என் மலர்tooltip icon

    உலகம்

    • அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார்.
    • இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அதிக வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஏப்ரல் 2-ம் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப் போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் எனவும் கூறி வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    பிற நாடுகளின் பொருட்கள் மீதான வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்ததை அடுத்து ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளது.

    ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 2.68% சரிவையும், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு 1.16% சரிவையும், சீனாவின் CSI 300 குறியீடு 0.48% சரிவையும், தென் கொரியாவில், கோஸ்பி குறியீடு 1.29% சரிவையும், ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 குறியீடு 1.17% சரிவையும் சந்தித்தது.

    • இந்த நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
    • இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    நைபிடாவ்:

    மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

    மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,003 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல், தாய்லாந்தில் நிலநடுக்கத்தில் மாயமான 100-க்கும் அதிகமானோரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார்.
    • இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அதிக வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஏப்ரல் 2-ம் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப் போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும், அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் எனவும் கூறி வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் இந்த வரி வதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் அபாயமும், பொருளாதார நிச்சயமற்ற சூழலும் ஏற்படும் அபாயமும் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர்.

    • கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

    மியான்மருக்குப் பிறகு, இப்போது ஜப்பானிலும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஜப்பானின் கியூஷு பகுதியில் இந்திய நேரப்படி இரவு 7:34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) படி, கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கத்தின் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலஅதிர்வு உணரப்பட்டது.

    இதுவரை பெரிய அளவிலான சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. மூன்றாவது பெரிய தீவு கியூஷு அடிக்கடி நில அதிர்வுவுக்கு உள்ளாகும் இடமாகும்.

    தற்போதைய நிலநடுக்கத்திற்கு பின்னர், உள்ளூர் நிர்வாகம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

    முன்னதாக, மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000 த்தை தாண்டியுள்ளது.

    • 342 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் எலான் மஸ்க் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்
    • இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

    ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது.

    தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து பட்டியலில் சீனா (516) மற்றும் இந்தியா (205) பில்லியர்களை கொண்டுள்ளன. 342 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2 வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

    முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

    ஆனால் கடந்தாண்டு 116 பில்லியன் டாலராக இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 92.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளதால் அவர் உலகளவில் பணக்காரர் பட்டியலில் 18 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 56.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 28வது இடத்தில் உள்ளார். 

    • 2013 முதல் 2014 வரை மக்கள் தங்களுடைய வாக்குரிமைக்காக போராடியபோது அதிக அளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
    • அவாமி லீக் அரசியலுக்கு எதிர்ப்பு தெரித்தவர்கள் பயங்கரவாதிகள், போராளிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

    ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு ஓடிவிட்டனர் என வங்கதேச இடைக்கால அரசின் தகவல் ஆலோசகர் மஹ்ஃபுஜ் ஆலம் தெரிவித்துள்ளார்.

    வங்கதேசத்தில் காணாமல் போனர்வர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற ரம்ஜான் பண்டிகை விழா டாக்காவில் நடைபெற்றது. மனித உரிமை குழுவான மேயர் டக் (Mayer Dak) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மஹ்ஃபுஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக மஹ்ஃபுஜ் ஆலம் கூறியதாவது:-

    ஷேக் ஹசீனாவின் பெற்றோர்கள் படுகொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் அல்லது கொலை செய்தலை ஷேக் ஹசீனா பயன்படுத்தியுள்ளார்.

    2013 முதல் 2014 வரை மக்கள் தங்களுடைய வாக்குரிமைக்காக போராடியபோது அதிக அளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய நோக்கம் தேர்தல் முறையை அழிப்பதாகும்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கமிஷனின் அறிக்கைப்படி, தனிப்பட்ட பல்வேறு நபர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.

    அவாமி லீக் அரசியலுக்கு எதிர்ப்பு தெரித்தவர்கள் பயங்கரவாதிகள், போராளிகள் என முத்திரை குத்தப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் தங்கி நாட்டிற்கு எதிராக ஹசீனா இன்னும் சதித்திட்டங்களை தீட்டி வருகிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மாஃபியா குழு போன்று அவாமி லீக் செயல்பட்டு வருகிறது. ஒருபோதும் மீண்டும் வங்கதேச அரசியலக்கு திரும்ப அனுமதிக்கப்படமாட்டாது.

    ஷேக் ஹசீனாவுக்கும், அவருடைய பயங்கரவாத படைகளுக்கும் அடைக்கலம் கொடுக்க இந்தியா தேர்வு செய்தது துரதிருஷ்டவசமானது. கிட்டத்தட்ட 1,00,000 அவாமி லீக் உறுப்பினர்கள் அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.

    வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் 16 ஆண்டு கால அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. உடனடியாக வங்கதேசத்தில் இருந்து ரகசியமாக வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இவ்வாறு மஹ்ஃபுஜ் ஆலம் தெரிவித்தார்.

    வங்கதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து படுகொலை, ஊழல் தொடர்பாக 100-க்கும் அதிகமான வழக்குகள் அவருக்கு எதிராக போடப்பட்டுள்ளது.

    மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது படுகொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது விசாரணையைத் தவிர்க்க வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

    • ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் ஆகியவை ஏற்க மறுத்தன.
    • "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன் தெரிவித்தார்.

    30 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள, கலோரி கண்காணிப்பு செயலியை உருவாக்கிய CAL AI என்ற அமரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) உள்ளவர் சாக் யாதேகரி (Zach Yadegari) (18 வயது). பள்ளியில் படிக்கும்போதே இந்நிறுவனத்தை அவர் உருவாக்கினார்.

    சாப்பிடும் உணவை ஸ்கேன் செய்தால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை செயலி காண்பிக்கும். 

