்பிற்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    கோவில் திருவிழா முடிந்து அன்னதானம் நடந்த போது இருதரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அரிவாள், கத்தி, கம்பு, கிரிக்கெட் மட்டை ஆகிய வற்றால் தாக்கியும், கற்களை வீசி எறிந்தும் இருதரப்பி னரும் கடுமை யாக மோதி கொண்டனர்.

    இதில் கீழக்குளத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது42), சண்முகவேலு(67), பெருங்கருணையைச் சேர்ந்த சண்முகம்(47), கீழக்குளம் முருகன்(46) முத்துராமலிங்கம் மனைவி கஸ்தூரி(50), மகாலிங்கம் மகன் உதயகுமார்(19), முத்துக்குமார்(30), மாரி முத்து (43), ஜெகதீஸ்வரன்(33) ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இவர்கள் மதுரை, ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த மோதலின் போது பாது காப்பு பணியில் ஈடுபட்ட அபிராமத்தை சேர்ந்த காவலர் சரவணன் காயம் அடைந்தார். இவர் கமுதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மோதல் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பயணிகளை ஏற்றுவதில் தனியார் பஸ் ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அவ்வப்போது தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்க ளுக்கு இடையே நேரம் பின்பற்றி பயணிகளை ஏற்றி செல்வதில் வாக்கு வாதம் ஏற்படுவது வாடி க்கை யாக நடந்து வருகிறது.

    இந்தநிலையில் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இரண்டு தனியார் பேருந்து களின் நடத்துனர்கள் போட்டி ப்போட்டு பயணி களை ஏற்றினர்.

    அதில் ஒரு பஸ் அரிமளம் தேனிப்பட்டி நோக்கியும், மற்றொரு பஸ் ராங்கியம் மெட்டு பகுதிக்கும் இயக்கப்பட்டது.

    பின்னர் அந்த பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 2-வது நிறுத்தமான பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி பயணிகளை ஏற்றினர்.

    அப்போது இரு பேருந்து களின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் இரண்டு பேருந்துகளையும் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அவ்வழியாகச் சென்ற மற்ற பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.

    ஆனால் அதைப்பற்றி கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தகராறு செய்தனர்.

    அப்போது பொறுமை இழந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தகராறு செய்த 2 பேருந்துகளின் நடத்துன ர்கள் மற்றும் ஓட்டுனர்களை தட்டி கேட்டனர்.

    அதனை தொடர்ந்து அந்த பேருந்துகளின் டிரைவர்கள், பேருந்துகளை இயக்கி சென்றனர்.

    இந்த தகராறு காரணமாக சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது போல் பயணிகளை ஏற்றி செல்வதில் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இது போன்று வாக்குவாதத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் ே காரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்கள் மோதிக்கொள்வதை பார்த்தவர்கள் அருகில் உள்ள டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • அதை தொடர்ந்து பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களை சமரசம் செய்த போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் ஸ்ரீபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று மாலை அங்கு படித்து வரும் 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி முடிந்து ஊருக்கு செல்வதற்காக டவுன் மேல ரத வீதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளனர்.

    பின்னர் அவர்களில் 10 பேர் திடீரென மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 மாணவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனிடையே மாணவர்கள் மோதிக்கொள்வதை பார்த்தவர்கள் அருகில் உள்ள டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அதை தொடர்ந்து பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களை சமரசம் செய்த போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் டவுனில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முரளி கிருஷ்ணனை எதிர்தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது.
    • புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முரளிகிருஷ்ணன்(19) என்பவர் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் உடன் படிக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த தருண் (19) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டிமோதலாக மாறியது. மாணவர்கள் இருதரப்பினராக பிரிந்து அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முரளி கிருஷ்ணனை எதிர்தரப்பினர் தாக்கியதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று மாலையும் மாணவர்களுக்கிடையே மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. கல்லூரி வளாகத்திலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முரளி கிருஷ்ணன், நண்பர்களான, தேசப்பன், ஸ்ரீநாத் ஆகியோருடன் காசிமேடு கடல் பகுதிக்கு சென்றார். இதனை அறிந்து அங்கு சென்ற தருண் மற்றும் அவரது நண்பர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். இதில் முரளி கிருஷ்ணன், தேசப்பன், ஸ்ரீநாத் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மோதல் தொடர்பாக கல்லூரி மாணவர்களான தருண், விக்னேஷ், நவீன், தீபக், கார்த்திக், கவுதம், சஞ்சய் ஆகிய 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மோதலில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்.
    • தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் பாரதியார் பல்கலைக் கூடம் இயங்கி வருகிறது. இங்கு இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த பல்கலைக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த பல்கலைக்கூடத்தில் துறை வாரியாக முதல்வர் முதல் மாணவர்கள் வரை பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொறுப்பு முதல்வராக இருந்த போஸ் மாற்றப்பட்டார்.

