என் மலர்tooltip icon

    உலகம்

    • 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
    • இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் உள்ள பிரதான விமான நிலையத்தில் 78 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

    ஏர் செனகல் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட டிரான்சைர் ஏர்லைனுக்கு சொந்தமான போயிங் 737-300 விமானம் மாலி நாட்டுக்கு புறப்படும் பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தை அடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

    • அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இந்திய மதிப்பில் ரூ. 3.4 கோடி வரை ஈட்டியுள்ளார்.

    சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் நேரலை வீடியோக்களில் வியூஸ்களை அதிகப்படுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்தி நான்கே மாதங்களில் ரூ. 3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சீன செய்திகளில் வெளியாகி இருக்கும் தகவல்களில், வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 7 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்து 544 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களை பயன்படுத்தி நேரலை பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு செய்ததன் மூலம் நான்கே மாதங்களில் 4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3.4 கோடி வரை ஈட்டியுள்ளார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வாங், தனது நண்பர் பரிந்துரைத்த "பிரஷிங்" எனும் வழிமுறையை பின்பற்ற துவங்கி இருக்கிறார். நேரலையில் வியூவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, லைக், கமென்ட் செய்ய வைத்து உண்மையான பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே பிரஷிங் ஆகும்.

    இந்த வழிமுறையை சாத்தியப்படுத்த வாங் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களை வாங்கியுள்ளார். இவற்றை கிளவுட் சார்ந்த மென்பொருள் மூலம் கட்டுப்படுத்திய வாங் இதற்காக வி.பி.என். மற்றும் நெட்வொர்க் உபகரணங்களையும் வாங்கியுள்ளார். இவற்றைக் கொண்டு சில க்ளிக்குகளில் வாங் தனது 4 ஆயிரத்து 600 மொபைல் போன்களையும் ஒரே சமயத்தில் இயக்க முடிந்தது.

    பிரஷிங் வழிமுறை கொண்டு வாங் நேரலையில் ஸ்டிரீம் செய்து பிரபலம் ஆக விரும்புவோரை குறிவைத்து நான்கே மாதங்களில் 4 லட்சத்து 15 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 46 லட்சத்து 55 ஆயிரத்து 571 வரை ஈட்ட முடிந்தது.

    • ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் அங்கு டாங்கிகளை குவித்துள்ளது.
    • இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் வடக்கு மற்றும் மத்திய காசா பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் அங்கு டாங்கிகளை குவித்துள்ளது.

    இதற்கிடையே ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அகதிகளால் மக்கள் தொகை பெருகியிருக்கும் ரபா நகரில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால், பொது மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும் என்று தெரிவித்தது.

    மேலும் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

    இந்த நிலையில் ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுத உதவிகளை நிறுத்துவோம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தெற்கு காசா நகரமான ரபாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை நடத்தினால் அந்நாட்டுக்கு ஆயுத உதவிகளை நிறுத்துவோம். நாங்கள் ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கப் போவதில்லை.

    ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் பயன்படுத்த ஆயுதங்களை வழங்கமாட்டோம். ரபாவின் தற்போதைய நிலைமையை தரைப்படை நடவடிக்கையாக அமெரிக்கா வரையறுக்கவில்லை. அவர்கள் (இஸ்ரேல்) மக்கள்தொகை மையங்களுக்குள் செல்லவில்லை.

    ஆனால் நான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும், போர் அமைச்சர வைக்கும் ஒன்றை தெளிவுபடுத்தியுள்ளேன். அவர்கள் மக்கள்தொகை மையங்களுக்குச் சென்றால் எங்களின் ஆதரவைப் பெறப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் காசாவில் பொது மக்களை கொல்ல அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்தியதை ஜோபைடன் ஒப்புக் கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
    • அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டினர்.

    உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை கட்டிப்பிடித்து ஒரு வாலிபர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான வீடியோவை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. அதன்படி சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார்.

    இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலானது. அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டினர்.

    சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.


    • செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
    • மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது டாக்டரின் திருட்டு அம்பலமானது.

