என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று அமெரிக்காவில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
    • வீடியோ வாயிலாகப் பூமியில் உள்ளோருக்கு தாங்க்ஸ் கிவ்விங் வாழ்த்து சொல்லியிருக்கிறார்

     நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர். 8 நாட்களில் மீண்டும் பூமிக்குத் திரும்புவதுதான் திட்டம். ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சுமார் ஐந்து மாதங்களுக்கு மேல் அங்கேயே தங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

    இடையில் சுனிதாவின் உடல் எடை மோசாமான அளவு குறைந்ததாக செய்திகள் பரவின. ஆனால் அது உண்மை இல்லை என பின்னர் நாசா மறுத்தது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே தாங்க்ஸ் கிவ்விங் கொண்டாடியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ் .

    அமெரிக்காவில் வருடத்தின் விவசாய அறுவடைக்கு நன்றி சொல்லும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் அன்று அமெரிக்காவில் நன்றி செலுத்துதல் [Thanks giving] நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று தாங்க்ஸ் கிவ்விங் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் வீடியோ வாயிலாகப் பூமியில் உள்ளோருக்கு தாங்க்ஸ் கிவ்விங் வாழ்த்து சொல்லியிருக்கிறார். அந்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

    தாங்க்ஸ் கிவ்விங் விருந்தில் சுனிதா மற்றும் குழுவினருக்கு மசித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள்,  வான்கோழி கறி [smoked turkey], கிரான்பெர்ரி, பச்சை பீன்ஸ், ஆப்பிள் கோப்லர், காலான்கள் உணவாக வழங்கப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி வாக்கில் பூமி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
    • டிரம்ப் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுகர்பெர்க்கை சந்தித்து பேசினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அதிபராக தேர்வு ஆகியிருக்கும் டிரம்ப் தற்போது, தனது அமைச்சரவையில் இடம்பெறுவர்களை அறிவித்து வருகிறார். அதேபோல, அமெரிக்க தொழில் அதிபர்களைச் சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதியின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், மார்க் ஜுக்கர்பெர்க் டிரம்பின் பொருளாதார திட்டங்களை ஆதரிக்க விரும்புகிறார். எனவே தனது உறவை புதுப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என தெரிவித்தார்.

    ஏற்கனவே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிரம்பை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

    • மெக்சிகோ வழியாக இடம்பெயர்வதை தடுக்க ஒப்புக்கொண்டார்.
    • தெற்கு எல்லையை மூடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்த லில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே மெக்சிகோ மற்றும் கனடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தலா 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இரு நாடுகளில் இருந்து போதை பொருட்கள் கடத்தல் மற்றும் அனைத்து சட்ட விரோத குடியேற்றம் நடக்கிறது என்றும் அதை அந்த நாடுகளின் அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வரை இந்த வரிவிதிப்பு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார். இதற்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க மெக்சிகோவுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நான் மெக்சிகோ அதிபருடன் பேசினேன். அவர் மெக்சிகோ வழியாக இடம்பெயர்வதை தடுக்க ஒப்புக்கொண்டார்.

    இது மிகவும் பயனுள்ள உரையாடலாக இருந்தது. எங்கள் தெற்கு எல்லையை மூடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    டிரம்புடன் பேசியதை மெக்சிகோ அதிபர் கிளா டியா ஷீன்பாம் உறுதிப் படுத்தினார். அவர் கூறும் போது, இது ஒரு சிறந்த உரையாடல். இடம்பெயர்வு பிரச்சினைகளில் மெக்சி கோவின் நிலை பற்றி நாங்கள் விவாதித்தோம்.

    சட்டவிரோதமாக நுழைப்பவர்கள் எங்கள் எல்லையை அடையவில்லை என்று நான் அவரிடம் கூறினேன். ஏனென்றால் அவர்களை மெக்சிகோ உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    எங்கள் இறையாண்மையின் கட்டமைப்பிற்குள், பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும், போதை பொருள் நுகர்வை தடுக்க நாங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம் பற்றியும் பேசினோம் என்றார்.

    • இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    வங்கதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ண தாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது உள்பட தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட், 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.

    அப்போது அவரை விடுதலை செய்யக்கோரி கோர்ட் முன் ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில் அரசு வக்கீல் சைபுல் இஸ்லாம் ஆரிப் அடித்துக் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் வெளியாகவில்லை. இக்கொலையை கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், ஆப்பிரிக்கா- அமெரிக்க நடிகை மற்றும் பாடகியான மேரி மில்பென் இந்து துறவி கைது செய்யப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மேரி பில்பென் கூறுகையில், சின்மோய் கிருஷ்ண தாஸின் சிறைவாசம் மற்றும் வங்கதேசத்தில் தீவிரவாதிகளால் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் உலகத் தலைவர்களால் இப்போது கவனிக்கப்பட வேண்டும். மத சுதந்திரத்தையும், உலகளவில் உள்ள அனைத்து விசுவாசிகளின் பாதுகாப்பையும் நாம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • ஜே.பட்டாச்சார்யா 1968-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர்.
    • அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சித்த இவர், டிரம்ப் பிரசார குழுவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், தனது நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள அதிகாரிகளை நியமித்து வருகிறார்.