    அதன்பிறகும் பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார். முகம் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த அவரை சக மாணவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாணவர்களிடையே நடந்த மோதலால் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மாவடி ஆர்ச்விளை தெருவை சேர்ந்த சுவாமிதாஸ் மகன் தீபக் பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டார்.
    • இதில் ஏற்பட்ட தகராறில் மாவடி வடக்குத்தெருவை சேர்ந்த ராபீன் , பிராங்ளின் ஆகியோர் தீபக்கை கல்லால் தாக்கினர்.

    களக்காடு:

    ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் சென்றதை அடுத்து களக்காடு அருகில் உள்ள மாவடி பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாவடி ஆர்ச்விளை தெருவை சேர்ந்த சுவாமிதாஸ் மகன் தீபக் (வயது32) பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் மாவடி வடக்குத்தெருவை சேர்ந்த நவநீதன் மகன் ராபீன் (28), ரெத்தினம் மகன் பிராங்ளின் (46) ஆகியோர் தீபக்கை கல்லால் தாக்கினர். இதுபோல தீபக் ராபீனை கீழே தள்ளினார். இந்த மோதலில் தீபக், ராபீன் காயமடைந்தனர். இதுகுறித்து இருவரும் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராபீன், பிராங்ளின், தீபக்கை கைது செய்தனர்.

    • பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.
    • பின்தொடர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில் வழி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பெண்ணை வீட்டில் இருந்து திடீரென காணவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் பல்லடம் அருகே அருள்புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இளம்பெண் வசிக்கும் பகுதி நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அருள்புரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.

    • வாலிபர் மீது தாக்குதல்-வீடு சூறை
    • காயமடைந்த விஜயை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே நல்லூர் பகுதியில் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. இந்நிகழ்ச்சியை யொட்டி இரவு தெருக்கூத்து நடைபெற்றது.

    இதனை அதே பகுதியை சேர்ந்த ஏழையப்பன் என்பவரின் மகன் விஜய் பார்க்க சென்றார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரதாப் ஆகியோர் விஜயை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த விஜயை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர்.

    இது குறித்து ஏழையப்பன் திருபுவனை போலிசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே விஜயை தாக்கியதை பற்றி அறிந்த அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்து சுரேஷின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அங்கு சுரேஷ் இல்லாததால் ஆவேசமடைந்த அவர்கள் சுரேஷ் வீட்டின் கதவு, ஜன்னல் களை உடைத்து விட்டு சென்று விட்டனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள கீழஉப்பூரணி நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி. அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் (40) என்பவர், பொன்பாண்டியின் மனைவி குறித்து அவதூறு கடிதம் எழுதி உள்ளார்.
    • இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழஉப்பூரணி நடுத்தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது 26). விவசாயி. அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் (40) என்பவர், பொன்பாண்டியின் மனைவி குறித்து அவதூறு கடிதம் எழுதி அதனை பொன்பாண்டி யின் மோட்டார் சைக்கிளில் வைத்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

    தாக்குதல்

    இதுபற்றி களக்காடு போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து, சமாதா னம் செய்து வைத்துள்ளனர். சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பால்ராஜ், அவரது மகன்கள் பவுல்தாஸ், பவுல் படஸ் ஆகியோர் சேர்ந்து பொன்பாண்டியை தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த வெள்ளப்பாண்டி, பூபதிராஜை யும் தாக்கினர். மேலும் பூபதிராஜை அரிவாளா லும் வெட்டினர். இதுபோல பொன்பாண்டி, பால்துரை மகன் வெள்ளப்பாண்டி மற்றும் 3 பேர் சேர்ந்து பால்ராஜையும், அவரது மகன் பவுல்தாஸையும் கம்பால் தாக்கினர்.

    இந்த மோதலில் பொன்பாண்டி, வெள்ளப்பா ண்டி, பூபதி ராஜ், பால்ராஜ், பவுல்தாஸ் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×