search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியிலிருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை 1-ந்தேதி தொடங்குகிறது
    X

    தூத்துக்குடியிலிருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவை 1-ந்தேதி தொடங்குகிறது

    தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை வரும் ஜூலை 1-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ThoothukudiAirport
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியில் விமான நிலையம் இயங்கி வருகிறது. இதில் விமானப் போக்குவரத்து சேவை அதிகப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தொழில் நகரமான தூத்துக்குடிக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.

    இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான நிலம் மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. விரைவில் விரிவாக்கம் பணிகள் நடைபெற உள்ளன.

    அதே நேரத்தில் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முனையமும் இங்கு அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனம் சார்பில் தினமும் காலை, மாலை என இரு முறை விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    வரும் ஜூலை 26-ந்தேதி மற்றொரு தனியார் நிறுவனம் தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் புதிதாக 3 விமான சேவைகளை தொடங்குகிறது.



    இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு புதிய விமான சேவையை வரும் ஜூலை 1-ந்தேதி முதல் தனியார் விமான சேவை தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

    தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5.15 மணிக்கு பெங்களூரு போய் சேரும். இதனால் தூத்துக்குடி விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #ThoothukudiAirport
    Next Story
    ×