என் மலர்tooltip icon

    உலகம்

    • பொதுவெளியில் ஆண்கள் மேலாடையின்றி செல்லும் போது பெண்களாலும் அப்படி செல்ல முடியும்.
    • நான் என்ன செய்கிறேன் என்பதை பெரும்பாலான மக்கள் கவனிக்க மாட்டார்கள்.

    அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண்ணான எய்லா ஆடம்ஸ் ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை முன்னெடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த போராட்டத்தில் மூலம் இந்த பெண் உலக அளவில் டிரெண்டாகி உள்ளார்.

    அப்படி என்ன போராட்டம் என்றால், ஆண் பொதுவெளியில் மேலாடையின்றி செல்வது போல, பெண்களும் மேலாடையின்றி செல்லலாம் என்ற வகையில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். சொல்வது மட்டுமின்றி அவரே மேலாடையின்றி பல இடங்களுக்கு சென்று, அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

    இந்த விழிப்புணர்வு தொடர்பாக எய்லா ஆடம்ஸ் கூறியதாவது:-

    பொதுவெளியில் ஆண்கள் மேலாடையின்றி எந்த பயமும் தயக்கமும் இல்லாமல் செல்லும் போது பெண்களாலும் அப்படி செல்ல முடியும். நிர்வாணமாக இருப்பதைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்ட யாரையும் நான் புரிந்து கொள்ள முடியாது.

    உனக்கு பிடிக்கவில்லை என்றால் பார்க்காதே. நான் என்ன செய்கிறேன் என்பதை பெரும்பாலான மக்கள் கவனிக்க மாட்டார்கள். ஒருவேளை நான் மாட்டிகொண்டால் அவர்கள் புன்னகைத்து கடந்து செல்வார்கள். இல்லையெனில் வெற்றி குறியை (thumbsup) காண்பிப்பார்கள். சிலர் மனம் விட்டு சிரித்து கடப்பார்கள்.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக, நியூயார்க் நகரில் பெண்கள் மேலாடையின்றி செல்வது சட்டப்பூர்வமாக உள்ளது. பல பெண்கள் பாலின சமத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    ஆடையை சட்டென கழற்றுவது (ஃபிளாஸ்) பொழுதுபோக்கு என்று நான் நினைக்கிறேன். ஆனால் இது மேலாடையின்மையை நடைமுறைக்கு கொண்டு வரும் ஒரு வழியாகும் என கூறினார். 

    • இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.
    • சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாக உள்ளது

    அமேரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளி மையம் பிரபஞ்சத்தைப் பற்றிய புதுப்புது உண்மைகளை தனது அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் செய்யும் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தியவாறு இருக்கிறது.

    அந்த வகையில் சீனா, பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைப் பகுதியின்மீது சிவப்பு மற்றும் ரோஸ் வண்ணக்களஞ்சியங்களாக இரவு நேரத்தில் விண்ணில் இருந்து மின்னலாக பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை [GIGANTIC JETS] படம்பிடித்து நாசா வெளியிட்டுள்ளது. அரிதினும் அரிதாக ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த நிகழவைப் படப்பிடித்துள்ள நாசா, இதை வாரத்தின் சிறந்த வானியல் புகைப்படமாக குறிப்பிட்டு சிலாகித்துள்ளது.

    இதற்குமுன் இல்லாதவகையில் 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வானது, இடியுடன் மின்னல் அடிக்கும்போது பூமியின் அயோனோஸ்பியர் வளிமண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகளாலும், காஸ்மிக் கதிர்வீசுகளாலும் இந்த வண்ணக்குழப்புகள் ஏற்பட்டு வானில் ஒளிதிரளான மின்னல்களாக அவை இறங்கும் காட்சி உருவாகியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    தொடர்ச்சியாக விழுந்த இந்த 4 ஒளித்திரள் ஜெட் மின்னல்களும் ஒன்றுக்கொன்று சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்துள்ளன. வளிமண்டலத்தின் மேற் பரப்பில் உள்ளதால் மின்னலின் மேற்புறத்தில்  சிவப்பு நிறமாகவும், பூமியை நோக்கி வரும் கீழ் பகுதி ரோஸ் நிறத்திலும் உள்ளது. இது சாதாரணாமாக ஏற்படும் மின்னலாகவன்றி மிகப்பெரிய அளவுடையதாகவும் சாதாரண மின்னலை விட 50 மடங்கு அதிக சக்தியுடையதாகவும் உள்ளது.   

    • விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் கால தாமதம்.
    • குப்பைகள் நிரம்பிய பலூன்களால் அந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்.

