என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
    • நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி 20-ந்தேதி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதில் அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நடவடிக்கையும் அடங்கும். அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு அமைச்சகங்களில் சில துறைகளின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் டிரம்பின் நிர்வாக உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துறையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்து கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி அவரது பதவியை 'குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்' என்று மாற்றியது. ஆனால் இதை டிரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நீலா ராஜேந்திராவை பணிநீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா தனது உயர்மட்ட விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீலா ராஜேந்திராவின் வெளியேற்றம் குறித்து மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தது.

    அதில், நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தில் பணிபுரியவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஏற்படுத்திய நீடித்த பயன்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

    நீலா ராஜேந்திரா பல ஆண்டுகளாக நாசாவில் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார். இதன் முதன்மை நோக்கம் பெண்களையும் சிறுபான்மையினரையும் அமைப்பில் பணியமர்த்துவதாகும்.

    • 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
    • காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டன.

    அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

    உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.

    இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலை சஃபாரி பூங்காவில் ஆப்பிரிக்க யானைகளின் கூட்டம் தங்கள் குட்டிகளை பாதுகாக்க செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நிலஅதிர்வை உணர்ந்த யானைக் கூட்டத்தின் மூத்த யானைகள் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, கூட்டமாக தங்கள் குட்டிகளை சூழ்ந்து பாதுகாப்பு அரணாக நின்ற காட்சிகள் மெய்சிலர்க வைப்பதாக உள்ளது.

    இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டு, அவை முதலில் சிதறி, பின்னர் விரைவாக மீண்டும் ஒன்றுகூடி, ஜூலி மற்றும் மக்யா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளை மூத்த தாய்மார்கள் நட்லுலா, உமங்கானி மற்றும் கோசி ஆகியவை சூழ்ந்து நிற்கின்றன.

    நிலநடுக்கம் நின்ற பிறகும், வயது வந்த யானைகள் தங்கள் பாதுகாப்பு வலயத்தை கலைக்காமல் காதுகளை விரித்து, எச்சரிக்கையாக, பல நிமிடங்கள் அப்படையே நின்றிருந்தன. 

    • மேலும் பல மாற்றங்களை செய்ய வலியறுத்தியதையும் நிராகரித்தது.
    • பல்கலைக் கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி நிறுத்தப்பட்டது.

    அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதை தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாக உத்தரவுக்கு இணங்கப்போவதில்லை என புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது.

    மேலும் பல மாற்றங்களை செய்ய வலியறுத்தியதையும் நிராகரித்தது. இந்த நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரம் கோடி) நிதியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சிவில் உரிமைகள் சட்டங்களை நிலை நிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக் கழகங்களுக்கு நிதி கிடைக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது.

    யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மக்களின் வரிப் பணத்தை விரும்பினால், பல்கலைக்கழகங்கள் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு அர்த்தமுள்ள மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளது.

    • சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
    • நேபாள நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

    உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.

    இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

     இதேபோல நேபாள நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பொருட்களை தயாரிக்க தேவியான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட பலவேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.

    இதற்கு மற்ற நாடுகள் பணிந்த நிலையில் வல்லரசான சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருவரும் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி வருகின்றனர். சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரியும், அமெரிக்க பொருட்கள் மீது சீனா 125 சதவீத வரியும் விதிப்பதாக அறிவித்தன.

    இந்நிலையில் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி உள்ளது.

    இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரில் சீனா ஏற்றுமதிக்கு புதிய நெறிமுறைகளை வகுத்து வருகிறது. ஏற்கனவே கார்கள் முதல் மிசைல்கள் வரை தயாரிக்க தேவியான காந்தங்கள் மற்றும் மூலக்கூறுகளின் ஏற்றுமதி சீன துறைமுகங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.

    சீனா வகுத்து வரும் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தி உட்பட பல நிறுவனங்களின் உற்பத்தி தடைப்படும் என்று கூறப்படுகிறது.

    பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. சமாரியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடீடியம், ஸ்காண்டியம் மற்றும் யட்ரியம் ஆகியவை உட்பட ஏழு வகை நடுத்தர மற்றும் கனரக அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்த சீனா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் ஒரே ஒரு அரிய சுரங்கம் மட்டுமே உள்ளது. அதன் பெரும்பாலான விநியோகம் சீனாவிலிருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க உற்பத்தியைப் பெருமளவில் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
    • அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் கைது செய்யப்பட்டு கைவிலங்குடன் விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வந்த பல இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டனர்.

    30 நாட்கள் கெடு

    அமெரிக்காவில் அந்நியர் பிரிவு சட்டம் 1940 அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் படி 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கி இருக்கும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் முறைப்படி பதிவு செய்யவேண்டும். நீண்ட நாட்களாக இந்த சட்டம் பெயர்அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தார்.

    இந்த சட்டம் கடந்த 11-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டவர்கள் 30 நாட்களுக்குள் தாமாக வெளியேற வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை உடனே உள்துறை பாதுகாப்பு அரசு அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.

    நீங்கள் தாமாக வெளியேறினால் பாதுகாப்பானது. நீங்கள் விரும்பும் விமானத்தில் பயணம் செய்ய சலுகை கிடைக்கும். நீங்களாகவே வெளியேறும் பட்சத்தில் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ள முடியும். நாங்களாகவே வெளியேற்றாமல் நீங்களே வெளியேறினால் எதிர்காலத்தில் சட்டப்படி அமெரிக்காவுக்கு வர முடியம். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு வர நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.

