என் மலர்
உலகம்
- சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.
- நிலச்சரிவில் சிக்கி 650-க்கு மேற்பட்டோர் புதையுண்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
போர்ட் மோர்ஸ்பி:
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல்கட்ட தகவலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
இந்நிலையில், ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டமானது. பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ கடந்துள்ளது என தெரிவித்த அவர், இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
நிலச்சரிவு ஏற்பட்டு 650-க்கு மேற்பட்டோர் புதையுண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
- பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும்.
பாலஸ்தீனத்தின் காசா முனையில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் படைகளுடன் ஹமாஸ் அமைப்பினர் சண்டையிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அல் கஸ்சாம் படைப்பிரிவின் ஹமாஸ் அமைப்பு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கூறும் போது, வடக்கு காசாவில் ஜபாலியாவில் நடந்த சண்டையின் போது சுரங்கப்பாதைக்குள் பதுங்கியிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களை இழுத்து வந்தனர். இதில் சில இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்தனர். பலரை சிறைப்பிடித்துள்ளனர்.
அவர்கள் காயமடைந்து உள்ளனர் என்று தெரிவித்தார். ஒரு சுரங்கப்பாதையில் ரத்தம் தோய்ந்த ஒரு நபர் தரையில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ, கைப்பற்றபட்ட துப்பாக்கி புகைப்படங்களை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டனர். ஆனால் இதை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. ஒரு ராணுவ வீரர் கூட கடத்தப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தது.
இதற்கிடையே ஹமாஸ் அதிகாரி ஒசாமா ஹம்டன் கூறும்போது, இஸ்ரேலுடன் புதிய பேச்சுவார்த்தைகள் தேவையில்லை. இது போன்ற பேச்சுவார்த்தைகள் இஸ்ரேல் ராணுவத்திற்கு காசாவில் "ஆக்கிரமிப்பைத் தொடர அதிக அவகாசம் தருவதாக இருக்கிறது என்றார்.
ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்டுக்கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே தலைநகர் டெல் அவிலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும். புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் வெடித்தது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஷனிபா பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ஷனிபா பாபுவின் கணவர் சனுஜ் பஷீர் கோயாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷனிபா பாபு(வயது37). இவரது கணவர் சனுஜ் பஷீர் கோயா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சனுஜ் பஷீர் கோயா ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இதனால் அவர் அங்குள்ள புஜைரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஷனிபா பாபு, அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஷனிபா பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசாருக்கு அதில் சந்தேகம் எழுந்துள்ளது. அது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் ஷனிபா பாபுவின் கணவர் சனுஜ் பஷீர் கோயாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
விசாரணை முடிவில் தான், ஷனிபா பாபு சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜ்மான் பகுதியில் ஒரு கட்டிடத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் குந்தாறை பகுதியை சேர்ந்த ரூபன் பவுலஸ்(17) என்ற பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
- பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும்.
- 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.
உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை இரண்டே வாரத்தில் மூன்று முறை ஏறிய நபர் என்ற சாதனையை நேபாள மலையேறும் புகைப்படப் பத்திரிக்கையாளருமான பூர்ணிமா ஷ்ரேஸ்தா படைத்துள்ளார்.
பூர்ணிமா முதலில் மே 12 அன்று எவரெஸ்ட் சிகரத்தின் 8848.86 மீட்டர் உச்சத்தை அடைந்தார். மீண்டும் அவர் மே 19 அன்று பசாங் ஷெர்பாவுடன் இணைந்து உச்சியை அடைந்தார். அடுத்ததாக நேற்று காலை 5:50 மணிக்கு மூன்றாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார்.
பூர்ணிமா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது இது நான்காவது முறையாகும். 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் அவர் ஏறினார்.
மேலும், அவர் மனாஸ்லு, அன்னபூர்ணா, தௌலகிரி, கஞ்சன்ஜங்கா, லோட்சே, மகலு மற்றும் மவுண்ட் கே2 உள்ளிட்ட உயரமான பல மலை சிகரங்களை வெற்றிகரமாக எறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த பயோனிக் கை ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி மூலம் இயங்குகிறது.
- இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 14 மணிநேரம் வேலை செய்யும்.
அமெரிக்காவில் இடது கை இல்லாமல் பிறந்த ஜோர்டான் என்ற 5 வயது சிறுவனுக்கு பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக இளம் வயதில் பயோனிக் கை பொறுத்தப்பட்டவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சிறுவன் ஜோர்டானின் கோரிக்கையின்படி 'அயர்ன் மேன்' படத்தில் வரும் சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட பயோனிக் கை அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சூப்பர் ஹீரோ அந்தஸ்தையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த பயோனிக் கை ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி மூலம் இயங்குகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 14 மணிநேரம் வேலை செய்யும்.
சிறுவன் ஜோர்டானுக்கு முன்பே கடந்தாண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த 10 வயது ஹாரி ஜோன்ஸ் என்ற சிறுவனுக்கு 'அயர்ன் மேன்' பயோனிக் கை பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.
- . இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.
உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும்.ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். முக்கியமாக தென்னிந்தியாவில் வீட்டில் அணிந்து கொள்ளும் லுங்கிக்கு பதிலாக தற்போதுள்ள இளைஞர்கள் ஷார்ட்ஸ் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இதற்கு மாறாக சமீபத்தில், இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் தெருக்களில் ஒரு பெண் லுங்கி அணிந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளாக லண்டனில் வசிக்கும் இந்தியத் தமிழரான வலேரி, @valerydaania என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோவில், வலேரி ஸ்டைலாக நீல நிற செக்டு லுங்கியும் டி-ஷர்ட்டும் அணிந்து லண்டன் தெருக்களில் நடந்து சென்று ஒருசூப்பர் மார்கெட்டுக்குள் நுழைகிறார். அவரின் வித்தியாசமான தோற்றத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வலேரியின் முயற்சியை பாராட்டினர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது.
- பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகினர்.
- இதையடுத்து, அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போர்ட் மோர்ஸ்பி:
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.
இதையடுத்து, அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக வெளியான தகவலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ளது என உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, எங்கா மாகாணத்தில் உள்ள லகாயிப் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் அய்மோஸ் அகேம் கூறுகையில், இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் மற்றும் 1,182 வீடுகள் புதையுண்டன என தெரிவித்தார்.
நிலச்சரிவில் சிக்கி மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- வனத்துறையினர் அந்த முதலையை பத்திரமாக மீட்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
- வீடியோ காட்சிகளை பார்த்த பயனர்கள் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஜாக்சன் வில்லி பகுதியில் 104 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீசாருக்கும், வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற வனத்துறையினர் அந்த முதலையை பத்திரமாக மீட்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
'நாங்கள் அவரை கட்டமுடியாது' என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்த பயனர்கள் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் ரோமியோ என பெயரிடப்பட்ட இந்த காளை 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது.
- ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும்.
உலகம் முழுவதும் சமீபகாலமாக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் தங்களது திறமைகளால் பல்வேறு வகைகளில் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகின் மிக உயரமான காளை என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்காவில் உள்ள ஒரு காளை படைத்துள்ளது. அங்கு ஓரிகானில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் வசிக்கும் ரோமியோ என பெயரிடப்பட்ட இந்த காளை 6 அடி 4.5 அங்குலம் உயரம் கொண்டது. கின்னஸ் சாதனை அமைப்பின் அறிக்கைபடி இதற்கு முன்னர் இந்த சாதனை டாமி என்ற காளையிடம் இருந்தது. அதைவிட 3 அங்குலம் அதிக உயரத்துடன் தற்போது ரோமியோ புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து காளையின் உரிமையாளரான மிஸ்டி மூர் கூறுகையில், ரோமியோ காளைக்கு வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள் மிகவும் பிடிக்கும். தினமும் 45 கிலோ வைக்கோல் மற்றும் தானியங்கள் உட்கொள்கிறது. இந்த காளை வளர்ப்பதற்காகவே உயரமான தங்குமிட வசதிகள் தேவைப்படுகிறது என்றார்.
