என் மலர்
உலகம்
- சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
ஏதென்ஸ்:
ஐரோப்பிய நாடான கிரீசில் சாண்டோரினி தீவு அமைந்துள்ளது. இங்கு கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் பதிவாகின.
இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாண்டோரினி தீவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதனையடுத்து நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை குறைக்க அரசின் வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைபிடிக்கும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
- இந்தியாவை சேர்ந்த இருவரும் அயர்லாந்தில் உள்ள ஒரு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.
- நண்பர்கள் 4 பேரும் காரில் மவுன்ட் லெய்ன்ஸ்டர் பகுதியில் இருந்து கார்லோ நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.
டப்ளின்:
அயர்லாந்தில் உள்ள கவுண்டி கார்லோ நகரில் வசித்து வந்தவர்கள் செருகுரி சுரேஷ் சவுத்ரி, பார்க்லகவ் சிந்தூரி. இந்தியாவை சேர்ந்த இருவரும் அயர்லாந்தில் உள்ள ஒரு தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். தனது நண்பர்கள் 2 பேருடன் இவர்கள் கார்லோ நகரில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தனர்.
சம்பவத்தன்று நண்பர்கள் 4 பேரும் காரில் மவுன்ட் லெய்ன்ஸ்டர் பகுதியில் இருந்து கார்லோ நகருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் செருகுரி சுரேஷ் சவுத்ரி மற்றும் பார்கவ் சிந்தூரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் அங்குள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
- காப்பகத்தில் உள்ள சலவை அறையில் திடீரென தீப்பிடித்தது.
- சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதியோர் காப்பகம் செயல்படுகிறது. அங்கு 75-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தில் உள்ள சலவை அறையில் திடீரென தீப்பிடித்தது.
பின்னர் மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களின் சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
ஆனால் அதற்குள் தீயில் கருகி 3 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
- அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் இனத்தவர் தலைமையிலான படைகளுடன் மோதலில் ஈடுபடுகின்றன.
வடக்கு சிரியா நகரத்தின் புறநகர் பகுதியில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரின் புறநகர் பகுதியில் இன்று விவசாய தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரில் குண்டு வெடித்தது.
இதில் 1 ஆண் மற்றும் 14 பெண்கள் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் சிரிய சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் 15 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இந்த தாக்குதலில் 18 பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
கடந்த டிசம்பரில் அதிபர் ஆசாத் ஆட்சி கிளர்ச்சிக் குழுக்களால் கவிழ்க்கப்பட்டது முதலே இப்பகுதிகளில் வன்முறை நிலவி வருகிறது.
சிரிய தேசிய இராணுவம் என்று அழைக்கப்படும் துருக்கிய ஆதரவு பிரிவுகள், அமெரிக்க ஆதரவுடைய குர்திஷ் இனத்தவர் தலைமையிலான படைகளுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த புதனன்று நாட்டின் இடைக்கால அதிபாராக அல்- நுஸ்ரத் என்ற முக்கிய கிளர்ச்சிப் படையின் தலைவரான அஹ்மத் அல்-ஷாரா நியமிக்கப்பட்டார்.
நேற்றைய தினம் சவுதி அரேபிய இளவரசரை அந்நாட்டுக்கு சென்று அஹ்மத் அல்-ஷாரா சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார்.
- கனடா, சீனா, மெக்சிகோ மீதான அமெரிக்கவின் வரிவிதிப்பு வருத்தமளிக்கிறது.
அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. மெக்சிகோவும் சீனாவும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் வரிவிதிப்போம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "ஐரோப்பிய யூனியன் மீது புதிய வரிகளை விதிப்பேன். அவர்கள் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே வரிவிதிப்பு எப்போது என்ற சொல்ல மாட்டேன். ஆனால், விரைவில் நடக்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் டிரம்ப் தங்கள் மீது வரிவிதித்தால் கடுமையான பதிலடி கொடுப்போம் என ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஐரோப்பிய யூனியன் செய்தி தொடர்பாளர், கனடா, சீனா, மெக்சிகோ மீதான அமெரிக்கவின் வரிவிதிப்பு வருத்தமளிக்கிறது.
தேவையற்ற வரிகள் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். இது அனைத்து தரப்பையும் பாதிக்கும். ஐரோப்பிய யூனியன் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று தெரித்துள்ளார்.