    வட கொரியா அனுப்பி வரும் குப்பைகள் நிரம்பிய பலூன்களால் தென் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் முடங்கும் சூழல் உருவானது. தொடர்ச்சியாக குப்பைகள் அடங்கிய பலூன்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்ததை அடுத்து, விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்பட்டு செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக ஓடுபாதைகள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளிலும் வட கொரியாவின் குப்பைகள் அடங்கிய பலூன்கள் ஏராளமாக குவிகின்றன. குப்பைகள் நிரம்பிய பலூன்களால் அந்த பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மே மாதம் துவங்கி வட கொரியா தென் கொரியாவிற்குள் குப்பைகள் அடங்கிய பலூன்களை அனுப்பி வருகிறது. முன்னதாக வட கொரியாவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தென் கொரியா சார்பில் பலூன்கள் அனுப்பப்பட்டன.

    இவைகளில் வட கொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய காகிதங்கள் இடம்பெற்று இருந்தன. இதோடு எல்லை பகுதியில் வட கொரியாவுக்கு எதிரான இசையை தென் கொரியா ராட்சத ஒலிப்பெருக்கிகள் மூலம் இசைத்தது.

    தென் கொரியாவின் பலூன் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே வட கொரியா பலூன்களில் குப்பைகளை அனுப்ப துவங்கியது. அதன்படி தற்போது வட கொரியா அனுப்பிய பலூன்களால் தென் கொரிய விமான நிலைய செயல்பாடுகள் முடங்கியுள்ளன.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர்.
    • நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள்.

    கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

    கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கென்யாவில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க கென்யாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இந்திய துணைத் தூதரகம் கூறியதாவது:-

    தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கென்யாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும். நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிருங்கள், என தெரிவித்துள்ளது.

    • நிலவின் மண்-பாறை மாதிரிகளுடன் சாங் இ-6 என்ற விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் தரை இறங்கியுள்ளது.
    • கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்து கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும்.

    பீஜிங்:

    நிலவின் தென்துருவத்தில் இருந்து மண்-பாறை மாதிரிகளை கொண்டு வருவதற்காக சாங் இ-6 என்ற விண்கலத்தை சீனா அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த 2-ந்தேதி நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    நிலவின் தென் துருவத்தில் எய்ட்கென் படுகையில் தரை இறங்கிய விண்கலம், இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவி மூலம் நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரித்தது.

    மேலும் நிலவு மேற்பரப்பின் சில புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. பின்னர் அந்த மாதிரிகள் நிலவை சுற்றி வந்த லேண்டருக்கு மாற்றப்பட்டு பூமிக்கு புறப்பட்டது.

    இந்த நிலையில் நிலவின் மண்-பாறை மாதிரிகளுடன் சாங் இ-6 என்ற விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் தரை இறங்கியுள்ளது. சுமார் இரண்டு மாத நீண்ட பயணத்திற்குப் பிறகு, இப்பணி நிறைவடைந்துள்ளது என்று சீனா தெரிவித்தது. விண்கலத்தில் இருந்த நிலவின் மாதிரிகளை விஞ்ஞானிகள் எடுத்து ஆய்வு கூடத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது, கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்து கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும். இந்த வெற்றி குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது என்றனர். இந்த திட்டத்தில் பங்காற்றிய விஞ்ஞானிகளுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்துகளை தெரிவித்தார்.

    • அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக தொடர்ந்தது.
    • இதனால் சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.

    பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் ஆவார்.

     

    இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

    அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை வாபஸ் பெற்றதை அடுத்து அதுவரை கைதில் இருந்து தப்பித்துவந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்தது.

    ஆனால் இதை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அமெரிக்காவுக்கு அனுப்பாடாமால் இதுநாள்வரை வரை லண்டன் சிறையிலேயே அசாஞ்சே அடைபட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது, குறைந்த பட்ச சிறை தண்டனையே வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமேரிக்காவிடம் கோரியது. அசாஞ்சேவுக்கு ஆதரவாக சர்வதேச சமூகமும் குரல் கொடுத்து வந்தது.

     

    இந்த விவகாரம் இவ்வாறாக புகைந்து வந்த நிலையில் அசாஞ்சே , தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து கடந்த திங்கள் இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே இன்று அமெரிக்காவுக்கு கிளம்பினார்.

