என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
- இந்தியா உடனான அமெரிக்க உறவு வலுவாக உள்ளது என்றார் அதிபர் ஜோ பைடன்.
வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மேலும், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். அப்போது அதிபர் ஜோ பைடன், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்போன்ஸ் ஆகியோரை அதிபர் ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார்.
அதன்பின், குவாட் அமைப்பின் தலைவர்கள் 4 பேரும் சந்தித்து ஒன்றாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தொடர்ந்து பிரதமர் மோடி அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதற்கிடையே, அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்.
இந்நிலையில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா உடனான அமெரிக்காவின் உறவு வலுவானதாக உள்ளது. இருவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும் போதெல்லாம், புதிய விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கண்டறிகிறோம். இன்றும் அதில் எந்த வித்தியாசமும் இல்லை என பதிவிட்டுள்ளார்.
- குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார்.
- பிலடெல்பியா விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.
குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தச் சந்திப்பு மிக பயனுள்ளதாக இருந்தது. பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்தார்.
- குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
- பிலடெல்பியா விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது.
அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க நேரப்படி 21-ம் தேதி (இன்று) பங்கேற்கிறார்.
இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
அடுத்த நாள் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 23-ம் தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்தப் பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
இந்நிலையில், குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இரவு அமெரிக்கா சென்றடைந்தார். பிலடெல்பியா விமான நிலையத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி மகிழ்ந்தார்.
- இந்தியத் தூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
- இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் அலுவலக வளாகத்தில் கிடந்து உள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து இந்திய தூதரகம் கூறும்போது, இந்தியத் தூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அவரது உடலை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக அனைத்து ஏஜென்சிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை. இந்த துயர நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் குடும்பத்தினருடன் உள்ளன என்று தெரிவித்தது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் டிரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவாக உள்ளனர்
- ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுடன் இஸ்ரேல் நாளுக்கு நாள் பகையை வளர்த்து வருகிறது
நவம்பர் 5 ஆம் தேதி அமரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை பிரச்சாரங்களில் இணையத்திலும் கடுமையாக விமர்சித்து வரும் டிரம்ப் உலக அரசியலில் அமெரிக்கா பின் தங்கியுள்ளதாகக் கூறி வருகிறார்.
இந்நிலையில் தான் இந்த தேர்தலில் தோற்றால் அதற்கு அமெரிக்க யூதர்கள் தான் பாதி காரணமாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். வாஷிங்டன் நகரில் நேற்றய தினம் நடந்த இஸ்ரேலிய அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய டிரம்ப், கமலா ஹாரிஸ் இந்த தேர்தலில் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். அதற்கு கமலாவுக்கு வாக்களித்த யூதர்களே பாதி காரணம்.
ஏனெனில் அவர்கள் எப்போதும் ஜனநாயகவாதிகளுக்கே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால் கமலா யூதர்களை வெறுப்பவராக இருக்கிறார். அமெரிக்காவில் யூதர்களின் வாக்கு 40 சதவீதம் உள்ள நிலையில் நான் தோற்றால் அதற்கு பாதி காரணம் யூதர்கள்தான் என்று தெரிவித்த அவர் முந்தைய தேர்தல்களில் ஜனநாயகவாதிகளுக்கே யூதர்கள் அதிக வாக்களித்த புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டார்.
மேலும் சமீபத்தில் அமெரிக்க யூதர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 65 சதவீத யூதர்களும் டிரம்புக்கு 34 சதவீத யூதர்களும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுடன் நாளுக்கு நாள் பகையை வளர்த்து வருவதும் கவனிக்கத்தக்கது.
- பாலிவுட் நடிகையாக வேண்டும். யுனிசெஃப் (UNICEF) தூதராக வேண்டும் என வெற்றி பெற்றவர் தெரிவித்தார்.
- சுரிநாமில் இருந்து கலந்து கொண்ட லிசா அப்தியோல்ஹாக் 2-வது இடம் பிடித்தார்.
இந்தியாவிற்கு வெளியில் வசிக்கும் இந்தியர்களுக்கான உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டி நடத்தப்பட்டது. இதில் அமெரிக்காவில் வசித்து வரும் கம்ப்யூட்டர் தகவல் சிஸ்டம் (Computer Information System) மாணவி த்ருவி பட்டேல் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள எடிசனில் நடைபெற்ற இந்த உலகளவிலான 2024 மிஸ் இந்தியா போட்டியில் த்ருவி பட்டேல் வாகை சூடிய நிலையில், சுரிநாமில் இருந்து கலந்து கொண்ட லிசா அப்தியோல்ஹாக் 2-வது இடம் பிடித்தார். நெதர்லாந்தில் இருந்து வந்த மாளவிகா ஷர்மா 3-வது இடம் பிடித்தார்.
