search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள்"

    • மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு கியூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
    • மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு கியூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த கல்வியாண்டிற்கான (2024-25) பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புக்கான கியூட் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவு கடந்த 13-ந் தேதி வெளியானது. இதன்படி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டிற்கான பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான சேர்க்கைக்கு மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.

    இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்திய பல்கலைக்கழக இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்க முடியவில்லை. இணைய தளம் முடங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழக உதவி எண்களை தொடர்பு கொண்டால் யாரும் பதிலளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
    • கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    பொதுத் தோ்வுகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 5-ந்தேதி நடை பெறவுள்ளது.

    இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 969 மாணவா்களும், சென்னையில் 827 மாணவா்களும், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தலா 730 மாணவா்களும் விண்ணப்பித்துள்ளனா்.

    அவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக 128 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் பயிற்சிகளை வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மையங்களிலும் இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளின் போது காலை சிற்றுண்டி, தேநீா் மற்றும் மதிய உணவு மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறுகின்றன.

    • தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.
    • 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பு (2023-24) கல்வி ஆண் டில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் சுயநிதி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளி மற்றும் சிறப்பு பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பின்வரும் நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பின்பற்ற வேண்டும்.

    அதன்படி, 6, 7-ம் வகுப்பு களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையின்படி ஒருங்கிணைந்த பதிவேட்டில் 3-ம் பருவ தேர்வுக்குரிய மதிப் பெண்கள், கிரேடுகளை பதிவு செய்ய வேண்டும். 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதிவு செய்வதுடன், பள்ளிக்குழு தேர்ச்சி விதிகளை பின்பற்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9-ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும்.

    அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மாணவர்கள் ஒழுக்கப் பண்பு உடையவர்களாக காணப்படுதல் வேண்டும்.
    • மாணவர்கள் நேர்மையுடன் செய்யும் பண்பு கொண்டவராக இருத்தல் வேண்டும்.

    கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை உயர்வாக எண்ணி மதிப்பளித்தல் மற்றும் அவர்களுடன் சிறந்த முறையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல் வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களிடம் தமக்கு ஏற்படும் சந்தேகங்களை தைரியத்துடன் கேட்டு தெளிவடையும் பண்பு கொண்டவராகவும் காணப்படுதல் வேண்டும்.

    மாணவர்கள் எந்த செயலையும் நேர்மையுடன் செய்யும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும். பிற உயிர்கள் மீது அன்பு, கருணை பண்பு கொண்டவராக மாணவர்கள் காணப்படுதல் வேண்டும். இது சிறந்த பிரஜையாக அவர்கள் மாறுவதற்கு பெரிதும் உதவுகிறது. மாணவர்கள் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் நேர்மையாக பயன்படுத்தி தமது திறமைகளை வழிகாட்டும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும்.

    மாணவர்கள் பாடசாலை சட்டதிட்டங்களையும், அரசியல் சட்ட திட்டங்களை அறிந்து அவற்றிற்கு மதிப்பளித்து அதற்கு உட்பட்டு நடக்கும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும். சமத்துவ பண்பு உடையவராக காணப்படுதல் மாணவர்களிடம் காணப்பட வேண்டிய முக்கியமான பண்புகளில் ஒன்றாகும்.

    நேரமுகாமைத்துவம் என்பது கல்வி பயிலும் மாணவர்களிடையே இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாக காணப்படுகிறது.

    மாணவர்கள் தமது அனைத்து வேலைகளை சரிவர திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும் தன்மை கொண்டவராக காணப்படுதல் வேண்டும். சிறந்த மாணவன் தம்மை விட வயதில் மூத்தவர்கள், இளையவர்கள், வயோதிபர்கள் ஆகியோர்களுக்கு சரியான முறைகளில் மதிப்பளித்து உதவிகள் புரியும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும்.

    மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. பிறருடன் பேசும் விதம், சமூகத்தில் நடந்து கொள்ளும் விதம், கலாசாரம், நடத்தை என்று அனைத்து விஷயங்களிலும் ஒழுக்கப் பண்பு உடையவர்களாக காணப்படுதல் வேண்டும்.

    • மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • இதற்கான டெபாசிட் தொகையை மாணவர்களே திரட்டி பணம் செலுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் நிறைவடைகிறது. ஆற்றிங்கல் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், பழவங்காடி கணபதி கோயிலில் வழிபட்ட பின், தனது வேட்புமனுவை முரளீதரன் இன்று தாக்கல் செய்தார்.

    அதற்கான டெபாசிட் தொகையை உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் செலுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

    ரஷியா, உக்ரைன் போரின்போது அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு தாயகம் திரும்பி வர உதவியது. வெளியுறவுத்துறை இணை மந்திரியாக முக்கிய பங்காற்றிய முரளீதரனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை மாணவர்கள் செலுத்தினர்.

    • அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், 4 முதல் 9 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு, ஏப்ரல் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு, 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உருது பள்ளிகளுக்கு மட்டும் அறிவித்த விடுமுறையை, அனைத்து பள்ளிகளுக்குமாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்
    • குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்

    சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.

    இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.

    இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

    • 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாளை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்! அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை நம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தேர்வு மையங்களுக்கு முன்கூட்டியே வந்து, வினாத்தாள்களை விடாமுயற்சியுடன் படித்துவிட்டு, முதலில் எளிதான கேள்விகளுடன் தொடங்கவும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம்; பதில்கள் பல சமயங்களில் ஒரு மனதைக் கொண்டு வரும்.

    அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நம் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
    • ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

    வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.

    அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.

    இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.

    இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
    • ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

    வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.

    அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.

    இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.

    இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள்.
    • ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    புதுடெல்லி:

    தேசிய படைப்பாளர்கள் விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடந்தது. முதல் முறையாக இவ்விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

    சிறந்த கதை சொல்லல் விருது, ஆண்டின் பிரபல படைப்பாளி, பசுமை சாம்பியன் விருது, சமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளி, மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளி, தூய்மை தூதர் விருது, கல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளி உள்பட 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் விருதுகளை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:-

    இன்று நீங்கள் அனைவரும் இங்கு கூடி இந்தியாவின் எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்று ஆலோசித்துள்ளீர்கள். காலம் மாறும் போது, ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் போது, அதற்கு ஏற்ப மாற்றியமைப்பது ஒவ்வொரு நாட்டின் பொறுப்பாகும்.

    அந்த பொறுப்பை இன்று பாரத மண்டபத்தில் இந்தியா நிறைவேற்றுகிறது. டேட்டா புரட்சியில் இருந்து மலிவான மொபைல் போன்கள் வரை உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை உருவாக்கி உள்ளது.

    இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் பெருமை, டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்கும் இளைஞர்களுக்குச் சேரும்.

    நான் மாணவர்களுடன் தேர்வு பற்றிய விவாதம் நடத்துவது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பலர் கேலி செய்கிறார்கள். பிரதமர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என்று நினைக்கிறார்கள்? எனக்குத் தெரியும். ஒரு சுற்றறிக்கையை அனுப்புவதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கையை என்னால் உருவாக்க முடியாது.

    ஆனால் நான் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்தை தவறாமல் செய்கிறேன்.

    இந்தியா, அதன் கலாச்சாரம், பாரம்பரியம் பற்றி உலகத்துடன் கொள்ள 'இந்தியாவில் உருவாக்கம்' இயக்கத்தைத் தொடங்குவோம். பெண்கள் சக்தியை உள்ளடக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுமாறு படைப்பாளிகளை கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
    • பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு கடந்த நவம்பா் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, பொதுத்தோ்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்விமாவட்ட அளவில் மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி, ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்துக்கு 40 போ் வீதம் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை வசதி கொண்ட பள்ளிகளை மையங்களாகத் தோ்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும்.

    தினந்தோறும் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    வாரந்தோறும் சனிக் கிழமை திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×