    இந்த நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே. பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

    இதுகுறித்து ஜே.பட்டாச்சார்யா கூறும்போது, அதிபர் டிரம்ப் என்னை தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக நியமித்ததன் மூலம் நான் பெருமையடைகிறேன். பணிவாக இருக்கிறேன். அமெரிக்க அறிவியல் நிறுவனங்களை நாங்கள் சீர்திருத்துவோம். அதனால் அவர்கள் மீண்டும் நம்பிக்கைக்கு தகுதியானவர்கள். அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற சிறந்த அறிவியலின் பலன்களைப் பயன்படுத்துவோம் என்றார்.

    ஜே.பட்டாச்சார்யா 1968-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். 1997-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்றார். 2000-ம் ஆண்டில் ஸ்டான்போர்டின் பொருளாதாரத் துறையிலிருந்து முனைவர் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைப் பேராசிரியராக பணியாற்றினார். அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சித்த இவர், டிரம்ப் பிரசார குழுவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2020 ஆம் ஆண்டு டிரம்பை தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் இந்த தடையை நீக்கினா
    • திருநங்கை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பதைத் தடுப்பார்

    பழமைவாதியான டொனால்டு டிரம்ப் LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார். கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த அவர், ராணுவத்தில் திருநங்கைகள் சேருவதற்கு தடை விதித்தார்.

    அவர்களுக்கு எனத் தனியாகக் கவனம் மற்றும் ஏற்படும் செலவு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவர் இதை செய்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு டிரம்பை தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் இந்த தடையை நீக்கினார். இப்போது பிரச்சனை என்னவென்றால் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

     

    அவர்களைக் குறிவைத்து டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்க சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆட்சிக் காலத்தை போலவே ராணுவத்தில் திருநங்கைகள் சேர டிரம்ப் தடை விதிக்க உள்ளதாக அவரது அதிகார வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

    உத்தரவைத் தயாரித்து வருவதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஏற்கவே ராணுவத்தில் உள்ள 15,000 திருநங்கைகள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

     

    இதுதவிர்த்து பாலினத்தை உறுதிப்படுத்தும் இதுதவிர்த்து சுகாதாரப் பாதுகாப்பை திருநங்கைகள் அணுகுவதைத் தடை செய்தல், பள்ளியில் திருநங்கை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பதைத் தடுப்பது உள்ளிட்ட பிற்போக்கான நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடும். 

    • சிஇஓ தன்னுடன் சேர்த்து 99 பேரை பணி நீக்கம் செய்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
    • 111 பேரை மீட்டிங்கிற்கு சிஇஓ அழைத்துள்ளார்,

    அமெரிக்காவில் இயங்கி வரும் இசை கருவிகளை விற்கும் நிறுவனம் ஒன்றில் மீட்டிங் வராத 99 ஊழியர்களை சிஇஓ அதிரடியாக தூக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதில் ஒருவர் தான் வேலைக்கு சேர்ந்த ஒரு மணி நேரத்தில் வேலையை விட்டு தூக்கப்பட்டதாக Reddit சமூக வலைத்தளத்தில் புலம்பி தள்ளியுள்ளார். அவரது பதிவில், தான் இன்டர்ன்ஷிப்க்கு சேர்ந்த 1 மணி நேரத்தில் நிறுவனத்தின் சிஇஓ தன்னுடன் சேர்த்து 99 பேரை பணி நீக்கம் செய்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    நிறுவனத்தில் அன்றைய தினம் 111 பேரை மீட்டிங்கிற்கு சிஇஓ அழைத்துள்ளார், ஆனால் 11 பேர் மட்டுமே மீட்டிங்குக்கு வந்துள்ளனர். இதனால் கடுங்கோபமடைந்த சிஇஓ அனைவரையும் அதிரடியாகத் தூக்கினார்.

    ஆனால் தனக்கு இந்த மீட்டிங் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று அந்த ஒரு மணி நேர பேர்வழி நொந்துகொண்டுள்ளார்.

     

    • நீதிபதி, டிரம்ப் மீதான குற்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    • அதிபர் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக முறைகேடு வழக்கு.

    அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2020-ம் ஆண்டு அதிபர் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அதிபர் தேர்தல் முடிவை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் கோரிக்கை விடுத்திருந்தார்.

    அவர் அளித்த மனுவில், அதிபரிடம் விசாரணை நடத்த அமெரிக்க நீதித் துறைக் கொள்கையில் அனுமதி இல்லை என தெரிவித்து இருந்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிரம்ப் மீதான குற்ற வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சமீபத்தில், டிரம்ப் மீதான அரசின் ரகசிய ஆவணங்களைச் சேமித்து வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கனடா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோமாக ஊடுருவல் அதிகரிப்பு என குற்றச்சாட்டு.
    • ஊடுருவல் காரணமாக போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாகி உள்ளதாகவும் குற்றச்சாட்டு.

    கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு டிராம்ப் தெரிவித்துள்ளார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் டிரக்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களால் குற்றம் மற்றும் டிரக்ஸ் (போதைப்பொருள்) ஆகியவற்றை கொண்டு வந்துள்ளனர். அதை அனைவரும் அறிவர். இதற்கு முன்னதாக இதுபோன்று நடந்தது கிடையாது.

    ஜனவரி 20-ந்தேதி என்னுடைய முதல் நிர்வாக உத்தரவில் மெக்சிகோ, கனடா பொருட்களுக்கு 20 சதவீதம் வரிவிதிப்பு. அத்துடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    பொதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் இண்டும் நிறுத்தப்படும் வரை இந்த வரி விதிப்பு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் வெற்றியாளர் முடிவு செய்யப்படவில்லை.
    • இன்னும் 3 லட்சம் வாக்கு எண்ணப்பட வேண்டும்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். இதற்கிடையே அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட (3.9 கோடி பேர்) கலிபோர்னியா மாகாணத்தில் செனட் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மைக்கேல் ஸ்டீல், ஜனநாயகக் கட்சி சார்பில் டெரெக் டிரான் போட்டியிட்டனர். தேர்தல் நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் வெற்றியாளர் முடிவு செய்யப்படவில்லை. இன்னும் 3 லட்சம் வாக்கு எண்ணப்பட வேண்டும்.

    இது குறித்து, எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் கூறும்போது, இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு விட்டன. கலிபோர்னியாவில் இன்னும் எண்ணப்படுகின்றன என்று தெரிவித்து உள்ளார்.

    கலிபோர்னியாவில் அதிகளவில் தபால் ஓட்டுகள் பதிவானது. இதில் அந்த ஓட்டுச்சீட்டை அனுப்பியது உண்மையான வாக்காளர்தானா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தபால் வாக்குச் சீட்டும் தனிப்பட்ட சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதனால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • தேர்தலில் வெற்றிப் பெற்ற டிரம்ப் தனது தலைமையில் அமைய இருக்கும் புதிய அரசில் எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார்.
    • தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து ரூ.2.19 லட்சம் கோடி உயர்ந்ததாக கூறப்படுகிறது.

    வாஷிங்டன்:

    டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பிறகு அவரது சொத்து மதிப்பு இன்னும் உயர்ந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த எலான் மஸ்க், டிரம்பின் பிரசாரத்துக்கு பல ஆயிரம் கோடி நிதியையும் வழங்கினார்.

    இதன் மூலம் அவர் டிரம்புக்கு மிகவும் நெருக்கமான நபராக மாறினார். தேர்தலில் வெற்றிப் பெற்ற டிரம்ப் தனது தலைமையில் அமைய இருக்கும் புதிய அரசில் எலான் மஸ்குக்கு முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். இதன் காரணமாக எலான் மஸ்கின் நிறுவனங்களின் பங்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. இதனால் அவரது சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் மட்டும் எலான் மஸ்கின் சொத்து ரூ.2.19 லட்சம் கோடி உயர்ந்ததாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் தேர்தலுக்கு பிறகு அவரது சொத்து மதிப்பு 29 லட்சம் கோடியை கடந்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவர் உலக வரலாற்றிலேயே பெரும் பணக்காரர் என்கிற பெருமையை பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    • கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
    • அகமதாபாத்தில் உள்ள கவுதம் அதானியின் வீடு மற்றும் அவரது உறவினர் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் அதானி (வயது 62). இவர் இந்தியாவின் 2-வது பணக்காரராகவும் உலக பணக்காரர்கள் பட்டியலில் 17-வது இடத்திலும் உள்ளார்.

    துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் கவுதம் அதானி ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி மின்சார வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ஆந்திரா, ஜம்மு- காஷ்மீர் சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில், தொழிலதிபர் கவுதம் அதானிக்கு அமெரிக்காவின் பங்குகள் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

    ரூ.2,200 கோடி லஞ்ச புகார் தொடர்பாக அதானி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் பங்குகள் பரிவர்த்தனை ஆணையம் சம்மனில் குறிப்பிட்டுள்ளது.

    அதன்படி, அகமதாபாத்தில் உள்ள கவுதம் அதானியின் வீடு மற்றும் அவரது உறவினர் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    ×