என் மலர்

  நீங்கள் தேடியது "5tht20match"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போட்டி ரத்துச் செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
  • போட்டிக்கான கட்டணத்தில் 50 சதவீதம் ரசிகர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.

  பெங்களூரு:

  இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற இருந்த நிலையில் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.

  முன்னதாக டாஸ் போடப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. 3.3 ஒவர் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது. இதையடுத்து 5வது 20 ஓவர் போட்டி ரத்துச் செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

  இந்நிலையில், இந்த போட்டிக்கான கட்டணத்தில் 50 சதவீதம் ரசிகர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.

  ×