முதல் இடம் பிடித்த த்ருவி பட்டேல் "பாலிவுட் நடிகையாக வேண்டும். யுனிசெஃப் (UNICEF) தூதராக வேண்டும்" என தனது ஆசைகளை வெளிப்படுத்தினார்.
திருமணம் முடிந்தவர்கள் பிரிவில் டிரினிடாட் அண்டு டொபாகோவில் இருந்து வந்திருந்த சுஆன் மவுட்டெட் பட்டம் வென்றார். இங்கிலாந்தில் இருந்து சென்றிருந்த ஸ்னேகா நம்பியார் 2-வது இடமும், பவன்திப் கவுர் 3-வது இடத்தையும் பிடித்தார்.
டீன் பிரிவில் (Teen category) குவாதலூப்பு என்ற கரிபியன் தீவில் இருந்து வந்த சியாரா சுரேத் பட்டம் வென்றார். நெதர்லாந்தில் இருந்து வந்த ஷ்ரேயா சிங் 2-வது இடமும், சுரிநாமில் இருந்து வந்திருந்த ஷ்ரதா தெட்ஜோ 3-வது இடமும் பெற்றனர்.
இந்த அழகு போட்டிகள் நியூயார்க்கில் உள்ள இந்திய விழாக்குழு (India Festival Committee) சார்பில் நடத்தப்பட்டது. இந்த அழகு போட்டி திருவிழா 31-வது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.
- அங்கு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.
வாஷிங்டன்:
உக்ரைன், ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராகப் போரிடும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுத்த வாரம் அமெரிக்கா சென்று, அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்கிறார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை வரும் 26-ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். துணை அதிபர் ஹாரிஸ் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியை தனித்தனியாகச் சந்திப்பார்.
உக்ரைனின் மூலோபாய திட்டமிடல் மற்றும் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்க ஆதரவு உட்பட ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரின் நிலை குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள்.
இந்தப் போரில் உக்ரைன் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நிற்பதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அதிபரும், துணை அதிபரும் வலியுறுத்துவார்கள் என தெரிவித்துள்ளது.
- கடத்தல், வன்முறை மூலம் பெண்களை அடிபணிய வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு.
- 1000 பேர் ஆயில் பாட்டிகள் சீன் டிடி கோம்ப்ஸ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது என அரசு தரப்பில் குற்றச்சாட்டு.
அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ். இவர் மீது பாலியல் கடத்தல் மற்றும் பாலியல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்தே வழக்கை எதிர்கொள்ளவதாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நீதிபதி மறுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும். தனது மீதான குற்றச்சாட்டை சீன் டிடி கோம்ப்ஸ் மறுத்துள்ளார்.
சீன் டிடி கோம்ப்ஸ் பெண்களை மயக்கி அல்லது வற்புறுத்தி ஆண் பாலியல் தொழிலாளர்களுடன் உடலுறவு கொள்ள வைத்துள்ளார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. சில நேரம் பெண்களை கடத்தி வந்து அவர்களுடன் உடலுறவு வைக்க தூண்டியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
சட்டவிரோதமான போதைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும் "Freak Off" நிகழ்வுடன் இந்த குற்றச்சாட்டு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
உடலுறவு மோசடியில் ஈடுபட்டதுடன் சட்டவிரோதமான பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் நடத்தைகள் அரங்கேறியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் அவரது வீடுகளில் சோதனை செய்தபோது ஆயிரம் பேபி ஆயில் மற்றும் லூப்ரிகேன்ட்ஸ்கள் போன்ற வினோத பொருட்கள் உடலுறவுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர் வன்முறை மற்றும் தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதை உறுதி செய்வதாக இருக்கிறது என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பல நாட்கள் உடலுறுவு வைத்துக் கொள்ள சீன் டிடி கோம்ப்ஸ் பெரும்பாலான பெண்களை வற்புறுத்தியுள்ளார். அவர்களுடைய பெயர்களுக்கு கலங்கம் ஏற்படுத்துதல், நிதி ஆதாரம் தொடர்பாக மிரட்டல் ஆகியவை மூலமும் பெண்களை மிரட்டியுள்ளார்.
"Freak Off" நிகழ்ச்சிகளால் காயம் அடைந்தவர்கள் குணம் அடைய பல நாட்கள் அல்லது பல வாரங்கள் எடுத்துக்கொண்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன் டிடி கோம்ப்ஸ் மீது ஏற்கனவே காதலி மற்றும் பெண்கள் பல பலர் புகார் அளித்துள்ளனர்.
