search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assam Earthquake"

    • துப்ரி மாவட்டத்தில் இன்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.
    • வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    துப்ரி:

    அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகி இருந்தது.
    • வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் இன்று காலை 10.16 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்கு பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 புள்ளியாக பதிவாகி இருந்தது.

    இதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அண்டை நாடான வங்காளதேசத்திலும் நில நடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நில நடுக்கத்தால் உயிர்சேதமோ? பொருட் சேதமோ? எதுவும் ஏற்படவில்லை.

    வடமாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இன்று அசாம் மாநிலத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். #AssamEarthquake
    புதுடெல்லி:

    டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. அண்டை நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக இங்கு லேசான நில அதிர்வு உணரப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 அலகாக பதிவாகியிருந்தது. அதேபோல் ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்திலும் இன்று காலை 5.43 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 அலகாக பதிவாகியிருந்தது.



    அதன்பின்னர் அசாமில் உள்ள கோக்ரஜார் பகுதியில் இன்று 5.5 என்ற ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பீகார், மேற்கு வங்காளத்திலும் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். #AssamEarthquake
     
    ×