என் மலர்tooltip icon

    உலகம்

    • கடந்த ஆண்டு நடந்த இம்ரான் கான் கட்சி போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
    • தொடர்ந்து ஆஜராகாத நிலையில் ஜாமீனில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராக நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானுக்கு ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 4ஆவது முறையாக ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ0இன்சாஃப் கட்சி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில் அலீமா கான் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது 11 பேரில் 10 பேர் ஆஜரான நிலையில், அலீமான கான் மட்டும் ஆஜராகவில்லை. இதனால் 4ஆவது முறையாக வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    மேலும், ராவல் டிவிசன் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பி ஆகியோருக்கு போலி அறிக்கை தாக்கல் செய்ததற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் அலீமா கான் தலைமறைவாக உள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ள ஜெயில் மற்றும் சமூக வலைத்தள சேனல்களில் காணப்பட்டதால் நீதிமன்றம் போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    கடந்த விசாரணையின்போது இன்றைக்குள் அலீமா கானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    • பேருந்துகள் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது நேருக்குநேர் மோதல்.
    • பலர் மயக்கமான நிலையில் இருந்ததால், உயிர்ப்பலி அதிகமாக கணக்கிடப்பட்டது.

    கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று உகாண்டா. இந்த நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரம் குலு. இங்குள்ள நெடுஞ்சாலையில் இன்று வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் 46 பேர் உயிரிழந்தனர்.

    இரண்டு பேருந்துகள் எதிர்எதிர் திசையில் வந்து கொண்டிருந்தன. முன்னாள் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றன. அப்போது இரண்டு பேருந்துகளும் டிரைவர்கள் கட்டுப்பாட்டை இழந்து திடீரென நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. அதேவேளையில் மேலும் இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டன.

    இதில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து ஏற்பட்டதும், பலர் மயக்கமான நிலையில் கிடந்தனர். இதனால் அவர்கள் இறந்ததாக தவறாக கணக்கிடப்பட்டது. இதனால் 63 பேர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 46 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உகாண்டாவில் கோர விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. என்ற போதிலும் கடந்த சில வருடங்களில மோசமான விபத்து இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கவனக்குறைவாக முந்திச் செல்வது, அதிக வேகமாக செல்வது ஆகியவற்றால் மட்டுமே கடந்த ஆணடு நடைபெற்ற விபத்துகளில் 44.5 சதவீதம் விபத்துகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு சாலை விபத்தில் 5144 பேர் உயிரிழந்துள்ளனர். 2023-ல் 4806 பேரும், 2022-ல் 4534 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    • இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இரண்டு வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்றது.
    • இஸ்ரேல்- ஹமாஸ் சண்டை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    இந்நிலையில், காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார்.

    போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.

    • கருங்கடலில் ரஷியாவில் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் டிரோன்களை பயன்படுத்தி வருகிறது.
    • உக்ரைன் தாக்குதலுக்கு பயந்து ரஷியா முக்கிய தளத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடங்களுக்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால், ரஷிய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் உள்ளார். இதனால் சண்டை நீடித்து வருகிறது.

    தற்போது இரு நாடுகளும் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. கருங்கடலில் ரஷிய கப்பல்களை தாக்க, உக்ரைன் கடல் டிரோன்களை (ஆளில்லா விமானம்) பயன்படுத்தி வருகிறது.

    Sea Baby என அழைக்கப்படும் இந்த டிரோன்கள், ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது 1500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 2 ஆயிரம் கிலோ எடை வெடிப்பொருட்களை சுமந்து கொண்டு தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

    இந்த டிரோனை வெளி உலகத்திற்கு உக்ரைன் காட்டியுள்ளது. இலக்கை துல்லியமாக அளிக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    செங்கடலில் உள்ள 11 கப்பல்களை உக்ரைன் டிரோன் மூலம் வெற்றிகரமாக தாக்கியுள்ளது. இதில் போர்க்கப்பல் மற்றும் ஏவுகணை தாங்கிகளும் அடங்கும்.

    உக்ரைன் தாக்குதலால் ரஷியா கிரீமியாவின் செவாஸ்டோபோலிருந்து நோவோரோசிய்ஸ்க் பகுதிக்கு முக்கிய தளத்தை ரஷியா மாற்றியுள்ளது.

    • 2025 ஆம் ஆண்டில் இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் 23% உயர்ந்துள்ளன.
    • கடந்த 3 ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் பங்கு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சத்ய நாதெல்லா பொறுப்பு வகித்து வருகிறார்.

    2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றது முதல் மைக்ரோசாப்ட் வியாபார வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதோடு லின்க்டுஇன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் செனிமேக்ஸ் போன்ற நிறுவனங்களை மைக்ரோசாப்ட் வசதம் கையகப்படுத்தினார்.

    தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்கும் முன் சத்ய நாதெல்லா அந்நிறுவனத்தின் மென்பொருள் பிரிவுகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் இயங்குதளங்கள், கிளவுட் கம்ப்யூடிங் போன்ற பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார்.

    இந்நிலையில், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 2025 நிதியாண்டில் $96.5 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.846 கோடி) வருவாமணம் ஈட்டியுள்ளார்.