உலகமயமாக்கல் காரணமாக அனைவரும் பயனடையும் சூழலில் டிரம்ப் வரிவிதிப்பு மூலம் உலகை துண்டாட முயற்சிக்கிறார் என்று ஜெர்மன் அதிபர் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு ஜப்பானும் அச்சம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இந்தியா சீனா, ரஷியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு டாலருக்கு பதிலாக புதிய கரன்சியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். இதனால் சர்வதேச அளவில் டிரம்பின் நடவடிக்கைகளால் வர்த்தக போர் மூண்டுள்ளது.
- கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
- விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்
அண்டை நாடான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். எண்ணை இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி சக்திகளுக்கு 10 சதவீத வரி விதித்தார். இதைத்தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதை தடுக்க அந்நாடுகள் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக்கூறி அமெரிக்கா இந்த அதிரடி வரிவிதிப்பில் இறங்கியது.
டிரம்பின் இந்த நடவடிக்கை கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதே போல சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளும் அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது.
இந்த வர்த்தக போரால் அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் குறுகிய காலத்தில் விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.
அமெரிக்கா வரிகளுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை யாக கனடா, மெக்சிகோ நாடுகள் செயல்படுகிறது. இதனால் அமெரிக்க மக்கள் பொருளாதார வலியை உணரக்கூடும்.
அமெரிக்க நலனை பாதுகாக்க இந்த வலிக்கு விலை மதிப்பு அதிகம். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம். கனடாவில் உற்பத்தி யாகும் எந்த பொருளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது.
நாங்கள் சொந்தமாக அந்த பொருட்களை உருவாக்குவோம். எங்களுக்கு தேவையான அளவை விட அதிகமாக வைத்து இருப்போம்.
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக உருவாக்குவோம். இதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைவான வரி, ராணுவ பாதுகாப்பு ஆகியவைகளை வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது.
- அமெரிக்காவின் வரிவிதிப்பு சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.
அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்தது. மெக்சிகோவும் விரைவில் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அமெரிக்காவின் வரிவிதிப்பு சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுவதாக உள்ளது.
அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும். அமெரிக்கா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உலக வர்த்தக கூட்டமைப்பில் [WTO] இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் சீனா எச்சரித்துள்ளது.
- விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.
- விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூ யார்க் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பான சூழல் உருவானது. ஜார்ஜ் புஷ் இன்டர்காண்டினென்டல் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட நிலையில், திடீரென தீப்பிடித்துள்ளது.
விமானம் புறப்பட தயாரான போது அதன் இறக்கைகளில் ஒன்றில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறின. இதையடுத்து விமானம் டேக் ஆஃப் ஆவது ரத்து செய்யப்பட்டது. மேலும், விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ஹூஸ்டன் தீயணைப்புத் துறை (HFD) தெரிவித்துள்ளது.
"விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் டேக் ஆஃப் ஆகும் முன் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ஹூஸ்டன் தீயணைப்பு துறையின் விமான நிலைய மீட்பு தீயணைப்பு வீரர்கள் களத்திற்கு விரைந்து சென்று, விமானத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை," என்று ஹூஸ்டன் தீயணைப்பு துறை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்குள் அமெரிக்காவில் மட்டும் இரண்டு விமான விபத்துகள் அரங்கேறிய நிலையில், இந்த சம்பவம் விமானத்தில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணிகளில் சிலர் தீப்பிழம்புகளைக் கண்டதும் அதனை வீடியோ பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அரங்கேறிய விமானத்தில் 104 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
- அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
- ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த சம்பவம் அரங்கேறியது.
ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்ததோடு, ஒரு விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர். சமீபத்தில் தான் தமிழகத்தை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
- செலினா கோம்ஸ்-க்கு துணிச்சலான தாய்மார்கள் சொல்வது இதுதான்
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அந்நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவற்றை நாடு கடத்தி வருகிறார். கொலம்பியா, மெக்சிகோ, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முதற்கட்டமாக நாடுகடத்தப்பட்டனர்.
கைவிலங்கிட்டு, குடிக்க தண்ணீர் இல்லாமல், விமானத்தில் ஏசி இல்லாமல் அவர்களை அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தியதாக பிரேசில் குற்றம்சாட்டியது. இதற்கிடையே நாடு முழுவதும் குடிவரவு [கஸ்டம்ஸ்] அதிகாரிகள் ஆவணங்கள் இல்லாதோரை தேடித் தேடி கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மெக்சிகோ மற்றும் இத்தாலி வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க பாப் பாடகி செலினா கோம்ஸ் தனது மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
சில மணி நேரங்களிலேயே அதை அவர் நீக்கினார். ஆனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவுக்கு வெள்ளை மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.