Meet Romeo, the world's tallest steer at a height of 1.94 metres (6 ft 4.5 in) ✨
— Guinness World Records (@GWR) May 22, 2024
Romeo is a 6-year-old Holstein steer who lives at Welcome Home Animal Sanctuary with his human, Misty Moore. pic.twitter.com/MZqCB7fkgM
- விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்துவை போலீசார் கைது செய்தனர்.
- விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள டிஸ்டேல் என்ற பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி பஸ்-லாரி மோதிய விபத்தில், பஸ்சில் பயணம் செய்த ஐஸ் ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்துவை போலீசார் கைது செய்தனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.
விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே ஜஸ்கிரத் சிங் சித்துவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜஸ்கிரத் சிங் சித்துவுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சித்துவின் வக்கீல் கூறும்போது, இன்னும் பல சட்ட நடைமுறைகள் உள்ளது. நாடு கடத்தும் செயல்முறைக்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம் என்றார்.
- காசாவில் உள்ள ரபா நகரில் லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
- ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இப்போரில் காசாவின் வடக்கு, மத்திய பகுதிகள் முற்றிலும் அழிந்துள்ளது.
இதையடுத்து தெற்கு காசாவில் உள்ள ரபா நகரில் லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனால் அங்கிருந்து ஏராளமானோர் இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையே காசா போரில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது தொடர்பாக அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா கோரியது.
இதையடுத்து விசாரணை நடத்திய சர்வதேச நீதிமன்றம், இஸ்ரேலுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
ரபா நகருக்குள் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். அந்த நகரம் வழியாக காசாவின் பிற பகுதிகளுக்கு உதவி பொருட்கள் செல்ல எல்லைகளை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகளை காசாவின் ஹமாஸ் அமைப்பினர் உடனே விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் தரப்பு கூறும்போது, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மோசமானது, ஒழுக்க ரீதியில் அருவருப்பானது. காசாவில் இனப்படுகொலை செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானது. ரபாவில் போர் இலக்குகள் தொடரும். காசா பகுதி முழுவதிலும் ஹமாசை ஒழித்துக்கட்டவும், பிணைக்கைதிகளை மீட்கவும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றனர். இதற்கிடையே ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.
- எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
உலகப் பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதற்கு எக்ஸ் என பெயரிட்டதுடன் அதில் பல மாற்றங்களையும் செய்தார்.பணக்காரராக மட்டும் இல்லாமல் உலகைப் பின்னியிருக்கும் சமூக வலைதளங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் அதிகார நகர்வாகவே எலான் மஸ்கின் இந்த முடிவு பார்க்கப்பட்டது.
எக்ஸ் தளத்திற்கு போட்டியாக இருக்கும் பேஸ்புக் வாட்சப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க்குடன் அவ்வப்போது உரசல்களில் ஈடுபடுவதை எலான் மஸ்க் வழக்கமாக வைத்துள்ளார். இருவரும் குத்துச்சண்டை போட்டியில் மோத உள்ளதாக அறிவித்தது வரை இந்த உரசல் சென்றது.

இந்நிலையில் வாட்சப் குறித்து எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எக்ஸ் பயனர் ஒருவர் தனது பதிவில், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளையும் 'சாட்'களையும் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த கருத்தை தனது எக்ஸ் பதிவில் மேற்கோள் காட்டியுள்ள எலான் மஸ்க் , வாட்ஸ் அப் தனது பயனர்களின் தரவை ஒவ்வொரு இரவும் (விளம்பர நிறுவனங்களுக்கு) ஏற்றுமதி செய்கிறது. சிலர் இன்னும் வாட்ஸ் அப் பாதுகாப்பானது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த குற்றச்சாட்டு குறித்து வாட்ஸ் அப் செயலியை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