    இந்த முடிவு அமெரிக்காவில் எச்.1-பி மாணவர் விசா பெற்றவர்களை நேரடியாக பாதிக்காது. எச்-1 பி. விசாவில் உள்ள ஒருவர் வேலையை இழந்து இருந்தால் அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    அமெரிக்க அரசின் இந்த அதிரடி உத்தரவு வெளிநாட்டவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

    முன்னதாக அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது.
    • அமெரிக்க பொருட்கள் மீது சீனா 34 சதவீத வரி விதித்தது.

    நியூயார்க்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. இதனால் சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிபர் டிரம்ப் விதித்துள்ள பரஸ்பர வரிகளில் இருந்து ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், இதுவரை 20 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் அரை கடத்திகள் அடிப்படையிலான மின்னணு கருவிகள், தரவுகள் சேமிப்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.

    • அதிபர் ஜோ பைடனால் தொடங்கப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள்.
    • அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஒன்பது இலக்க எண்களாகும்.

    சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வரும் சூழலில் உயிருள்ள 6000 பேரை இறந்தவர்களாக டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களின் சமூக பாதுகாப்பு எண்கள் ரத்து செய்யப்பட்டது. எனவே அவர்கள் தாமாகவே அமெரிக்காவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை.

    தற்போது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட வெவ்வேறு நாட்டை சேர்ந்த 6,000 க்கும் மேற்பட்ட உயிருள்ள குடியேறிகள், முன்னாள் அதிபர் ஜோ பைடனால் தொடங்கப்பட்ட திட்டங்களின் கீழ் தற்காலிகமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் குறிவைக்கப்படுகிறார்கள்.

    இறந்தவர்களாக கருதப்பட்டு அவர்களின் சமூகப் பாதுகாப்பு எண்களை ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் அமெரிக்காவில் வேலை செய்யவோ அல்லது சலுகைகளைப் பெறவோ முடியாது.

    சமூக பாதுகாப்பு எண் என்றால் என்ன?

    இவை அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் தற்காலிக வேலை செய்யும் குடியிருப்பாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான ஒன்பது இலக்க எண்களாகும்.

    இந்த எண்கள் வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உட்பட பல அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

    குடியேறிகளுக்கு பைடன் நிர்வாகத்தால் இந்த சட்டப்பூர்வமாக சமூக பாதுகாப்பு எண்கள் வழங்கப்பட்டன. ஆனால் இப்போது டிரம்ப் நிர்வாகம் இந்த குடியேறிகளின் சமூகப் பாதுகாப்பு எண்களை பறிப்பதன் மூலமும், வங்கிகள் அல்லது பிற அடிப்படை சேவைகளைப் பயன்படுத்துவதை கடினமாக்குவதன் மூலமும் அவர்கள் தாமாக நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் ஏற்பட்டுள்ளது . 

    • ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார்.
    • உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் வருகிற 21ம் தேதி இந்தியா வருகிறார்கள். அவர்கள் 24ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

    ஜே.டி.வான்ஸ் தனது மனைவியும் அமெரிக்கா வின் 2-வது பெண்மணியுமான உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார். உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் சிம்லா, ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். அவர் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜே.டி.வான்ஸ்க்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சமீபத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். அதன்பின் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

    வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த நபராக உள்ள ஜே.டி.வான்சின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

    ஜே.டி.வான்ஸ் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்தாலும் வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் உயா் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வரவுள்ளாா்.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வருகிற 22ம் தேதி சவூதி அரேபியா செல்லும் முன், அவரை வான்ஸ் மற்றும் வால்ட்ஸ் சந்திப்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    • ஒரு சிறிய விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு சிறிய விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விமான விபத்தால் நெடுஞ்சாலையில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்தார்.

    • பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான ராணாவும் கூட்டு சதியில் ஈடுபட்டார்.
    • 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

    தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. இந்நிலையில் நீண்ட போராட்டத்தின் பின் நேற்று அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் 18 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ராணா கை கால்களில் விலங்குடன் நாடுகடத்தப்பட்ட 2 புகைப்படங்களை அமெரிக்க நீதித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

     

     இதற்கிடையே ராணா நாடுகடத்தல் குறித்து வாஷிங்க்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் பேசினார்.

    "2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதில் அவரது பங்கிற்கு நீதியை எதிர்கொள்ள ஏப்ரல் 9 ஆம் தேதி, அமெரிக்கா தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது

    இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரித்து வருகிறது.

    அதிபர் டிரம்ப் கூறியது போல், உலகளாவிய பயங்கரவாதக் கொடுமையை எதிர்த்துப் போராட அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த பிப்ரவரியில் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • இறந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பமும், விமானியும் அடங்குவதாக தகவல் வெளியானது.
    • சிஇஓவும் அவரது குடும்பத்தினரும் சுற்றுலாவுக்காக ஸ்பெயினில் இருந்து அமெரிக்கா வந்திருந்தனர் என்று தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் மேலே செல்லும்போது நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

    லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.

    இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு குடும்பமும், விமானியும் அடங்குவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் உயிரிழந்தவர்கள் Siemens நிறுவனத்தின் ஸ்பெயின் நாட்டு தலைமை நிர்வாக அதிகாரி (CEO) அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மெர்ஸ் காம்ப்ருபி மொண்டல் மற்றும் 4, 5 மற்றும் 11 வயதுடைய அவர்களது மூன்று குழந்தைகளுடன் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

     சம்பவத்தில் 36 வயதான விமானியும் உயிரிழந்தார். சீமென்ஸ் உலகளவில் கிளைகள் கொண்ட பிரபல ஜெர்மானிய பொறியியல் நிறுவனம் ஆகும். கொல்லப்பட்ட சிஇஓவும் அவரது குடும்பத்தினரும் சுற்றுலாவுக்காக ஸ்பெயினில் இருந்து அமெரிக்கா வந்திருந்தனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த தருணத்தின் கடைசி நிமிட வீடியோவும் வெளியாகி உள்ளது.

    ×