search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "24 lakh devotees"

    திருப்பதியில் கோடை விடுமுறையில் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.86 கோடியே 46 லட்சம் கிடைத்துள்ளது.
    திருமலை:

    திருப்பதியில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து தொலைபேசி மூலமாக குறைகள் கேட்கும் முகாம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கலந்து கொண்டு பேசினார்.

    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முறையில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் தலா 30 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது. திங்கள், வெள்ளிக்கிழமையில் தலா 20 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது. செவ்வாய், புதன், வியாழக்கிழமையில் தலா 17 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படுகிறது.

    திருமலையில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக உணவு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. அவற்றில் தினமும் தலா 10 ஆயிரம் பேருக்கு மேல் உணவு வழங்கப்படுகிறது. ஆக மொத்தம் ஒருநாளைக்கு திருமலையில் 2 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 70 ஆயிரம் பக்தர்களுக்கும், அன்னதானக்கூடத்தில் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பக்தர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமையில் ஒருநாளைக்கு அன்னதானக்கூடத்தில் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2-ல் தினமும் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மே மாதம் 26 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு மே மாதம் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் 1 கோடியே 7 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் 1 கோடியே 5 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் 70 லட்சம் பக்தர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் 70 லட்சத்து 83 ஆயிரம் பக்தர்கள் உணவு சாப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.78 கோடியே 47 லட்சம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மே மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.86 கோடியே 46 லட்சம் கிடைத்துள்ளது.

    இந்த ஆண்டு மே மாதம் திவ்ய தரிசனத்தில் 5 லட்சத்து 36 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறையில் இந்த ஆண்டு மே மாதம் 5 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு மே மாதம் டைம் ஸ்லாட் அல்லாமல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று 5 லட்சத்து 15 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வந்த பெண் பக்தர்கள் என மொத்தம் 55 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×