என் மலர்tooltip icon

    உலகம்

    • சிறுவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார்.
    • சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார்.

    சிறுவன் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு தன்னிடம் இருந்துள்ள ஒரு டாலரை கொடுத்த அவனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருந்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேட் புஸ்பைஸ். கோடீஸ்வரரான இவர் தன்னுடைய வீட்டில் திடீரென தீப்பிடித்தற்கான அலாரம் ஒலிக்கப்பட்டதால் சாதாரண உடையுடன் வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 9 வயது சிறுவன் ஒருவர் மேட் புஸ்பைசை பிச்சைக்காரன் என தவறாக எண்ணியது மட்டுமின்றி தன்னிடம் இருந்த ஒரு டாலர் பணத்தை மேட்டிடம் கொடுத்துள்ளார்.

    ஆனந்தம் கலந்த அதிர்ச்சியுடன் அந்த பணத்தை பெற்று கொண்ட மேட், தான் யார் என அந்த சிறுவனுக்கு விளக்கி உள்ளார். பின்னர் அவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார். சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட அமெரிக்க மீடியாக்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளவாசிகள் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து வைரலாகி வருகின்றனர்.

    • கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார்.
    • வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் மெட் காலா நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தது. இந்த நிகழ்வில் சர்வதேச சினிமா பிரபலங்கள், பாப் மற்றும் ராப் இசை கலைஞர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், கோடீஸ்வர பணக்காரர்கள் ஆகியோர் கண்ணை கவரும் வகையில் விதவிதமான ஆடைகளை அணிந்தவாறு போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பர். இந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப் பாடகி ஒருவரை பாதுகாவலர்கள் ஒன்று சேர்ந்து அலேக்காக தூக்கிய சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி டைலா. பல்வேறு வெற்றி பாடல்களை பாடியுள்ள இவர் முதன்முறையாக மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினரின் ஆடையை அவர் அணிந்திருந்தார். கடற்கரை மணலை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்தவாறு அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

    அப்போது கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அலேக்காக தூக்கினர். பின்னர் படிக்கட்டுகளில் டைலாவை ஏந்தி சென்று மேடையில் விட்டனர். அப்போதும் அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தவாறே இருந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

    • அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு.
    • மருத்துவ நிபணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.

    இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது.

    இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்டது. 

    கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகள் ஆய்வு மற்றும் மருத்துவ நிபணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

    மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்ப வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுனான் மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
    • ஜூலை மாதத்தில் மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர்.

    சீனாவின் யுனான் மாகாணம் ஜென்ஜியோங் கவுன்டியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தாக்குதலில் ஈடுபட்டவர் உள்ளூர் வாலிபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

    சீனாவில் பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடமாக பொது இடங்களில் ஏராளமான கத்தி குத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுனான் மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.

    குவாங்டோங் மாகாணத்தில் ஜூலை மாதத்தில் மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர்.

    யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஜென்ஜியோங் கவுன்ட்டி 2020 வரைக்கும் வறுமை பிடியில் இருந்ததாக கூறப்படுகிறது. 

    • 2022 அக்டோபர் மாதத்தில் இருந்து சீன தூதர் நியமிக்கப்படாமல் இருந்தார்.
    • தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் ஆப்கானிஸ்தான், ருமேனியா நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.

    இந்தியாவுக்கான சீன தூதராக சுன் வெய்டெங் பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலம் 2022 அக்டோபர் மாதம் முடிவடைந்தது. அதன்பின் சீனா தூதரை நியமிக்காமல் இருந்தது. இதற்கு இரு நாடுகள் இடையிலான எல்லைத் தொடர்பான பிரச்சனை ஆகும்.

    இந்த நிலையில் சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து இந்தியாவுக்கான சீன தூதரை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தள்ளார்.

    தற்போது இந்தியாவுக்கான சீன தூதராக அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரி பெயர் ஜு ஃபெய்ஹோங் ஆகும். 60 வயதாகும் இவர் விரைவில் இந்தியா வந்து பதவி ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    இவர் ஆப்கானிஸ்தான், ருமேனியா போன்ற நாடுகளில் தூதராக பணியாற்றியுள்ளார். 

    • மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை நம்பி இருக்கிறது.
    • நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் பங்களிக்க வேண்டும்.

    மாலே:

    இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது. அங்கு இந்தியர்கள் ஏராளமானோர் சுற்றுலா சென்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தலில் வென்ற முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.

    மேலும் இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சனம் செய்தனர். இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலர் தவிர்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.

    இது மாலத்தீவின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவுக்கு முன்பு போல் சுற்றுலாவுக்கு வர வேண்டும் என்று மாலத்தீவு வலியுறுத்தியது.

    இந்த நிலையில் தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.

    இதுகுறித்து அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் இப்ராகிம் பைசல் கூறும்போது, எங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது அரசும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் நட்பு சூழலை ஊக்குவிக்கிறோம்.

    இந்திய சுற்றுலா பயணிகளுக்கு எங்களது மக்களும் அரசாங்கமும் அன்பான வரவேற்பை வழங்குவார்கள். சுற்றுலாத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்தியர்களிடம் தயவு செய்து மாலத்தீவின் சுற்றுலாவின் ஒரு பகுதியாக இருக்குமாறு நான் கூற விரும்புகிறேன்.

