search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air service"

    • கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு காரணமாக, இந்த விமான சேவை, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டது.
    • சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    ஆலந்தூர்:

    இந்தோனேசியா நாட்டில் உள்ளது வடக்கு சுமத்திரா மாகாணம். இந்த மாகாணம், சுமத்திரா தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தென்மேற்குப் பகுதியில் இந்திய பெருங்கடலும், வடகிழக்கு பகுதியில் மலாக்கா நீர் அணையும் அமைந்துள்ளது. இந்த வடக்கு சுமத்திரா மாகாணத் தின் தலைநகர் மேடான்.

    இந்தப் பகுதி இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா தளம். இதனால் சுற்றுலா பயணிகள் பெருமளவு இங்கு வருகின்றனர். அதோடு இயற்கை காட்சிகள் நிறைந்த இந்த பகுதியில் திரைப்பட படப்பிடிப்புகளும் அதிக அளவில் நடக்கின்றன.

    புகழ்பெற்ற சுற்றுலா தளமான, இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்திரா மாகாணத்திற்கு, இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவைகள் இல்லை. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடு களுக்கு சென்று அங்கிருந்து இணைப்பு விமானங்கள் மூலம் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்திற்கு சென்று வந்தனர். இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டின், வடக்கு சுமத்திரா தலைநகர் மேடான் விமான நிலையத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, நேரடி தினசரி விமான சேவையை தொடங்க, பாட்டிக் ஏர் விமான நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி இம்மாதம் ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து, இந்த விமான சேவையை தொடங்க பாட்டிக் ஏர் விமான நிறுவனம் முடிவு செய்து இருந்தது. அதன் பின்பு நிர்வாக காரணங்களால், அது ஆகஸ்ட் 11-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.

    சென்னை-இந்தோனேசியா இடையே, ஏற்கனவே இதே விமான நிறுவனம், 2017-ம் ஆண்டு இந்த விமான சேவையை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம், ஊரடங்கு காரணமாக, இந்த விமான சேவை, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் இந்த விமான சேவை தொடங்கி உள்ளது.அதன்படி 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு பாட்டிக் ஏர் விமான நிறுவனத்தின், முதல் விமான சேவை, நேற்று (வெள்ளிக்கிழமை)தொடங்கப்பட்டது. இந்த விமானம், நேற்று மாலை, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் விமான நிலையத்தில் இருந்து 51 பயணிகளுடன் புறப்பட்டு, நேற்று இரவு 9:45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வரவேண்டிய விமானம் தாமதமாக இரவு 10:45 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்தோனேசியா நாட்டில் இருந்து சென்னைக்கு முதல் விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலையத்தில், விமான நிலைய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

    அதன்பின்பு இதே விமானம், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 43 பயணிகளுடன், சென்னை சர்வ தேச விமான நிலையத்தில் இருந்து, மீண்டும் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேடான் விமான நிலையத்தில் சென்று தரை யிறங்கியது. சென்னை- இந்தோனேசியா இடையே 3 ஆண்டுகளுக்கு பின்பு நேரடி தினசரி விமான சேவை தொடங்கப் பட்டுள்ளது, மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுற்றுலா தளமான, வடக்கு சுமத்திரா மாகாணத்தின் மேடான் நகருக்கு நேரடி விமானம் இயக்கப்படுவது, சுற்றுலா துறையை ஊக்குவிப்பதாக அமையும்.

    இதனால் சுற்றுலா பயணிகள், திரைப்பட படப்பிடிப்பு குழுவினர், மற்றும் தொழில் துறை சம்பந்தப்பட்டவர்கள் பலருக்கு இந்த விமான சேவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். தினசரி நேரடி விமானம் மூலம் சுமத்திரா மாகாணம் - சென்னையோடு இணைக்கப்பட்டுள்ளதால், சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    • ஏர் நியூசிலாந்து மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் முறையே 2-வது, 3-வது இடங்களைப் பிடித்தன.
    • இந்த பட்டியலில் ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய நிறுவங்கள் எதுவும் இடம்பிடிக்கவில்லை

    புதுடெல்லி :

    உலகளவிலான விமான போக்குவரத்தில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை, புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் கத்தார் விமான சேவை 'ஏர்லைன்ஸ் ஆப் தி இயர்' தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் கத்தார் நாட்டின் இதே விமான சேவை நிறுவனமே முதலிடம் வகித்தது. கொரோனா கால கட்டத்திலும் மக்கள் சேவைக்காக கத்தார் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

    இதன் பயணிகள் சேவை, தொடர்ச்சியான விமான இயக்கம் போன்ற காரணங்களால் கத்தார் ஏர்லைன்ஸ், உலகின் சிறந்த விமான சேவை இயக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த பட்டியலில், ஏர் நியூசிலாந்து மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

    ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ், குறிப்பாக பாதுகாப்பு அம்சத்தில், தொடர்ந்து உலகின் சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. இந்நிறுவனம் நியூசிலாந்து, அமெரிக்கா, ஆசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு விமான சேவையை வழங்கி வருகிறது.

    குவாண்டாஸ், உலகின் சிறந்த பிராந்திய விமான சேவை நிறுவனம் என்றும் பெயரிடப்பட்டது. 20 இடங்கள் கொண்ட இந்த பட்டியலில், ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய நிறுவங்கள் எதுவும் இடம்பிடிக்கவில்லை

    தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை வரும் ஜூலை 1-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ThoothukudiAirport
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் விமான நிலையம் இயங்கி வருகிறது. இதில் விமானப் போக்குவரத்து சேவை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தொழில் நகரமான தூத்துக்குடிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.

    இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான நிலம் மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. விரைவில் விரிவாக்கம் பணிகள் நடைபெற உள்ளன.

    அதே நேரத்தில் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முனையமும் இங்கு அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனம் சார்பில் தினமும் காலை, மாலை என இரு முறை விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    வரும் ஜூலை 26-ந்தேதி மற்றொரு தனியார் நிறுவனம் தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் புதிதாக 3 விமான சேவைகளை தொடங்குகிறது.



    இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை வரும் ஜூலை 1-ந்தேதி முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

    தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.15 மணிக்கு பெங்களூரு போய் சேரும். இதனால் தூத்துக்குடி விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #ThoothukudiAirport
    ×