என் மலர்tooltip icon

    உலகம்

    ஹாங்காங்கில் ரன்வேயில் தரையிறங்கியபோது கடலுக்குள் பாய்ந்த சரக்கு விமானம்
    X

    ஹாங்காங்கில் ரன்வேயில் தரையிறங்கியபோது கடலுக்குள் பாய்ந்த சரக்கு விமானம்

    • துபாயில் இருந்த வந்த சரக்கு விமானம் ரன்வேயில் தரையிறங்கியது.
    • திடீரென ரன்வேயில் இருந்து விலகி கடலுக்குள் பாய்ந்தது.

    துபாயில் இருந்து போயிங் 747 கார்கோ விமானம் துபாயில் இருந்து ஹாங்காங் விமான நிலையத்திற்கு வந்தது. ரன்வேயில் இறங்கி வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரன்வேயில் இருந்து விலகி அருகில் உள்ள கடலுக்குள் பாய்ந்தது.

    விமானத்தின் பாதி பகுதியில் கடலில் மூழ்கியது. என்றாலும் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஆனால் ரன்வே அருகே பணிபுரிந்து கொண்ட ஊழியர்கள் இருவர் விமானத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஹாங்காங் விமானத்துறை தெரிவித்துள்ளது.

    ஹாங்காங்கின் வடக்கு ரன்வே பரபரப்பாக இயங்கும் சர்வதேச விமான நிலையம் ஆகும். ஆனால், தெற்கு மற்றும் மத்திய ரன்வே தொடங்கு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×