டிடியின் காதலி கசாண்ட்ரா வென்ச்சுரல், டிடி தனது அதிகார நிலையைப் பயன்படுத்தி அவளை ஒரு காதல் மற்றும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தினார். டிடி அடிக்கடி அவளை அடித்து உதைத்து, கறுப்புக் கண்கள், காயங்களுடன் இருந்ததாக அவள் சொன்னாள். இந்த வழக்கு 2023-ல் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் பல பெண்கள் முன் வந்து, டிடியின் ஃப்ரீக் ஆஃப் அமர்வுகளைப் பற்றிக் கூறி, பெண்கள் பல நாட்கள் உடலுறவு கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டினர்.
இந்த ஆண்டு மே மாதம், 2016 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் ஹோட்டலில் டிடி தனது காதலி காசியை எப்படித் தாக்கினார் என்பதைக் காட்டும் வீடியோ கசிந்தது. இதற்கு டி மன்னிப்பு கேட்டார்.
டிடியின் கூட்டாளிகள் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்ததாகவும், பாலியல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், கோகோயின், மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஆக்ஸிகோடோன் உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்ததாகவும், பார்ட்டிக்காரர்களை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி அவர்களை கீழ்ப்படிதலுடன் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
- ரியான் வெஸ்லி ரூத் கோல்ப் மைதானத்தில் இருந்து தப்பி ஓடும்போது ஒரு டிஜிட்டல் கேமரா, கைத்துப்பாக்கி உள்ளிட்டவை அடங்கிய பையை விட்டு சென்றார்.
- ரியான் வெஸ்லி ரூத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், அவருடைய கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரை பகுதியில் உள்ள கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது டிரம்ப் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் மர்ம நபர் ஒருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் டிரம்பை நோக்கி வேலி வழியாக குறிபார்த்துக்கொண்டு இருந்தார்.
இதை கண்ட டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். எனினும் சற்று நேரத்துக்குள்ளாக போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த ரியான் வெஸ்லி ரூத் (வயது 58) என்பதும், அவர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் என்பதும் தெரிய வந்தது.
எனினும் எதற்காக அவர் டிரம்பை கொலை செய்ய முயற்சித்தார் என்பது தெரியாத நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே ரியான் வெஸ்லி ரூத், டிரம்பை கொலை செய்வதற்காக சுமார் 12 மணி நேரம் கோல்ப் மைதானத்தில் காத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுப்பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
ரியான் வெஸ்லி ரூத் கோல்ப் மைதானத்தில் இருந்து தப்பி ஓடும்போது ஒரு டிஜிட்டல் கேமரா, கைத்துப்பாக்கி உள்ளிட்டவை அடங்கிய பையை விட்டு சென்றார். அந்த பையில் சில உணவுகளும் இருந்தன. இதன் மூலம் அவர் வெகு நேரம் கோல்ப் மைதானத்தில் காத்திருந்தது தெரிந்தது. அந்த வகையில் அவர் கோல்ப் மைதானத்தில் உள்ள ஒரு மரத்துக்கு அடியில் கிட்டத்தட்ட 12 மணி நேரமாக காத்திருந்தது அவரது செல்போன் தரவுகள் மூலம் தெரியவந்தது.
டிரம்பின் வருகைக்காக காத்திருத்த ரியான் வெஸ்லி ரூத், அவர் தனது பார்வைக்கு நேராக வந்ததும் துப்பாக்கியால் சுடுவதற்கு தயாரானார். நல்வாய்ப்பாக பாதுகாப்பு படையினர் அவரது சதியை முறியடித்தனர்.
ரியான் வெஸ்லி ரூத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், அவருடைய கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் ரியான் வெஸ்லி ரூத்தின் சமூக வலைத்தள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் ரியான் வெஸ்லி ரூத் கடந்த காலங்களில் சமூக வலைத்தளத்தில் டிரம்பை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டது தெரியவந்துள்ளது. கொலை முயற்சிக்கான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
- அவர்களின் சந்திப்பு பற்றிய கூடுதல் விவரங்களை கூறவில்லை.
- குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நேற்று மிச்சிகனில் பிரசாரத்தில் ஈடுபட்ட குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேசுகையில், அடுத்த வாரம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கூறினார். மேலும், பிரதமர் மோடி "அற்புதமானவர்" என்றும் அவரை அடுத்த வாரம் சந்திப்பேன் என்று கூறினார். ஆனால் அவர்களின் சந்திப்பு பற்றிய கூடுதல் விவரங்களை கூறவில்லை.
பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய அமெரிக்க அதிபராக இந்தியா வந்தபோது சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப் மீது இதுவரை இரு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
- டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது இதுவரை இரு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
துப்பாக்கிச்சூடு முயற்சி முடிந்த இரண்டே நாட்களில் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபரான டிரம்பிடம் தொலைபேசியில் பேசினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இது ஒரு சுமூகமான மற்றும் சுருக்கமான உரையாடலாக இருந்தது என தெரிவித்துள்ளது.






