search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CALQUARY"

    • கல் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்டு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை தாங்கினார்.மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் குணசேகரன், மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குவாரி உரிமையாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் குவாரி அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அமைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.அப்போது இருதரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அனைவரின் கருத்துக்களும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ஷாலினி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

    • பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழிற்சாலைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    அரசின் விதிகளுக்குட்பட்டு இயங்கிவரும் கல்குவாரிகள் தங்கள் உரிமைத்தை புதிப்பிக்க விண்ணப்பிக்கும் போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 2014 ஆண்டிற்கு முன்பு இருந்த பழைய நடைமுறையிலேயே தற்பொழுதும் இயங்க அனுமதி வழங்க வேண்டும். மேலும் 5 ஹெக்டேருக்கு மேல் குவாரிகள் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தி அதன்பின் உரிமம் வழங்கப்படுகிறது. இதில் 5 ஹெக்டேர் என்பதை 25 ஹெக்டேராக உயர்த்தி அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆகவே கல்குவாரி மற்றும் கிரஷர்கள் தொழிற்சாலை உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழக அரசு விரைந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கல்குவாரியில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை

    கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி அரசு புறம்போக்கு இடத்தில் கல் குவாரி இயங்குவதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பகுதிக்கு சென்ற போது கல்குவாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் அங்கு சோதனை நடத்தியபோது பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்களான ஜெலட்டின் குச்சி 78 பாக்கெட் மற்றும் ஜெலட்டின் குச்சி 11 வயர் 50 மீட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் விசாரணை நடத்தியதில் 1 ஏக்கர், 35 சென்ட் பரப்பளவு உள்ள பாறையில் வெடி மருந்துகள் வைத்து பாறைகளை தகர்த்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    ×