     

    இதையடுத்து அமெரிக்காவின் பசிபிக் தீவுகள் பிராந்தியமான சைபன் நீதிமன்றத்தில் அசாஞ்சே ஆஜரான நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக தொடர்ந்தது. அப்போது, அமரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்டவற்றை நீதிபதியின்முன் ஒப்புக்கொண்ட அசாஞ்சே, அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே, பேசுவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் செய்தது எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார்.

    விசாரணையின் இறுதியில் அசாஞ்சே குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி ரமானோ ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். இதனால் சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.

     

    கடந்த 14 வருடங்களாக தாய் நாடான ஆஸ்திரேலியாவை விட்டு பிரிந்து இன்னல்களுக்கு ஆளான 52 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவின் சைபனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியா திரும்புகிறார். அவரது வருகையை ஆஸ்திரேலிய அரசும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அவரது விடுதலைக்காகவும் பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும் உலகம் முழுவதும் போராடிய அவரது அபிமானிகள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர். 

    • கொரோனா நோயிலிருந்து மீண்ட உடனேயே விமானம் பயணத்தை தொடங்கியது தவறு.
    • நீங்கள் இதைப் பார்க்கும் விமானியாக இருந்தால், எனது கதை ஒரு எச்சரிக்கைக் கதையாக இருக்கும்.

    டச்சு விமானியான நரைன் மெல்கும்ஜான், தனது விமான பயணத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விமானம் ஓட்டும் போது ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் குறித்து மற்ற விமானிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    அந்த பயணத்தின் போது விமானத்தின் விதானம் (கதவு) பாதி வழியில் திறந்து கொண்டது. இதனால் பதட்டமடைந்த மெல்கும்ஜான் விமானத்தை கட்டுப்படுத்த முயற்சித்தார். கதவை மூட மூடியாததால் விமானத்தை எப்படி தரையிறக்க போகிறோம் என்று யோசித்தவர், துரிதமாக செயல்பட்டார். கதவு திறந்து கொண்டதால், அவரால் கண்களை திறந்து பார்க்க முடியாத அளவுக்கு காற்று பலமாக வீசியது வீடியோவில் தெரிகிறது.

    சில நிமிட போராட்டத்திற்கு பின் அவர் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கினார். மேலும் விமான பயணத்திற்கு முன்பு நடத்த வேண்டிய சோதனைகளை சரியாக செய்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கொரோனா நோயிலிருந்து மீண்ட உடனேயே விமானம் பயணத்தை தொடங்கியது தவறு என்பதை இந்த பயணத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த பதட்டத்திற்கு மத்தியில், சத்தம் காரணமாக பயிற்சியாளரை தொடர்புகொள்ளும் போது என்னால் எதையும் சரியாக கேட்க முடியவில்லை. இருந்தாலும் பறந்து கொண்டே இருங்கள் என்று அவர் கூறியது மட்டும் தெளிவாக நினைவில் வைத்திருந்தேன்.

    நீங்கள் இதைப் பார்க்கும் விமானியாக இருந்தால், எனது கதை ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும், என் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன், என்று தெரிவித்தார்.

    • பாகிஸ்தானில் கடுமையான வெயில் வாட்டி வதைகிறது.
    • பாகிஸ்தானின் 2-வது பெரிய நகரான கராச்சியில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெயிலுக்கு 20 பேர் பலியாகினர்.

    கராச்சி:

    பாகிஸ்தானில் கடுமையான வெயில் வாட்டி வதைகிறது. வெப்ப அலை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் பாகிஸ்தானின் 2-வது பெரிய நகரான கராச்சியில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெயிலுக்கு 20 பேர் பலியானதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 101 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
    • குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு இல்லாத சூழ்நிலைதான் உள்ளது

    பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2023 அக்டோபர் மாதம் துவங்கி கடந்த ௯ மதங்களாக நீடித்து வரும் நிலையில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 37, 658 பேர் உயிரிழந்துள்ளனர். காஸா நகரம் போரினால் முற்றிலும் உருகுலைந்துள்ள நிலையில் தற்போது ராஃபா நகரின் மீது தனது கண்களை இஸ்ரேல் திருப்பியுள்ளது.

    அகதி முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச சமுதாயத்தின் கடும் எதிர்ப்புக்கு இஸ்ரேல் ஆளாகியுள்ளது. போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஐ.நா மெனக்கிட்டு வந்தாலும் இஸ்ரேல் பிடி கொடுப்பதாக தெரியவில்லை.