    சில மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் திருடி விற்கப்படுவதாக அவ்வப்போது அதிர்ச்சி செய்திகள் வெளியாகும். அந்த வகையில் ஜப்பானில் பற்களை திருடி விற்ற டாக்டர் ஒருவர் போலீசாரிடம் சிக்கி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.

    அங்குள்ள கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த அந்த டாக்டர் மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

    அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் அனைத்து அறைகளுக்குள்ளும் சென்று வர முடிந்த நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

    இந்நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது டாக்டரின் திருட்டு அம்பலமானது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    • உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.
    • ஒரு கட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொன்றுவிடுமாறு ரஷியா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    கீவ்:

    அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவ அமைப்பான நேட்டோவில் இணைவதாக உக்ரைன் அறிவித்ததையடுத்து அதன் மீது அண்டை நாடான ரஷியா போரை தொடங்கியது.

    சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருவதால் ராணுவ பலம் மிகுந்த ரஷியாவின் நடவடிக்கையை சமாளித்து வருகிறது. இருப்பினும் உக்ரைன் மீது கூலிப்படை தாக்குதல், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றுடன் கூடிய தாக்குதலை ரஷியா மேற்கொண்டு உக்ரைன் நாட்டை ஒடுக்க முயற்சித்து வருகிறது.

    இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காக உளவுப்பிரிவில் கர்னல் பதவி வகித்து வந்த 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைகளை அவர்கள் கக்கியுள்ளனர். அவற்றின் விவரம் வருமாறு:-

    உக்ரைன் அரசின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் இரண்டு பேரும் ரஷியாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர்.

    இதற்காக பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர். இதன்மூலம் நாட்டின் ரகசிய நடவடிக்கைகள், ராணுவ தாக்குதல்கள் குறித்தான தகவல்கள் ஆகியவற்றை கசிய விட்டுள்ளனர்.

    ஒரு கட்டத்தில் அவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொன்றுவிடுமாறு ரஷியா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பல கோடி பணம், ரஷியா நாட்டு குடியுரிமை, பெண்கள் ஆகியவை பேரமாக பேசப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்ட பின்னர் ரஷியாவில் இருந்து உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய 2 ஆளில்லா விமானங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமும் வகுத்து தரப்பட்டுள்ளது.

    இதுகுறித்தான தகவல்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளநிலையில் இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.

    • முன் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
    • இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    சரக்கு விமானம் ஒன்று அதன் முன் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 767 விமானம் பின் தரையிறங்கும் கியரை மட்டுமே பயன்படுத்தி தரையிறங்கியதால் விமானத்தின் முன்பகுதி தரையுடன் மோதி தீப்பொறி பறந்தது.

    இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

    இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, விமான ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் தெரிவித்தார்.

    விபத்துக்குள்ளான விமானத்தை அகற்றும் பணியின் போது விமானம் தரையிறங்கிய ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

    • தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.
    • இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.

    சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்தவர் சன் ஹாங்சியா. இவரது கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். கோமாவில் இருந்த கணவர் நிச்சயம் குணமடைவார் என்ற நம்பிக்கையில் ஹாங்சியா தனது கணவரை பொறுப்புடன் பார்த்துக் கொண்டு வந்துள்ளார்.

    பத்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த போதிலும், மனைவி ஹாங்சியா தனது கணவரை அன்புடன் பாசமாக கவனித்து வந்துள்ளார். கணவரை பராமரித்துக் கொள்வதில் ஹாங்சியாவின் இரண்டு குழந்தைகளும் உதவி வந்துள்ளனர்.

     


    கோமாவில் இருந்து மீண்ட கணவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், அவருக்கு கடந்த காலங்களில் என்னவெல்லாம் நடந்தது என்பதை ஹாங்சியா இன்ப அதிர்ச்சியில் தெரிவித்து வருகிறார்.

    இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹாங்சியா, "தற்போது நான் சோர்வாக இருக்கும் போதிலும், குடும்பம் ஒன்றிணைந்ததும் எல்லாமே சரியாகிவிடும். கணவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், கணவரை தொடர்ந்து பார்த்துக் கொள்ள என் குழந்தைகள் ஆதரவாக இருந்தனர்," என்று தெரிவித்தார்.

    • மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தாய்லாந்தை சேர்ந்த 59 வயது பெண்ணின் மூக்கில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்து அகற்றியுள்ளனர்.

    தாய்லாந்து வடக்கு பகுதிசை சேர்ந்த பெண், கடந்த ஒரு வாரமாக மூக்கு அடைப்பு மற்றும் முக வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். பிறகு, பெண்ணின் மூக்கில் இருந்து திடீரென ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், சற்றும் தாமதிக்காமல் அப்பெண்ணை தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள நகோர்ன்பிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது, அந்த பெண்ணுக்கு எக்ஸ் ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எக்ஸ்ரேவை பரிசோதித்த மருத்துவர் பட்டீமோன் தனச்சாய்கான், பெண்ணின் மூக்கில் அசாதாரணமான ஒன்று இருப்பதை கண்டார்.

    இதையடுத்து, பெண்ணிற்கு எண்டோஸ்கோப்பிக் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மூக்கின் உள்ளே புழுக்கள் நெளிந்தபடி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பிறகு, பெண்ணிற்கு சிகிச்சையின் மூலம் மூக்கின் உள்ளே இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புழுக்களை மருத்துவர்கள் அகற்றினர்.

    சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், கண்கள் அல்லது மூளை போன்ற அருகிலுள்ள உறுப்புகளுக்கு புழுக்கள் இடம்பெயர்ந்திருக்கக்கூடும். அது இன்னும் கடுமையான சிக்கலை ஏற்படுத்தி, மரணத்திற்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தாய்லாந்தின் வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள், குறிப்பாக சியாங் மாய் பகுதியில், ஒவ்வாமை மற்றும் நாசியழற்சி உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளுக்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அது, தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
    • ஏற்றுமதியை தொடரலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே லட்சக்க ணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. ரபா நகருக்குள் இஸ்ரேல் டாங்கிகள் நுழைந்துள்ளன. எகிப்து உடனான ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது.

    இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்கவில்லை. ரபா நகரம் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் சூழல் உள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக தெற்கு காசா நகரமான ரபா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளதால் குண்டுகள் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

    ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கான முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டது. ஏற்றுமதியைத் தொடரலாமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.

    • தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார்.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.

    சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுயநினைவுக்கு திரும்பவில்லை. ஆண்டுகள் பல கடந்த போதும் அவருக்கு நினைவு திரும்பாததால் அவரது மனைவி சன்ஹாங்சியா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    ஆனாலும் தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார். மேலும் கணவர் மீது மிகவும் அன்பு செலுத்திய அவர் வீட்டில் கணவரை தொடர்ந்து கவனித்து வந்தார். இதன் பயனாக அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    அதில், படுக்கையில் விழித்திருக்கும் கணவரின் அருகில் சன்ஹாங்சியா அமர்ந்திருக்கும் காட்சிகளும் கடந்த சில வருடங்களாகவே அவர் அனுபவித்த வலிகளை பற்றி கூறும் காட்சிகளும் உள்ளது.

    அப்போது அவரது கணவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.

    • சுதா ரெட்டியின் ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
    • சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் மெட்காலா எனும் பேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்- நடிகைகள், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்ற நிலையில், அவர்கள் அணிந்து வந்த ஆடைகள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நிகழ்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வரும் ஐதராபாத்தை சேர்ந்த கோடீஸ்வரரான மேகா கிருஷ்ணாரெட்டியின் மனைவியான சுதா ரெட்டி, ஐவெரி பட்டு கவுன் அணிந்து பங்கேற்றார். அவரது ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    சுதா ரெட்டி 180 காரட் வைர நெக்லசை அணிந்திருந்தார். அதில் 25 காரட் இதய வடிவ வைரமும், மேலும் மூன்று 20 காரட் இதய வடிவிலான வைரங்களும் அணிந்திருந்தார். இதுதவிர 23 காரட் வைர சாலிடர் மோதிரத்தையும், 20 காரட் வைர சொலிடர் மோதிரத்தையும் அணிந்திருந்தார். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.165 கோடி என கூறப்படுகிறது.

    சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.


    ×