    எங்கள் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தியர்கள் பங்களிக்க வேண்டும் என்றார்.

    • போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
    • ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.

    காசா:

    காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    மேலும் அவர்கள் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதில் பாலஸ்தீனம் தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் காசாவுக்குள் செல்லும் எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி உள்ளது. எனவே வெளிநாட்டு நிவாரண பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையே இந்த போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

    அதன்படி காசா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.

    இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசாவின் ரபா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு நிராகரித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போது படைகளை பின்வாங்கினால் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். எனவே அவர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.

    மேலும் ரபா பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதனால் ரபா நகருக்குள் ராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

    அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால் அங்கு பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.

    • தற்போது 3-வது முறையாக மீண்டும் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார்.
    • விண்வெளி ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பப்பட இருந்தது.

    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.

    இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது.

    இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

    இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார். இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ் (58), புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர்.

    இதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கனாவெரலில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விண்கலம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பப்பட இருந்தது.

    இந்த நிலையில், இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புல்ச் வில்மோர் ஆகியோர் பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் திடிடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    • ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் சென்ற வாகனங்கள் மீது டிரோன் தாக்குதல்.
    • இரண்டு குழந்தைகள் லேசாக காயத்துடன் உயிர் தப்பினர்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றன.

    இன்று காலை உக்ரைன் ரஷியாவுடனான எல்லையில் உள்ள பெல்கோரோட் மகாணத்தில் உள்ள பகுதி மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது என அந்த மாகாண கவர்னர் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

    பெல்கோரோட் மாகாணத்தில் உள்ள பொரிசோவ்ஸ்கி மாவட்டம் பெரேசோவ்கா கிராமம் அருகே ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் இரு வாகனங்கள் சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அருகே கார் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. அதன்மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்கியது.

    இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பின. ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கிளாட்கோவ் தெரிவித்துள்ளார்.

    • வங்காளதேச நாட்டின் தென்மேற்கு மாவட்டமான மகுரா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெப்பம் அலை வீசுவதால், மக்கள் வெளியில் நடமாட நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி கடுமையான வெப்ப அலை வீசுகிறது. கடந்து இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 11 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காளதேச நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள மகுரா மாவட்டத்தில்தான் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் வெப்பநிலை 43.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    கடந்த சில வருடங்களாக இல்லாத வகையில் வங்காளதேசத்தின் பெரும்பாலான இடத்தில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மதராஸ், தொழிநுட்ப கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்குள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

    சீரற்ற மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரும் ஆண்டுகளிலும் வங்காளதேசத்தில் அதிக வெப்ப அலை வீசும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • ரஃபா நகரில் வசிக்கும் மக்களை வெளியேற்ற இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

    ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் அறிவித்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் ஏழு மாதங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஃபா நகரைத் தவிர்த்து ஏறக்குறைய முக்கியமான நகரங்களில் இஸ்ரேல் தடைவழி தாக்குதல் நடத்தியுள்ளது.

    காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ஐ.நா. மற்றும் அமெரிக்க இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்திய வருகிறது.

    இதனால் இரண்டு பக்கத்திலும் இருந்து பேச்சுவார்த்தைக்கு தயாராகி, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்போகிறோம். இதனால் ரஃபா நகரில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரஃபா மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் எதிர்ப்பு தெரிவித்து, பேச்சுவார்த்தையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரஃபாவில் வசிக்கும் மக்களை மனிதாபிமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அல் மவாசி, கான் யூனிஸ் பகுதிகளுக்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஒரேயொரு முறை இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது 100 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தினர். ஒரு பிணைக்கைதிக்கு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டள்ள 3 பாலஸ்தீன மக்கள் என்ற வகையில் இஸ்ரேல் விடுதலை செய்தது.

    ஏழு நாட்களுக்கு பிறகு ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், மீண்டும் போரை தொடங்கியது.

    காசாவில் மொத்தம் 2.3 மில்லியன் மக்கள் வசித்து வந்த நிலையில், இந்த சண்டையில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஃபா நகரில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலிபோர்னியா மாவட்ட கல்வி கண்காணிப்பாளராக இருந்து வருபவர் மரியன் கிம் பெல்ப்ஸ்.
    • மரியன் கிம் பெல்ப்ஸ் விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாவட்ட கல்வி கண்காணிப்பாளராக இருந்து வருபவர் மரியன் கிம் பெல்ப்ஸ். இவரது மகள் விளையாட்டில் சிறந்து விளங்கினார்.

    இதை பாராட்டி அவருக்கு அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மரியன் கிம் பெல்ப்சும் கலந்து கொண்டார்.

    மகள் விழா மேடையில் கவுரப்படுத்தும்போது அங்கு திரண்டு இருந்த மாணவ-மாணவிகள் பெரிய அளவில் கைத்தட்டி உற்சாகப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் மரியன் கிம் பெல்ஸ் கடும் ஆத்திரம் அடைந்தார். உடனே அவர் விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ×