என் மலர்tooltip icon

    உலகம்

    • போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
    • காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    நேபாளத்தில், 2007-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு குடியரசு உருவானது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

    இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.

    இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் ஞானேந்திராவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போராட்டங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஞானேந்திரா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் பாதுகாப்பை அரசாங்கம் குறைத்துள்ளது. அவரது வீட்டிற்கான பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டது.

    ஞானேந்திராவின் பாதுகாப்பு வீரர்களின் குழுவையும் அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாகவும், அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த வன்முறைகளுக்கு முன்னாள் மன்னர் ஞானேந்திரா பொறுப்பேற்கவேண்டும் என நேபாள காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மன்னராட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள், இந்து ஆதரவு போராட்டக்காரர்களின் பின்னணியில் ஞானேந்திரா இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் குற்றம்சாட்டினார். 

    • அனுமதியின்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார்
    • அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் செயல்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 இல் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கப் பெண் பாயே ஹால் என்பவரை தலிபான்கள் சிறைபிடித்தனர்.

    ஆப்கனிஸ்தான் வந்த அவர் அனுமதியின்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை விடுவிப்பதற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.

    இதற்கிடையே அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் நாட்டின் முயற்சியால் பாயே ஹால் விடுவிக்கப்பட்டார். அவர் காபூலில் உள்ள கத்தார் தூதரகத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    • மியான்மரில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
    • மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தகவல்.

    மியான்மரின் இரண்டாவது பெரிய நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் தெருக்களில் மக்கள் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலறினர். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மியானமரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, மேலும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

    இதுவரை, 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 3,400 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.
    • தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கான்வாயில் சென்ற வாகனங்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாகனம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து இந்த சம்பவம் அதிபர் புதினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.

    இந்த சம்பவம் மாஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமையகமான எஃப்.எஸ்.பி. அருகே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்களில் கார் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.

    அதிபர் கான்வாயில் இடம்பெற்று இருந்த ஔரஸ் செனட் லிமோசின் ரக கார் ஒன்றின் எஞ்சின் பகுதியில் தீ ஏற்பட்டு, பிறகு முகப்பு பகுதி முழுக்க பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காரின் பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளது. தீப்பிடித்து எரிந்த காரில் இருந்தது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. 

    • மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பீதியடைந்தனர்.

    இந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4-ஆக பதிவானது.

    நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

    • நம்பிக்கை தெரிவித்ததாக அல்-ஹயா கூறினார்.
    • பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தொடர் ஆலோசனைகளை நடத்தினார்.

    இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும், ஐந்து பணயக் கைதிகளை விடுவிப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்து இருக்கிறது. இந்த முறை சரியாக 50 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும்.

    ரமலான் முடிவை குறிக்கும் ஈத், சனிக்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை முடிவடைகிறது. ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயா, ஒரு தொலைக்காட்சி அறிக்கையின் போது, குழுவின் "நேர்மறையான" பதிலையும் அதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டதையும் உறுதிப்படுத்தினார் என சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.

    ஹமாஸ் ஆரம்ப போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை "முழுமையாகக் கடைப்பிடித்துள்ளது" என்றும், இஸ்ரேல் "இந்த திட்டத்தைத் தடுக்காது" என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் அல்-ஹயா கூறினார்.

    எகிப்து அறிவித்த போர் நிறுத்த ஒபந்தத்திற்கு இஸ்ரேல் ஒரு எதிர் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.

    மத்தியஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தொடர் ஆலோசனைகளை நடத்தினார். இதன் பிறகு, இஸ்ரேல் தனது எதிர் திட்டத்தை அமெரிக்காவுடன் முழு ஒருங்கிணைப்புடன் மத்தியஸ்தர்களுக்கு வழங்கியுள்ளது," என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறியது. இஸ்ரேல் தரப்பில் வழங்கப்பட்டுள்ள எதிர் திட்ட விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.

    காசாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியது. மேலும் இம்மாத தொடக்கத்தில் முழுமையான மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்து நிறுத்தியது. இதுதவிர மீதமுள்ள 24 பணயக்கைதிகள் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் வரை அல்லது விடுவிக்கப்படும் வரை தனது படைகள் காசாவின் சில பகுதிகளில் நிரந்தரமாக இருக்கும் என்று கூறியது.

    • நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.
    • இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம் 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாளம் மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

    இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

    • மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தில் 3000-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    பாங்காக்:

    மியான்மர் நாட்டின் மண்டாலே நகரருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்திற்கு பின்பும் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன.

    இதனால் கட்டிடங்கள் பல அடியோடு சரிந்தன. வரலாற்றுச் சிறப்புமிக்க துறவிகளுக்கான மடாலயமும் இதனால் பாதிக்கப்பட்டது. 2 பாலங்கள் இடிந்து விழுந்தன. 5 நகரங்கள் கட்டிட இடிபாடுகளைச் சந்தித்துள்ளன.

    இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1644 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மரில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதேபோல், தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    • கேளிக்கை நிகழ்ச்சியின்போது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
    • இந்தத் துப்பாக்கிச் சூடு சம்ப்வத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் அமைந்துள்ள சியாட்டில் நகரின் டகோமா பகுதியில் உள்ள வீட்டில் இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இரவு 12 மணியளவில் (உள்நாட்டு நேரப்படி) கேளிக்கை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் மீது ஒரு சிறுவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவனை கைதுசெய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
    • ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது

    மியான்மர்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.

    பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிக்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது. கட்டடங்கள் பல தரைமட்டமாகின.

    இன்று காலை மியான்மரின் ராணுவ ஆட்சிக்குழு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் மியான்மரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 04.30 மணியளவில் மியான்மரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.  மாண்டலே நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    முன்னதாக ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
    • தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.

    சொந்த வீடு வாங்குவது பலரின் கனவாக இருக்கும். ஆனால் அந்த கனவுக்காக ஒருவர் எந்த எல்லையையும் கடக்கலாம் என்பதற்கு உதாரணமாக சீன பெண் ஒருவர் திகழ்ந்து வருகிறார்.

    சீனாவில் யாங் என்ற 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். அதிகரித்து வரும் வாடகை செலவுகளையும் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    மாதம் ரூ.34,570 சம்பாதிக்கும் யாங் வாடகையாக ரூ.545 மட்டுமே செலுத்துகிறார். குளிப்பது, சமைப்பது, துணிகளை துவைப்பது, உறங்குவது என அனைத்து வேலைகளையும் அந்த சிறிய இடத்திலேயே அவர் செய்து கொள்கிறார்.

    பணிநேரங்களில் மற்றவர்கள் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தனது உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றி விடுகிறார்.



    ஆரம்பத்தில், யாங் மாதத்திற்கு ரூ. 2,290 வாடகை செலுத்த முன்வந்தார். ஆனால் அவரது முதலாளி அதற்கு மறுத்துவிட்டார். தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.

    கடையில் தங்குவதற்கு அலுவலக இடம் வழங்கப்பட்டாலும், கதவு இல்லாததால் யாங் சங்கடமாக உணர்ந்தார். எனவே தற்போது ஓய்வறையில் வசிக்கும் யாங், கதவில் துணியை  தொங்கவிட்டு, தனது வீடாக அதை பாவிக்கிறார்.

    மேலும் இரவில் மடிப்பு படுக்கையை உபயோகிக்கிறார். தனது ரூ.34,570 மாத சம்பளத்தில் யாங் தனது செலவுகளை வெறும் ரூ. 4,500 ஆகக் குறைத்து கடும் சிக்கனத்துடன் வாழ்ந்து வருகிறார்.

    • உக்ரைன் ரஷியா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா பேச்சுவார்த்தை.
    • 30 நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை இன்னும் முடிவடையவில்லை. இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    30 நாள் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகளிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான நிலையை வலுவாக்கிக் கொள்ள ரஷியா புதிய ராணுவ தாக்குதலை தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் கருதுகிறது.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில் "ரஷியா பேச்சுவார்த்தையை இழுத்தடித்து, இன்னும் அதிகமான நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறது. புதின் வலுவான நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×