என் மலர்
உலகம்
- ஒளி மாசுபட்ட நகரங்களில் இருந்தும் கூட வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பிரகாசமான காட்சியை உருவாக்கும் என்றும் தெரிவித்தனர்.
- ஒரு புதிய வெடிப்பைக் குறிக்கிறது என்றும், அந்த வெடிப்பு செப்டம்பர் மாதம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பூமியிலிருந்து 3 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள டி கொரோனே பொரியாலிஸ் என்ற விண்மீன் தொகுப்பில் ஒரு நட்சத்திரம் விரைவில் வெடித்து சிதறும் என்றும், அதை இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒளி மாசுபட்ட நகரங்களில் இருந்தும் கூட வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பிரகாசமான காட்சியை உருவாக்கும் என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாசா விஞ்ஞானி ரெபெக்கா ஹவுன்செல் கூறும்போது, இது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு.
இது நிறைய புதிய வானியலாளர்களை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார். டி கொரோனே பொரியாலிஸ் கடைசியாக 1946-ம் ஆண்டு வெடித்தது.
அந்த வெடிப்புக்கு சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த அமைப்பு திடீரென மங்கலானது.
அதேபோல் கடந்த ஆண்டு டி கொரோனே பொரியாலிஸ் அமைப்பு மீண்டும் மங்கலானது.
இது ஒரு புதிய வெடிப்பைக் குறிக்கிறது என்றும், அந்த வெடிப்பு செப்டம்பர் மாதம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசியது.
- பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 9 மாதங்களாக நீடித்து வருகிறது.
இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் சுரங்கப்பாதையில் மறைந்திருந்த ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாகவும் , அப்பகுதியில் உள்ள உள்கட்டமைப்புகளை அழித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. அதேபோல் வடக்கு காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசியது. இதில் 3 பேர் பலியானார்கள்.
சமீபத்தில் மத்திய காசாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
- மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் கெல்லிக்கு பாராசோம்னியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- பெயிண்ட் வாளிகள், புத்தகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், குளிர்சாதன பிரிட்ஜ், மேசைகள், மிட்டாய்கள் என தனக்குத் தேவைப்படாத பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்துள்ளார்.
நவ நாகரிகப்பெண்கள் அதிகம் ஷாப்பிங் செய்கிறார்கள் என்பதே பெருமபாலான கணவர்களின் கவலையாக இருக்கிறது என்று கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் பெண் ஒருவருக்கு தூக்கில் ஷாப்பிங் செய்யும் அறிய வகை வியாதி உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான கெல்லி கிநைப்ஸ் என்ற பெண் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே தனக்கு தேவையில்லாத பொருட்களையெல்லாம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து வருகிறார். இதனால் அவருக்கு ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் கெல்லிக்கு பாராசோம்னியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாராசோம்னியா இருப்பவர்கள் தூக்கத்தில் எழுந்து சுயநினைவு இல்லாமலேயே நடப்பது, பேசுவது, சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். தூக்கத்தில் மூளையின் ஒரு பகுதி மட்டும் செயல்படுவதால் இது நடக்கிறது.
மாறிவரும் வாழ்க்கை முறையால் கெல்லியின் விஷயத்தில் பாராசோம்னியா மேலும் ஒரு படி போய் தூக்கத்தில் ஷாப்பிங் செய்வது வரை சென்றுள்ளது. கெல்லி தூக்கத்தின்போது ஆன்லனில் பிளாஸ்டிக்கால் ஆன முழு பேஸ்கெட்பால் செட்டப், நெட், பெயிண்ட் வாளிகள், புத்தகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், குளிர்சாதன பிரிட்ஜ், மேசைகள், மிட்டாய்கள் என தனக்குத் தேவைப்படாத பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்துள்ளார்.

