search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bayern Munich"

    கால்பந்தின் ஸ்டிராங்கஸ்ட் பிராண்டில் ரியல் மாட்ரிட்டை முந்தி முதல் இடத்தை பிடித்தது பார்சிலோனா. #Barcelona #realMadrid
    ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகள் ரியல் மாட்ரிட், பார்சிலோனா. களத்தில் இரண்டு அணிகளும் எலியும் பூனையுமான மோதிக்கொள்ளும். களத்தில் மட்டுமல்ல வருமானம் ஈட்டுதல், ரசிகர்களை கவர்தல் போன்றவற்றிலும் இரு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும்.

    ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக்கில் தொடர்ச்சியாக 3-வது முறை கோப்பையை வெல்வதற்கு தயாராகி வருகின்றன. அதேவேளையில் பார்சிலோனா லா லிகா டைட்டிலை வென்றதுடன், கோபா டெல் ரே டைட்டிலையும் வென்றுள்ளது.

    பிராண்ட் நிதி ஆலோசனை நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் கால்பந்தின் பலமான அடையாளத்தில் (strongest football brand) ரியல் மாட்ரிட் அணியை பார்சிலோனா முந்தியதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

    தற்போது பார்சிலோனா சில புதிய ஸ்பான்சர்களை பிடித்துள்ளது. அதில் ஜப்பான் இ-வணிகம் நிறுவனமான ராகுட்டேனும் ஒன்று. பார்சிலோனா இந்த நிறுவனத்துடன் நான்கு வருடத்திற்கு 246 மில்லியன் யூரோவிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.



    பார்சிலோனாவின் பிராண்ட் வலிமை 95.4-ல் இருந்து 96.6-க்கு உயர்ந்துள்ளது. அதேவேளையில் ரியல் மாட்ரிட் அணியின் பிராண்ட் வலிமை 96.4 ஆகவே உள்ளது. உலகின் பலமான கால்பந்து அடையாளமாக பார்சிலோனா உயர்ந்துள்ளது. ரசிகர்களின் கருத்தில் இருந்து இந்த தகவல் தெரிய வந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    மான்செஸ்டர் யுனைடெட் (94.6) 3-வது இடத்திலும், பேயர்ஸ் முனிச் (93.1) 4-வது இடத்திலும், லிவர்பூல் (92.2) ஐந்தாவது இடத்திலும் உள்ளது. ரொனால்டோ, மெஸ்சி 30 வயதை கடந்துள்ளதால் இரு அணிகளின் பலம் குறைய வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
    ×