    எல்லைகளை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளதால் காசா மற்றும் ராஃபா நகரத்தில் தாக்குதல்களால் படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையும் நிவாரணப் பொருட்களும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 101 பாலஸ்தீனிய பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

     

     

    இந்நிலையில் ஐநாவின் பாலஸ்தீன நிவாரண பிரிவான UNRWA தலைவர் பிலிப் லசாரினி அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளார. அதாவது, காசாவில் சராசரியாக தினமும் 10 குழந்தைகள் தங்களது ஒன்று அல்லது இரண்டு கால்களையும் இழக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 10 குழந்தைகள் எனில் 260 நாட்களாக நடந்து வரும் இந்த போரில் காசாவில் சுமார் 2,000 குழந்தைகள் தங்களின் கால்களை இழந்துள்ளனர் .

     

     

    மேலும் தாக்குதலால் படுகாயமடைந்த குழந்தைகளின் கால்களை அகற்றும்போது சில சமயங்களில் மயக்க மருந்து கூட செலுத்துவதற்கு இல்லாத சூழ்நிலை இருப்பதாக பிலிப் லசாரினி தெரிவிக்கிறார். இந்த மொத்த போரிலும் இதுவரை சுமார் 21,000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து கோபமுற்ற போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தீ வைக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    உலகளவில் பேசு பொருளாக மாறி இருக்கும் கென்யா நாடாளுமன்ற போராட்டத்தில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஔமா ஒபாமா (Auma Obama) கலந்து கொண்டுள்ளார்.

    போராட்டம் தொடர்பாக பேசிய அவர், இங்கு என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள், இதனால் தான் இங்கு வந்துள்ளேன். இளம் கென்யர்கள் தங்களது உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்கள் கொடிகள் மற்றும் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். என்னால் இப்போது கூட கண் திறந்து பார்க்க முடியவில்லை. எங்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது என்று தெரிவித்தார்.

    கென்ய நாடாளுமன்ற போராட்டத்தில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் பலத்த காயமுற்றனர். 

    • ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு படையெடுத்தபோது உக்ரைன் விண்ணப்பம் செய்தது.
    • பேச்சுவார்த்தை தொடங்கிய போதும், முடிவடைய ஆண்டுகள் பல எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

    ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனின் பெரும் பகுதியை பிடித்துக் கொள்ள நினைக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    ரஷியாவின் படையெடுப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள உக்ரைன், தங்களை ஐரோப்பிய யூனியனுடன் சேர்த்துக் கொள்ள கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தற்போது உக்ரைனை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அனால இந்த பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைய ஒரு வருடத்திற்கு மேல் எடுத்துக் கொள்ளம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மையால் "இது வரலாற்று தினம். ஐரோப்பிய யூனியனில் எங்கள் நாட்டின் கூட்டணி "புதிய அத்தியாயம்" எனத் தெரிவித்துள்ளார்.

    பெல்ஜியம் (சுழற்சி முறையில் ஐரோப்பிய யூனியனின் தலைவர் பதவியை ஒரு நாடு ஏற்கும்) வெளியுறவுத்துறை மந்திரி ஹட்ஜா லஹ்பிப் "இது எங்கள் அனைவருக்கும் ஒரு வரலாற்று தருணம். மேலும் எங்கள் உறவில் ஒரு மைல்கல்" எனத் தெரிவித்துள்ளார்.

    உக்ரைனை தவிர்த்து மால்டோ நாடும் ஐரோப்பிய யூனியனில் இணைய விண்ணப்பித்துள்ளது. துருக்கி இணைவதற்கான பேச்சு வார்த்தை இரண்டு தசாப்தத்திற்கு மேலாக முடிவில்லாம் நீண்டது.

    ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையில் சரக்கு போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும். வரிவிதிப்பு, எனர்ஜி, சுற்றுச்சூழல், நீதித்துறை உரிமை, பாதுகாப்பு போன்றவற்றில் ஐரோப்பிய யூனியனின் 35 கொள்கைகளுக்கு ஏற்ப அதில் உள்ள நாடுகள் தங்களுடைய சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

    • கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது இருவர் உயிரிழப்பு.
    • இன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து ஒரு பகுதிக்கு தீவைத்தனர்.

    கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையிலான நிதி மசோதாவை தாக்கல் செய்யப்படுவதற்கு எதிராக போராட்டம் வெடித்தது.

    கடந்த சில தினங்களாக போராட்டம் நடைபெற்று வந்து நிலையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என நாடாளுமன்றத்திற்கு வெளியில் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.

    திடீரென ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் கோபம் அடைந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு தீவைத்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத்திற்குள் இருந்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது இருவர் உயிரிழந்தனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில உயிரிழப்பு நடைபெற்றது குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    ×