தனது வங்கி விவரங்களும் கிரெடிட் கார்ட் தகவல்களும் ஏற்கனவே ஆன்லைனில் பதிவாகியுள்ளதால் தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும்போது பணம் தானாகவே சென்று விடுகிறது என்றும் தனிப்பட்ட வங்கி விவரங்களை தூக்கத்தில் யாருக்காவது சேர் செய்து விடுவதால் மோசடி நிகழும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக விரக்தியில் தெரிவிக்கிறார் கெல்லி.

மூன்று குழந்தைகளுக்கு தாயாக உள்ள கெல்லி, 2018 இல் தனது முதல் குழந்தை பிறந்தபோது இந்த வியாதிக்கு ஆளாகியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும் அது பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்பதால் செய்வதறியாது தவித்து வருகிறார் கெல்லி.
- தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும்.
- டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமீரகத்தில் தற்போது கோடைக்காலம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் நிலவுகிறது. இதனை கவனத்தில் கொண்டு மோட்டார் சைக்கிளில் டெலிவரி செய்யும் ஊழியர்களின் உடல்நலன் கருதி அவர்கள் ஓய்வெடுப்பதற்கு வசதியாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் 6 ஆயிரம் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துபாயில் இந்த ஓய்வெடுக்கும் அறைகள் அரேபியன் ரேஞ்சஸ், இன்டர்நேசனல் சிட்டி, பிசினஸ் பே, அல் கூஸ், அல் கராமா, அல் சத்வா, அல் ஜதாப் மற்றும் மிர்திப் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் 24 மணி நேரமும் சுய சேவை முறையில் செயல்படுகிறது.
இந்த அறைகள் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஓய்வறையில் அமரும் இருக்கைகள், குளிர்ந்த தண்ணீர், செல்போன் சார்ஜ் ஏற்றும் வசதி, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் எந்திரம், சிற்றுண்டி வினியோகம் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் நிழலான பகுதியில் மோட்டார் சைக்கிள்களை வரிசையில் நிறுத்திக்கொள்ளலாம். இடத்தை பொறுத்து இந்த அறையில் ஒரே நேரத்தில் 10 பேர் வரை ஓய்வெடுக்கலாம்.
கடும் கோடை நிலவும் நேரத்தில் அல்லது ஆர்டருக்காக காத்திருந்து மிகவும் சோர்வடையும்போது டெலிவரி ஊழியர்கள் இங்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லலாம். இதன் மூலம் களைப்பு மற்றும் சோர்வு நீக்கப்பட்டு சாலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த வசதி துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் டெலிவரியில் ஈடுபட்டு வரும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் கட்டாய மதிய இடைவேளை வருகிற 15-ந்தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைமுறைக்கு வருகிறது.
தினமும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடும் வெயிலில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். இந்த நேரங்களில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வெயில் காரணமாக பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஓய்வறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- பொது வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
- இதை சற்றும் எதிர்பாராத அவர், இந்த தாக்குதலில் அதிர்ச்சி அடைந்தார்.
டென்மார்க் பிரதமராக மேட் ஃப்ரெடெரிக்சன் இருந்து வருகிறார். இவர் டென்மார்க்கின் மத்திய கோபென்ஹாகென்னில் சென்றபோது நபர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (நேற்று) மாலை குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்றபோது நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். உடனே அந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார் என பிரதமர் அலுவலம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக டென்மார்க் போலீஸ், பிரதமரை தாக்கிய நபரை கைது செய்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவத்தில் பிரதமர் சற்று அழுத்தத்துடன் இருந்தார். பின்னர் பாதுகாப்பு வளையத்துடன் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் தேர்தல் டென்மார்க்கில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஸ்லோவாகிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பிரசாரம் செய்ய இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
- பாகிஸ்தானில் அடக்குமுறை கட்டவிழ்க்கப்படுகிறது என்றார் இம்ரான் கான்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதம மந்திரியான இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வழக்கு ஒன்றுக்காக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று இம்ரான்கான் ஆஜரானார்.
அப்போது ஒரு நீதிபதி, லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் கட்சித்தலைவராக உள்ள இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது வருத்தத்திற்கு உரியது என்றார்.
