என் மலர்
உலகம்
- பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் பதிவானது.
- இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் நேற்று இரவு 8.52 மணிக்கு 3.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, நேற்று அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரை மையமாகக் கொண்டு 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது இந்தியாவுடன் வங்கதேசம் பல ஒப்பந்தம் போட்டுள்ளது.
- இடைக்கால அரசு 10 ஒப்பந்தங்களை ரத்து செய்ததாக தகவல் செய்திகள் வெளியானது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
அதன்பிறகு இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது. இந்தியாவுடன் போடப்பட்ட 10 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுளளதாக செய்திகள் வெளியானது.
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பட்டியல் சரியானது அல்லது என வங்கதேசம் வெளியுறவத்துறை அமைச்சகம் தெரிவித்தள்ளார். வெளியுறவு விவகாரம் ஆலோசகர் எம். தவுஹித் ஹொசைன் "ஒரேயொரு ஒப்பந்தம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஹொசைன் "இந்தியாவிடம் இருந்து இழுவைப்படகு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்த பிறகு, வங்கதேசத்திற்கு இதனால் எந்த ஆதாயமும் இல்லை என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றார்.
- காசாவுக்கு சென்று ஹமாஸை ஒழிக்க கூட்டாளி நாடுகள் தயாராக உள்ளன.
- ஹமாஸ் சரியானதை செய்வார்கள் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்னதிம், டிரம்ப் ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி, காசா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் திட்டவட்டாக மறுத்துள்ளது.
இந்த நிலையில், அமைதி ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸின் முடிவு மிக வேகமாகவும், சீற்றத்துடனும், கொடூரமாகவும் இருக்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "நம்முடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் தொடர்ந்து மோசமாக கடந்து கொண்டால், எனது வேண்டுகோளின்படி கடுமையான படையுடன் காசாவுக்கு சென்று ஹமாஸை அழிக்கும் வாய்ப்பை வரவேற்பதாக மத்திய கிழக்கிலும், அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள நம்முடைய தற்போது சிறந்த கூட்டாளிகள் வெளிப்படையாக, வலுவாக, மிகுந்த உற்சாகத்துடன் என்னிடம் தெரிவித்தனர்.
நான் அந்த நாடுகளிடமும், இஸ்ரேலிடமும், இதுவரை இல்லை. ஹமாஸ் சரியானதை செய்வார்கள் என்று நம்புவதாக சொல்லியுள்ளேன். அவர்கள் கடைபிடிக்கவில்லை என்றால் ஹமாஸின் முடிவு விரைவாகவும், கொடூரமாகவும் இருக்கும். உதவிக்கு அழைத்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
- விசா நிலையை பழைய கட்டணத்தில் மாற்றி கொள்ளலாம்.
- எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தங்கி பணிபுரிய வெளிநாட்டு பணியாளர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) உயர்த்தி அதிபர் டிரம்ப் கடந்த மாதம் 19-ந்தேதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
எச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது அதிகளவில் எச்-1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்குதான் பொருந்தும் என்றும் ஏற்கனவே எச்-1பி வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், எப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் தங்களது விசாவை எச்-1பி விசா நிலைக்கு மாற்ற விண்ணப்பிக்கும்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்கள் நிலையைப் புதுப்பிக்க அல்லது நீட்டிக்க பழைய கட்டணத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்காவில் படித்து வரும் சர்வதேச மாணவர்கள் உள்பட பல்வேறு வகை விசா வைத்திருப்பவர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
- 2007 தேர்தலின்போது தேர்தல் பிரசாரத்திற்கு நிதி அளிக்க சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
- கடந்த மாதம் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, லிபியாவில் இருந்து வந்த நிதியை தேர்தல் பிரசாரத்திற்கு நிதி அளிக்க சதி செய்ததாக முன்னாள் அதிபரான நிக்கோலஸ் சர்கோசி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டில் சர்கோசிக்கு கடந்த மாதம் தண்டனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரீஸில் உள்ள சிறைக்கு இன்று வந்தடைந்தார். அவர் தனது மனைவி, மகன், மகள், பேரண்களுடன் வந்தார். பின்னர், அவர் சிறைக்கு சென்றார். இன்று முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க இருக்கிறார்.
