search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kathmandu"

    • உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    • ஜன்னல்கள், கூரைகள் தங்கம் கலந்த செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

    நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ளது தவளகிரி மலைப்பகுதி. இதையொட்டி அமைந்த ஒரு கிராமம் தான், 'சங்கு. திருமாலின் கரத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய திருச்சங்கின் பெயரில் அமைந்த இந்த கிராமத்தில், 'சங்குநாராயணர் கோவில்' என்ற பெயரில் திருமாலுக்கு ஒரு ஆலயமும் அமைந்திருக்கிறது. நேபாளத்தில் மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவில், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஆலயம் நேபாள நாட்டின் பவுத்த கட்டிடக் கலை அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் கி.மு.325-ம் ஆண்டு, லிச்சாவி வம்ச மன்னன் ஹரி தத்தா வர்மனின் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

    இந்த ஆலயத்தின் தரை தளத்தில் அமைந்த கல் தூண்களில், கி.பி. 496-ம் ஆண்டு முதல் கி.பி.524-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மகாதேவன் என்ற மன்னனின் படையெடுப்புகள் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை கி.பி.1585 முதல் 1614-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சிவ சிம்ம மல்லன் என்ற அரசனின் பட்டத்து அரசியான கங்கா ராணி என்பவர். இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துள்ளார்.

    இந்த கோவிலின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரைகள் அனைத்தும் தங்கம் கலந்த செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இதனை கி.பி.1708-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்த பாஸ்கர மல்லர் என்ற மன்னன் செய்திருக்கிறான். கருங்கற்களால் இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்ட இந்த ஆலயம், நேபாள நாட்டிலேயே மிகவும் பழமையானது என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலைச் சுற்றிலும் திருமாலுக்கு உரிய சிற்பங்கள் அதிகமாக செதுக்கப்பட்டுள்ளன.

    முதன்மை கோவிலின் பிரகாரத்தில் சிவன், கிருஷ்ணர், சின்ன மஸ்தா ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் அமைந்துள்ளன. அந்த சன்னிதிகளின் வாசல்களின் சிங்கங்கள், சரபங்கள், யானைகள் மற்றும் யாழி சிற்பங்கள் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளன.

    திருமாலின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் வகையிலான சிற்பங்கள் இந்த ஆலயத்தின் கூரையை தாங்கியபடி அமைந்துள்ளது. மேற்கு வாசலின் எதிரில் உள்ள தூணில் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கட்கம் மற்றும் தாமரை ஆகியவற்றின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த துண் கி.மு.464-ம் ஆண்டு லிச்சாவி இன மன்னன் மனதேவன் என்பவரால் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் சில முக்கிய சிற்பங்கள் போற்றுதலுக்குரியதாக உள்ளன.

    அவற்றில் திருமாலின் வாகனமான கருடனின் சிற்பமும் ஒன்று. இது தவிர கருட வாகனத்தில் பறக்கும் திருமாலின் 7-ம் நூற்றாண்டு சிற்பம் சிறப்புற அமைந்துள்ளது. இந்த தெய்வத்தை 'சந்திர நாராயணர்' என்று அழைக் கிறார்கள்.

    மேலும் கலைநயத்துடன் அமைந்த விஷ்ணு, லட்சுமி மற்றும் கருடன் சிற்பங்கள், சின்ன மஸ்தா என்ற தேவி, தன்னுடைய தலையை தானே கொய்து, பசித்திருக்கும் டாகினி மற்றும் வார்னீ என்ற யட்சிகளுக்கு ரத்தம் வழங்குதல், அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபசரிக்கும் கண்ணனின் விஸ்வரூபக் காட்சி, இரணியகசிபுவை வதம் செய்து பிரகலாதனைக் காத்த நரசிம்மர் ஆகியோரது சிற்பங்களும், இரண்டாம் அடுக்கில் அமைந்த சிவன் கோவிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

    இந்த ஆலயத்தில் தினமும் பூஜைகள் நடைபெறுவதில்லை. ஏகாதசி, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தின் முக்கியமான திருவிழாவாக. சங்கு நாராயணர் யாத்திரை திருவிழாவும், மகாஷானன் திருவிழாவும் உள்ளன.

    அமைவிடம்

    காத்மாண்டு நகரத்தில் கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், பக்தபூர் நகரின் வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும் சங்குநாராயணர் கோவில் அமைந்துள்ளது.

    • காத்மாண்டு பகுதியில் காலராவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவுக்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு.