இந்நிலையில், நீதிபதிகள் முன் இம்ரான்கான் பேசுகையில், இந்தியாவில் பொதுத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக சிறையில் இருந்த டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு இந்திய சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது. பாகிஸ்தானில் நான் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறேன். தேர்தலில் நான் நிற்பதற்கு தடை விதிக்கும் வகையில் தேர்தல் நடந்த பிப்ரவரி 8-ம் தேதிக்கு 5 நாள் முன்பு எனக்கு தண்டனை வழங்கப்படுகிறது. நவாஸ் ஷெரீப் சிறையில் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட வசதிகளுக்கும், தற்போது எனக்கு வழங்கப்படும் வசதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
- ரஷியாவில் உள்ள ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் இறந்தனர்.
- மேலும் ஒரு மாணவர் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மாஸ்கோ:
ரஷியாவில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களது உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ரஷிய நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து, இந்திய தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
விசாரணையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் அனந்தராவ் டேசலே, ஜிஷான் அஷ்பக் பின்ஜரி, ஜியா பிரோஜ் பின்ஜரி மற்றும் மாலிக் குல்ம்கோஸ் முகம்மது யாகூப் ஆகிய 4 மாணவர்களும் ரஷியாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்தது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதகரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். அவர்களைப் பிரிந்துள்ள குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவியையும் வழங்குவோம். பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
- போரை நிறுத்த கத்தார் உள்ளிட்ட நாடுகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
- கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
காசா:
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் தாக்குதலில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த சண்டையில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் பலியாகி வருவதால் போரை உடனே நிறுத்தவேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் தொடரும் என்றும் ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.
இதனால் இந்த போரை நிறுத்த கத்தார் உள்ளிட்ட நாடுகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
எகிப்து வெளியுறவு துறை மந்திரி சமே ஷோத்ரி கெய்ரோவில் அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதிகளுடன் காசா போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் இது வரை எந்தவித பதிலும் அளிக்கவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மஜித் அல்- அன்சாரி தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் தொடர்ந்து சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட பொருட்களைக் கண்டெடுத்தார்.
- எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார். மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த ஜோ பைடனின் இளைய மகன் பீயு பைடனின் மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டெடுத்தார்.
இதுதொடர்பாக அவர் போலீசுக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. போதைப்பழக்கத்துக்கு அடிமையான அதிபரின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்பதே இந்த வழக்கு ஊடக வெளிச்சம் பெற போதுமான காரணாமாக அமைந்தது.
அதன்படி அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் இந்த வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும் அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். நவம்பர் மாதம் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதர்க்கனா தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் அந்தரத்தில் மிதந்தபடி நடமாடும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
- இந்தியாவை பூர்வீகமாகள் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி நேற்று முன் தினம் (ஜூன் 5) புறப்பட்டுச் சென்றது.
25 மணி நேர பயணத்திற்குப் பிறகு நேற்று (ஜூன் 6) (நாளை) அவர்கள் விண்வெளி நிலயத்தை சென்றடைந்தனர்.சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார்கள்.
இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் அந்தரத்தில் மிதந்தபடி நடமாடும் வீடியோவை போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தனது சாகாக்களுடன் சுனிதா குதூகலமாக காற்றில் தவழ்ந்தபடி நடனமாடுவது பதிவாகியுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாகள் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவரின் 3 வது பயணம் ஆகும்.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் சோதனைக்கு உட்படுத்தபட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
2022-ல் சோதனை வெற்றி பெற்ற நிழையில் பாராசூட் உள்ளிட்ட சில பிரச்சனைகள் உருவாகின. இந்த நிலையில்தான் இரண்டு முறை முயற்சி தோல்வியடைந்த நிலையில் 3-வது முயற்சியில் வெற்றிகரமாக பறந்துள்ளது.
- கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன.
கிரீன்லாந்தில் உள்ள பனி மூடிய ஆர்டிக் பிரதேசத்தில் ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை வைரஸ்கள் 1981 இல் முதன்முறையாக கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஐஸில் இப்போதுதான் முதன்முறையாக கடண்டுபிடிக்கப்படுள்ளது.