சட்டவிரோத குடியேறிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் 3 நபர்களுடைய தாய்மார்களின் வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது. கெய்லா ஹாமில்டன், ஜோஸ்லின் நுங்கரே மற்றும் ரேச்சல் மோர் ஆகியோரின் பிள்ளைகள் சட்டவிரோத 'ஏலியன்'களால் கொல்லப்பட்டனர்.
செலினா கோம்ஸ்-க்கும் நமது எல்லைகளைப் பாதுகாப்பதை எதிர்ப்பவர்களுக்கும் இந்த துணிச்சலான தாய்மார்கள் சொல்வது இதுதான் என்று இந்த வீடியோவை வெள்ளை மாளிகை பகிர்நதுள்ளது.
அதில் பேசும் அவர்கள், 'நீங்கள் [செலினா கோம்ஸ்] யாருக்காக அழுகிறீர்கள் என உங்களுக்கு தெரியாது. சட்டவிரோத குடியேறிகளால் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்து கொடூரமாக கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பதில். அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்காக அழவில்லையே' என்று தெரிவித்தனர்.
மேலும் செலினா கோம்ஸ் பொய்யான அழுகையை வெளிப்படுத்தி நாட்டில் சட்டமற்ற நிலையை ஊக்குவிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்.
- ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சிக்கன் உணவுக்குள் கத்தி இருந்ததாக கூறி அதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
- வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டனர்.
சமீப காலமாக உணவுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி என்ற பெண் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த சிக்கன் உணவுக்குள் கத்தி இருந்ததாக கூறி அதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
வீடியோவுடன் அவரது பதிவில், சம்பவத்தன்று உள்ளூர் ஓட்டலில் சிக்கன் உணவு ஒன்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்திருந்தேன். உணவு வீட்டுக்கு வந்தவுடன் ஆர்வமாக சாப்பிட தொடங்கினேன். அப்போது, பல்லில் ஏதோ கடினமான பொருள் கடிபடுவதை உணர்ந்தேன். அது கேரட் துண்டுகளாக இருக்கலாம் என தவறாக நினைத்தேன். ஆனால் உணவை பிரித்து பார்த்தபோது அதற்குள் ஆரஞ்சு நிற கைப்பிடியுடன் கூடிய கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த வீடியோவை பார்த்த பலரும் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டனர்.
- அதிரிபுதிரியாக ரிங்கில் இறங்கிய ஜேசன், ஓடிஸ் - ஐ எலிமினேட் செய்ய பிரோன் பிரேக்கருக்கு உதவிசெய்தார்.
- இனி தனது வாழ்நாளில் WWE பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டேன் என ஜேசன் உறுதி பூண்டுள்ளார்.
உலகளப் பிரசித்தி பெற்ற யூடியூபர், ஐ ஷோ ஸ்பீட்[IShowSpeed] எனப்படும் டேரன் ஜேசன். இவர் சமீபத்தில் WWE ராயல் ரம்பில் 2025 நிகழ்ச்சியில் பங்கேற்றார். போட்டியாளர் அகிரா டோசாவா கயாத்தால் விளையாடமுடியாமல் இருந்த நிலையில் அவருக்கு பதிலாக யூடியூபர் ஜேசன் ரிங்கில் இறக்கிவிடப்பட்டார்.

அதிரிபுதிரியாக ரிங்கில் இறங்கிய ஜேசன், ஓடிஸ் - ஐ எலிமினேட் செய்ய பிரோன் பிரேக்கருக்கு உதவிசெய்தார். ஓடிஸ் எலிமினேட் ஆன அடுத்த கணமே ஜேசன் பக்கம் திரும்பிய பிரோன் பிரேக்கர் அவரை ஸ்பியர் ஷாட்டை பயன்படுத்தி சில நிமிடங்களில் அல்லோலகல்லோல பட வைத்தார்.
அந்தரத்தில் ஜேசனை தூக்கி அவர் ஆடிய ருத்ர தாண்டவத்தால் ஜேசன் படுகாயமடைந்தார். இறுதியில் ஜேசன் நிற்பதற்கே ஊன்றுகோலைப் பயன்படுத்த வேண்டிய பரிதாப நிலைமைக்கு ஆளானார். இனி தனது வாழ்நாளில் WWE பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டேன் என ஜேசன் உறுதி பூண்டுள்ளார்.






