search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை சம்பவம்"

    • லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.
    • காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்.

    மத்திய பிரதேசத்தில் ஓடும் சரக்கு லாரியில் இருந்து மூன்று பேர் பொருட்களை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் தேவாஸ்- ஷாஜாப்பூர் வழித்தடத்திற்கு இடையே சரக்கு லாரியில் இருந்து சிறிது தூரத்தில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளார்.

    அந்த வீடியோவில், சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

    அப்போது, பின்னாள் பைக்கில் வந்த நபர் அவரது இரண்டு கூட்டாளியின் உதவியுடன் ஓடும் நிலையிலேயே பைக்கில் இருந்து லாரியில் ஏறுகிறார். இதேபோல், மற்றொரு நபரும் லாரியில் ஏறி இருவரும் சரக்குகளை மூடியிருந்த தார்பாயை கிழிக்கின்றனர்.

    பின்னர், லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.

    அதன்பிறகு, இருவரும் லாரியில் இருந்து இறங்கி, அந்த நபர் ஓட்டி வந்த பைக்கின் பின் இருக்கையில் கவனமாக இறங்கி அங்கிருந்து தப்பினர்.

    லாரி நகர்ந்ததும், சாலையில் கிடந்த சரக்கு மூட்டைகளை எடுக்க பைக்கை திருப்பினர். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தின் மக்சி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி பீம் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

    • சி.சி.டி.வி காமிரா பதிவை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • கதவை உடைத்து கைவரிசை காட்டிய மர்ம மனிதன் யார்?

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையில் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பிறகு நேற்று காலை பணியாளர்கள் பணிக்கு வந்தனர். மேல்நிலைப்பள்ளிக்கு வந்தவர்கள் கதவை திறந்ததும் பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். கண்காணிப்பு காமிராவும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார். மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சி.சி.டி.வி. காமிரா பதிவு களை கைப்பற்றி ஆய்வு செய்த போது, மர்ம மனிதன் ஒருவன், இரும்பு கம்பியால் கதவு தாழ்ப்பாளை உடைத்து திறப்பதும் தலைமை ஆசிரியர் அறை யில் உள்ள பீரோவை திறப்பதும் பதிவாகி இருந்தது. அங்கு ஏதும் கிடைக்காததால் தொடக்கப் பள்ளிக்கும் மர்ம மனிதன் சென்றுள்ளான். அங்கும் எதுவும் கிடைக்காததால் கண்காணிப்பு காமிராவை சேதப்படுத்தி விட்டு சென் றுள்ளதும் தெரியவந்தது.

    பள்ளிக்கூடத்திற்குள் கொள்ளையன் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப் பள்ளியில் உள்ள குடிநீர் குழாய்களை மர்ம நபர் உடைத்து எடுத்து சென்ற சம்பவம் நடந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் இதுவரை திருடர்கள் யார்? என்பது கண்டு பிடிக்கப்படாமலேயே உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் 2 பள்ளிகள் மற்றும் அதன் வளாகத்தில் 9 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இருப்பினும் மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதும் கண் காண்கணிப்பு காமிரா சேதப்படுத்தப்பட்டு இருப்பதும் அந்த பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. தற்போது காமிரா வில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×