பொதுவாக பாக்டீரியாவை விட 1000 மடங்கு சிறிய அளவில் உள்ள வைரஸ்கள் 20- 200 நானோ மீட்டர்கள் அளவே இருக்கும்.ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் 2.5 மைக்ரோ மீட்டர்கள் என்ற அளவில் பாக்டீரியாவை விட பெரிதாக உள்ளன. இவை மனிதக் கண்களால் மட்டும் இன்றி சிறிய வகை மைக்ரோஸ்கோப்பினாலும் பார்த்தறிய முடியாதவை ஆகும்

இந்த வைரஸ்களால் நன்மையே விளையும் என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது இந்த ராட்சத வைரஸ்கள் பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுக்க மறைமுகமான ஆயுதங்களாக செயல்படுகிறதாம். பனியின் மேற்பரப்பில் இருந்தும், துளைகளில் இருந்தும் இந்த வைரஸ்களின் டிஎன்ஏ க்கள் சேகரிக்கப்பட்டு மேற்கொண்டு ஆராய்ச்சி செயப்பட்டு வருகிறது.

மைக்ரோ பையோம் உயிரியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், இந்த ராட்சத வைரஸ்கள் பனியை சேதப்படுத்தும் ஆல்கே - களை அழித்து பனிக்கடி உருகாமல் இருக்க உதவுகிறது. ஆனால் இந்த ராட்சத வைரஸ்கள் எந்த அளவுக்கு வீரியத்துடன் செய்யப்படும் என்பதில் சந்தேகம் உள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலமே அதைத் தெளிவுபடுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பிரதேசத்தில் பணிக்கட்டிகள் வேகமாக உருகி வரும் நிலையில் இந்த ராட்சத வைரஸ்கள் அதற்கு தீர்வாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- தென்கிழக்கு நாடு ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில் கனமழையுடன் கூடிய கடுமையான புயல் ஒன்று சுழன்று அடிக்கிறது.
- தெருவோரத்தில் சிறுமி உள்பட 2 பேர் ஆபத்தான நிலையில் சிக்கி தவிக்க, உயிருக்கு அஞ்சாமல் அவர்களை மீட்க 4 வாலிபர்கள் விரைகிறார்கள்.
பூமியை சுனாமி, புயல், எரிமலை வெடிப்பு என பல்வேறு இயற்கை சீற்றங்கள் அவ்வப்போது தாக்கி வருகிறது. இயற்கை அன்னை தனது கோர முகத்தை பல்வேறு வகைகளில் காட்டினாலும் இறுதியில் மனிதநேயம் வெல்லும் என்பது நீதி. இந்த கருத்தை ஒப்புக்கொள்ளும்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்கிழக்கு நாடு ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் கனமழையுடன் கூடிய கடுமையான புயல் ஒன்று சுழன்று அடிக்கிறது. புயலில் இருந்து தப்பிப் பிழைக்க அங்கே உள்ள கடை ஒன்றில் பாதுகாப்புக்காக சிலர் ஒதுங்கி நிற்கிறார்கள்.
அப்போது தெருவோரத்தில் சிறுமி உள்பட 2 பேர் ஆபத்தான நிலையில் சிக்கி தவிக்க, உயிருக்கு அஞ்சாமல் அவர்களை மீட்க 4 வாலிபர்கள் விரைகிறார்கள். பின்னர் அவர்களை மீட்பதுடன் அந்த வீடியோ காட்சி முடிகிறது. பிரதிபலன் பார்க்காமல் கனநேரத்தில் அந்த இளைஞர்கள் அஞ்சாநெஞ்சர்களாக செயல்பட்டு புயலில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பான வீடியோவை, 'சாமானியர்கள் சூப்பர் ஹீரோக்களான தருணம்' என்று கருத்து தெரிவித்து இணையவாசிகள் பரப்பி வருகிறார்கள்.






