என் மலர்
நீங்கள் தேடியது "flight training"
இந்திய விமானப்படை, இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) அருகே மே 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விமானப் பயிற்சி நடத்த உள்ளது.
இந்த போர் பயிற்சி குறிப்பாக தென்மேற்கு விமானப்படை டிவிஷனில் வரும் ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நேரத்தில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில் போர் விமானங்களின் அதிக இயக்கம் இருக்கும் என்று NOTAM அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் ரபேல், மிராஜ் 2000 மற்றும் சுகோய்-30 விமானங்கள் உட்பட அனைத்து முன்னணி விமானங்களும் பங்கேற்க உள்ளது.
இந்தப் பயிற்சி மே 7ம் தேதி இரவு 9:30 மணிக்குத் தொடங்கி மே 8ம் தேதி அதிகாலை 3:00 மணி வரை தொடரும்.
- கொரோனா நோயிலிருந்து மீண்ட உடனேயே விமானம் பயணத்தை தொடங்கியது தவறு.
- நீங்கள் இதைப் பார்க்கும் விமானியாக இருந்தால், எனது கதை ஒரு எச்சரிக்கைக் கதையாக இருக்கும்.
டச்சு விமானியான நரைன் மெல்கும்ஜான், தனது விமான பயணத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விமானம் ஓட்டும் போது ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் குறித்து மற்ற விமானிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த பயணத்தின் போது விமானத்தின் விதானம் (கதவு) பாதி வழியில் திறந்து கொண்டது. இதனால் பதட்டமடைந்த மெல்கும்ஜான் விமானத்தை கட்டுப்படுத்த முயற்சித்தார். கதவை மூட மூடியாததால் விமானத்தை எப்படி தரையிறக்க போகிறோம் என்று யோசித்தவர், துரிதமாக செயல்பட்டார். கதவு திறந்து கொண்டதால், அவரால் கண்களை திறந்து பார்க்க முடியாத அளவுக்கு காற்று பலமாக வீசியது வீடியோவில் தெரிகிறது.
சில நிமிட போராட்டத்திற்கு பின் அவர் விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கினார். மேலும் விமான பயணத்திற்கு முன்பு நடத்த வேண்டிய சோதனைகளை சரியாக செய்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கொரோனா நோயிலிருந்து மீண்ட உடனேயே விமானம் பயணத்தை தொடங்கியது தவறு என்பதை இந்த பயணத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். அந்த பதட்டத்திற்கு மத்தியில், சத்தம் காரணமாக பயிற்சியாளரை தொடர்புகொள்ளும் போது என்னால் எதையும் சரியாக கேட்க முடியவில்லை. இருந்தாலும் பறந்து கொண்டே இருங்கள் என்று அவர் கூறியது மட்டும் தெளிவாக நினைவில் வைத்திருந்தேன்.
நீங்கள் இதைப் பார்க்கும் விமானியாக இருந்தால், எனது கதை ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும், என் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன், என்று தெரிவித்தார்.