    காத்மாண்டு:

    சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நொருக்கு தீனி வகைகளில் பானிபூரி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாலை வேலைகளில் ஏராளமானோர் பானி பூரி கடைகளுக்கு படையெடுப்பது அதிகரித்து வரும் நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காத்மாண்டு பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பானிபூரி விற்பனை கடைகள் உள்ளன. இங்கு அச்சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் லலித்பூர் பகுதியில் காலாரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 19ந் தேதி ஒருவருக்கு காலார பாதிப்பு நோய் ஏற்பட்ட நிலையில், தற்போது 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் எட்டு பேர் குணமடைந்த  வீடு திரும்பினர். மேலும் நான்கு பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாக்பஜாரில் இருவர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஒருவாரம் பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்தனர். எனினும் இதற்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு முற்றிலும் பொருத்தமற்றது என்றும், இது சிறு வணிகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனறும், அதற்கு பதில் சுகாதாரமான தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    முன்னதாக நேபாளம் முழுவதும் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காரணமாக 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரையில் 911 பேர் சுகாதார சீர்கேட்டால் இறந்துள்ளனர்.

    பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். #BIMSTECSummit #Modi
    புதுடெல்லி:

    வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு நேபாளத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.



    வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

    இந்த மாநாட்டின்போது பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச உள்ளார். பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

    பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை மேலும் ஒருங்கிணைத்து, அமைதியான மற்றும் செழிப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #BIMSTECSummit #Modi

    நேபாளம் நாட்டில் இருநாள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை புதுடெல்லி புறப்பட்டார். #ModileavesKathmandu
    காத்மாண்டு:

    இருநாள் அரசு முறை பயணமாக நேபாளம் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி சீதை பிறந்த இடமான ஜனக்புரியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அயோத்தி நகருக்கு புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    புதிய மின்சார உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல்லையும் நாட்டினார்.

    இன்று காலை மஸ்ட்டாங் மாவட்டத்தில் உள்ள முக்திநாத் ஆலயத்துக்கு சென்ற அவர் புத்த - இந்து மத சம்பிரதாயங்களின்படி முக்திநாதரை வணங்கினார்.

    பிற்பகல் பசுபதிநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்த மோடி, காத்மாண்டு நகரில் உள்ள பிரபல ஓட்டலில் இந்திய தூதர் மஞ்சீவி சிங் பூரி அளித்த விருந்தில் பங்கேற்றார்.


    நேபாளம் முன்னாள் பிரதமர் புஷ்பா கமால் தஹால் பிரச்சாந்தா-வை அவர் சந்தித்து பேசினார். காத்மாண்டு மாநகராட்சி சார்பில் இன்று மாலை அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

    இந்த விழாவின்போது அவரை கவுரவிக்கும் வகையில் காத்மாண்டு நகரின் சாவியை மேயர் பிட்யா சுந்தர் ஷாக்கியா அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யுத்தப் பாதையில் இருந்து புத்தப் பாதைக்கு திரும்பிய நேபளத்தின் சிறப்பை பாராட்டி பேசினார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தின் வளர்ச்சிக்கு மலையேற்றக்குழு வழிகாட்டி போல் நின்று உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிகழ்ச்சியின்போது 55 கிலோ எடையிலான புத்தர் சிலை உள்பட அவருக்கு பல்வேறு நினைவு பரிசுகள் அளிக்கப்பட்டன. பின்னர், அனைவரிடம் இருந்தும் விடைபெற்ற பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #ModileavesKathmandu
    2 நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #ModiInNepal
    காத்மாண்டு:

    நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கு நேரடியாக சென்றார்.

    விமான நிலையத்தில் இருந்து ஜானகி கோவிலுக்கு சென்ற மோடியை நேபாள பிரதமர் சர்மா ஒலி வரவேற்றார். பின்னர் ஒலியுடன் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மோடி. அதன்பின்னர் ஜனக்பூரில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு இயக்கப்படும் நேரடி பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    இதனை அடுத்து, அந்நாட்டு அதிபர் பந்தாரி மற்றும் பிரதமர் சர்மா ஒலி ஆகியோரை தனித் தனியாக சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இந்தியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட உள்ள நீர் மின்நிலைய திட்டங்களுக்கு மோடி மற்றும் சர்மா ஒலி இணைந்து அடிக்கல் நாட்டினர். #ModiInNepal
    ×