சிறைக்கு செல்லும் முன்பு, சமூக வலைத்தளத்தில் "நான் ஒரு அப்பாவி மனிதன். சிறையில் அடைக்கப்படுகிறேன்" எனத் தெரிவித்தார்.
சிறை வாசலில் அவரது ஏராளமான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். அவர்கள் நிக்கோலஸ், நிக்கோலஸ் என குரல் எழுப்பியதுடன், பிரான்ஸ் தேசியக் கீதத்தையும் பாடினார்.
இவருக்கு அளித்த தீர்ப்பின்படி, சிறைக்கு சென்ற பின்னரே மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் இரண்டு மாதங்களை வரை பரிசீலனை செய்யலாம். இதனால் சர்கோசி இரண்டு மாதங்கள் சிறையில் இருக்க வாய்ப்புள்ளது.
விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என சர்கோசி வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
- 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளை பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார்.
- ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார்.
ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக் கட்சி பெரும்பான்மை இழந்ததையடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக சனே டகாய்ச்சி பதவியேற்றதை தொடர்ந்து அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து ஜப்பான் பாராளுமன்ற கீழவையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. மொத்தம் உள்ள 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளை பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து மேலவையில் நடைபெறும் ஓட்டெடுப்பிலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்தே, ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார். இதன்மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சனே டகாய்ச்சி பெறுகிறார்.
ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரட் தாட்சரை தமது ரோல் மடலாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரிய மண் தாதுக்களை வைத்து சீனா எங்களை அச்சுறுத்தியது.
- நிறைய நாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொண்டன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரியை விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. இப்பிரச்சனையை தீர்க்க இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
இதையடுத்து சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே அரியவகை கனிமங்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப வர்த்தகத்தில் சீனா முக்கிய கட்டுப்பாடுகளை விதித்ததால் அதிருப்தி அடைந்த டிரம்ப், வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் சீனாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
சீனா எங்களுக்கு மிகவும் மரியாதை அளித்து வருவதாக நான் நினைக்கிறேன். அவர்கள் வரிகள் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பணத்தை செலுத்துகிறார்கள். அவர்கள் 55 சதவீதம் வரி செலுத்துகிறார்கள். சீனாவுடன் ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நாங்கள் செய்யப்போகிறோம் என்று நினைக்கிறேன்.
இது ஒரு சிறந்த வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும். இது இரு நாடுகளுக்கும் அருமையாக இருக்கும். மேலும் இது முழு உலகிற்கும் அருமையாக இருக்கும். நவம்பர் 1-ந்தேதிக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன்.
அரிய மண் தாதுக்களை வைத்து சீனா எங்களை அச்சுறுத்தியது. நான் அவர்களை வரி விதிப்புகளால் அச்சுறுத்தினேன். அதே வேளையில் சீன அதிபர் ஜின்பிங்குடனான எனது நல்ல உறவால் மிகவும் நியாயமான ஒப்பந்தம் ஒன்று உருவாகும். வரும் நாட்களில் தென்கொரியாவில் சீன அதிபரை சந்திக்க உள்ளேன்.
நிறைய நாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொண்டன. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
- சர்வதேச தலைவர்கள் உடனான சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக பால்ரூம் கட்டப்படுகிறது.
- ரூ.2,200 கோடி மதிப்பில் சுமார் 90,000 சதுர அடி பரப்பளவில் பால்ரூம் கட்டப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார்.
இந்த நிலையில், அதிபர் டிரம்பின் நீண்ட நாள் விருப்பமான பால்ரூம் கட்டும் பணிக்காக வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்படுகிறது.
சர்வதேச தலைவர்கள் உடனான சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக ரூ.2,200 கோடி மதிப்பில் சுமார் 90,000 சதுர அடி பரப்பளவில் பால்ரூம் கட்டப்படுகிறது. இதற்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடிக்கும் பணியானது நேற்று தொடங்கியது.
- ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்- டிரம்ப்
- ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால் அது ஒப்பந்தம் அல்ல- காமேனி
இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முக்கிய காரணமாக இருந்தார். அவர் இஸ்ரேல்- காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான எகிப்து வந்தார்.
அதற்கு முன்னதாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்று, அங்குள்ள பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது "ஈரானுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடிந்தால், அது நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஈரானின் சுப்ரீம் தலைவர் அயோதுல்லா அலி காமேனி, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் விருப்பத்தை நிராகரித்துள்ளார். மேலும் ஈரானில் உள்ள அணு ஆயுத திறனை அமெரிக்கா அழிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான்- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதத் திட்டம் குறித்த மறைமுக பேச்சுவார்த்தை ஐந்து சுற்றுகளாக நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதுஇ அந்த 12 நாள் விமானத் தாக்குதலால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில்தான் அமெரிக்கா அதிபர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை காமேனி நிராகரித்துள்ளார்.
"டொனால்டு டிரம்ப் தன்னை ஒரு டீல் மேக்கர் என சொல்கிறார். ஆனால் ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால், அது ஒரு ஒப்பந்தம் அல்ல, மாறாக ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல். ஈரான் மீது குண்டுகள் வீசி அணு ஆயுத தொழிற்சாலையை அழித்ததாக பெருமை கொள்கிறார். நன்று. அவர் கனவு காணட்டும்" காமேனி எனத் தெரிவித்துள்ளார்.
- துபாயில் இருந்த வந்த சரக்கு விமானம் ரன்வேயில் தரையிறங்கியது.
- திடீரென ரன்வேயில் இருந்து விலகி கடலுக்குள் பாய்ந்தது.
துபாயில் இருந்து போயிங் 747 கார்கோ விமானம் துபாயில் இருந்து ஹாங்காங் விமான நிலையத்திற்கு வந்தது. ரன்வேயில் இறங்கி வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரன்வேயில் இருந்து விலகி அருகில் உள்ள கடலுக்குள் பாய்ந்தது.
விமானத்தின் பாதி பகுதியில் கடலில் மூழ்கியது. என்றாலும் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஆனால் ரன்வே அருகே பணிபுரிந்து கொண்ட ஊழியர்கள் இருவர் விமானத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஹாங்காங் விமானத்துறை தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கின் வடக்கு ரன்வே பரபரப்பாக இயங்கும் சர்வதேச விமான நிலையம் ஆகும். ஆனால், தெற்கு மற்றும் மத்திய ரன்வே தொடங்கு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பினா்.
- தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுவார்த்தை காரணமாக நிறுத்தப்பட்டது.
நீண்ட நாட்களாக நீடித்து வந்த போரால் பொதுமக்களிடையே அவர் மீதான செல்வாக்கு சரிந்தது. மேலும் ஊழல் புகார் மற்றும் போரை நீட்டிக்காமல் அமெரிக்காவிடம் பணிந்து நிறுத்தியதற்காக அவருடைய சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு நேரலையில் பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் பத்திரிகையாளர் 'அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?' என கேள்வி எழுப்பினா். அதற்கு அவர் 'ஆம் நிச்சயமாக' என பதில் அளித்தார்.
தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என பதில் அளித்தார்.
இஸ்ரேலின் நீண்டநாள் பிரதமராக 1996-ம் ஆண்டில் இருந்து (தொடர்ச்சியாக இல்லாமல்) நேதன்யாகு உள்ள நிலையில் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள புதிய பிரதமருக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சலோவா நகர் அருகே சென்றபோது அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
- இதனால் சாலையோரம் இருந்த மணல்மேட்டில் மோதி பஸ் கவிழ்ந்தது.
பிரேசிலியா:
பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரம் சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் 30 பேர் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
சலோவா நகர் அருகே சென்றபோது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த மணல்மேட்டில் மோதி பஸ் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சுற்றுலா சென்ற பயணிகள் 17 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