    இது கடந்த ஆண்டு அவர் ஈட்டிய $79.1 மில்லியனிலிருந்து (இந்திய மதிப்பில் ரூ.694 கோடியிலிருந்து) 22% அதிகமாகும்.

    ரூ.846 கோடி வருமானத்தில் ரூ.737 கோடி பங்குகளில் இருந்தும் 83 கோடி ஊக்கத்தொகை மூலமாகவும் ரூ.22 கோடி அடிப்படை சம்பளம் மூலமாகவும் கிடைத்துள்ளது. சத்யா நாதெல்லாவின் வருமானத்தில் 90 சதவீதம் பங்குகளில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளது.

    2025 ஆம் ஆண்டில் இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் 23% உயர்ந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் பங்கு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனால் தான் சத்யா நாதெல்லாவின் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

    • சர்வர் கோளாறால் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் சூடாகியுள்ளது.
    • இந்த சம்பவத்துக்கு Eight Sleep நிறுவனத்தின் CEO பயனர்களிடம் மன்னிப்பு கோரினார்.

    நேற்று முன் தினம், உலக அளவில் அமேசான் வெப் சர்விசஸ் (AWS) சர்வர் தொழில்நுட்பம் பாதிப்புக்குள்ளானது.

    இதனால் AWSஐ சார்ந்து இயங்கும் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்களும் இதனால் பாதிக்கப்பட்டன. சர்வர் கோளாறால் Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் சூடாகியுள்ளது. அதிக வெப்பத்தில் தூங்க முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சில பயனாளர்கள் பதிவிட்டனர்.

    இந்த சம்பவத்துக்கு Eight Sleep நிறுவனத்தின் CEO பயனர்களிடம் மன்னிப்பு கோரினார். எதிர்காலத்தில் ஆஃப்லைனிலும் கட்டில்கள் இயங்கும் வண்ணம் உருவாக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    Eight Sleep நிறுவன ஸ்மார்ட் பெட்கள் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுதர்சன சக்ரம் என்று பெயரிட்ட இந்த வான்பாதுகாப்பு அமைப்பு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது.
    • பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.

    இந்தியா தனது வான்பாதுகாப்பில் எஸ்-400 வான் பாதுகாப்பை பயன்படுத்தி வருகிறது. சுதர்சன சக்ரம் என்று பெயரிட்ட இந்த வான்பாதுகாப்பு அமைப்பு ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் வான் பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புக்காக ரஷியாவிடமிருந்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தி வருகிறது.

    • டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    • டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அப்போது மீண்டும் சந்தித்து பேசுவோம் என்று இரு தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையே டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புடா பெஸ்ட் நகரில் நடைபெற விருந்த டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து பொதுவெளியில் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு தற்போது நடைபெறாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • நிலநடுக்கம் அண்டை நாடான இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்து குஷ் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவானது. இதனால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. உடனே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கம் அண்டை நாடான இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது. ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை அந்தந்த நாடுகளில் கொண்டாடினர்.
    • கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது.

    கடந்த 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலகமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்து பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

    இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை அந்தந்த நாடுகளில் கொண்டாடினர்.

    இந்தியர்கள் அதிகளவில் வாழும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு அதிகாரபூர்வ விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது.

    தீபாவளி விழாவில் FBI இயக்குநர் காஷ் படேல், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், வெள்ளை மாளிகை துணை பத்திரிகை செயலாளர் குஷ் தேசாய், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா மற்றும் டெல்லிக்கான வாஷிங்டன் தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல் பிரதமர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
    • இதில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது.

    ஒட்டாவா:

    காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் அடங்குவர். எனவே போர்க்குற்றம் செய்ததாக நெதர்லாந்து சர்வதேச கோர்ட்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

    இதில் கடந்த ஆண்டு அவருக்கு எதிராக சர்வதேச கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் இஸ்ரேல்-காசா போர் முடிவுக்கு வந்தது. அதேசமயம் அவருக்கு எதிரான கைது வாரண்ட் தொடர்ந்து நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், தனி பாலஸ்தீன நாடு உருவாக்கத்துக்கு பெஞ்சமின் நேதன்யாகு தடையாக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி குற்றம்சாட்டினார். எனவே கனடாவில் நுழைந்தால் சர்வதேச கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தும் விதமாக அவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே பிரான்ஸ், துருக்கி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் சர்வதேச கோர்ட்டின் பிடிவாரண்டை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இதுகுறித்த வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
    • விசாரணை முடிந்த நிலையில் காப்பகத்துக்கு ரூ.22 கோடி அபராதம் விதித்தது.

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்தின் இன்வெர்னஸ் நகரில் தனியார் முதியோர் காப்பகம் அமைந்துள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக் கொண்டுள்ளது.

    இந்தக் காப்பகத்தில் இருந்த கேம்பல் என்ற மூதாட்டி கடந்த 2022-ம் ஆண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனால் காப்பக ஊழியர்கள் யாரும் அவருடன் இல்லை. இதனால் சில மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அந்தக் காப்பகத்துக்கு சுமார் 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    ×