    இளம் வயதில் உயரிய பொறுப்புடனும் மில்லியனர் ஆகவும் வளம் வருகிறார். மாதத்திற்கு 2 மில்லியன் டாலர் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தான் படிக்க விரும்பி விண்ணப்பத்தை பிரபல பல்கலைக்கழகங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்போர்ட், யேல், கொலம்பியா மற்றும் பிரின்ஸ்டன் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.

    இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் வயதிலேயே இத்தனை திறமையாக உருவெடுத்த இவரை அப்பல்கலைக்கழகங்கள் எப்படி நிராகரிந்தன என்பது குறித்து பலரும் தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். "அது முட்டாள்தனம்," என்று ரெடிட் இணை நிறுவனர் அலெக்சிஸ் ஓஹானியன், சாக்கின் எக்ஸ் பதிவிற்கு பதிலளித்தார். 

    • பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை நசுக்கி, அப்பகுதியை க்ளீன் செய்ய தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
    • அதிக இடங்களை கைப்பற்றி இஸ்ரேல் நாட்டிற்கான பாதுகாப்பு பகுதியாக சேர்க்கப்படும்.

    இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். அத்துடன் 250-க்கும் அதிகமானோரை பணயக் கைதிகளை பிடித்துச் சென்றனர். இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா முனை மீது தாக்குதல் நடத்தியது.

    இதனால் இஸ்ரேலுக்கும்- ஹமாஸ்க்கும் இடையில் போர் மூண்டது. அடுத்த மாதம் (2023 நவம்பர்) பணயக் கைதிகளை விடுவிக்க இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியது.

    அதன்பின் சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஏழு வார ஒப்பந்தத்தில் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஏழு வாரத்திற்குப் பிறகு போர் நிறுத்தம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் மார்ச் தொடக்கத்தில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. காசாவுக்கு செல்லும மனிதாபிமான உதவிகளை நிறுத்தியது.

    இந்த நிலையில் காசா முனையில் ராணுவ தாக்குதலை விரிவுப்படுத்தி கொண்டிக்கிறோம் என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறுகையில் "பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை நசுக்கி, அப்பகுதியை க்ளீன் செய்ய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றி இஸ்ரேல் நாட்டிற்கான பாதுகாப்பு பகுதியாக சேர்க்கப்படும். காசா குடியிருப்புவாசிகள் ஹமாஸ் அமைப்பினரை வெளிப்படுத்தி, அனைத்து பணயக் கைதிகளையும் திருப்பு அனுப்ப வேண்டும்" என்றார்.

    ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 59 பணயக் கைதிகள் உள்ளனர். அவர்களில் 24 பேர் உயிரிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

    பாலஸ்தீனத்தின் தெற்கு நகரான கான் யூனிஸில் இஸ்ரேல் நேற்று இரவில் இருந்து நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நிலநடுக்கத்தில் 2,719 பேர் பலியாகி உள்ளதாகவும், 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
    • இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்க்கப்பட்ட வண்ணம் உள்ளன.

    மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்க்கப்பட்ட வண்ணம் உள்ளன.

    நிலநடுக்கத்தில் 2,719 பேர் பலியாகி உள்ளதாகவும், 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் மாயமாகி உள்ளதாகவும் மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் மியான்மரில் 10 ஆயிரம் கட்டிடங்கள் வரை இடிந்துள்ளதாக கணக்கிட்டுள்ளது.

    இடிபாடுகளில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் மனதை உடைப்பதாக உள்ளது. இதற்கிடையே கடும் போராட்டத்துக்கு 26 வயது இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது கவனம் பெற்றுள்ளது.

     

    தலைநகர் நைபிடோவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியறாக பணியாற்றி வந்தவர் நைங் லின் துன். கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கத்தின்போது ஹோட்டல் இடிந்து விழுந்ததில் பலருடன் அவரும் உள்ளே சிக்கிக் கொண்டார்.

    இந்நிலையில் இடிபாடுகளின் உள்ளே சிக்கியவர்களை கண்டறிய மீட்புக் குழுவினர் எண்டிஸ்கோபிக் கேமராவைப் பயன்படுத்தினர். நைங் லின் துன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த மீட்புக்குழு, அவர் உயிருடன் இருப்பதை உறுதிசெய்தனர்.

    அவரை ஒரு தரைப்பகுதி வழியாக ஜாக் ஹாமர் துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி துளையிட்டு அதன்வழியாக மெதுவாக இழுத்து பாத்திரமாக மீட்டனர். அவர் உள்ளே சிக்கி சுமார் 108 மணி நேரத்திற்குப் பிறகு அவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.

    அவரை மீட்டது தொடர்பாக தீயணைப்பு துறையினர் வெளியிட்ட வீடியோவில், அவர் சட்டை அணியாமல், உடல், தூசியால் மூடப்பட்டிருப்பதை காணலாம். சுயநினைவுடன் இருந்த அவர் வீடியோவில் பலவீனமாக காணப்பட்டார்.

    அவருக்கு IV டிரிப் பொருத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நைபிடாவ் நகரில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவரும் துருக்கிய மற்றும் உள்ளூர் குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இளைஞர் நைங் லின் துன் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டாலும், பலர் சடலமாகவே மீட்கப்பட்டு வருகின்றனர். 

    • அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
    • அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப் படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.

    அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அதே அளவுக்கு அந்தந்த நாடுகள் மீது ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

    இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சத வீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் இன்று அறிவிப்பை வெளியிடுகிறார்.

    இந்த நிலையில் பரஸ்பர வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது:-

    அதிபர் டிரம்ப் வர்த்தக குழுவுடன் ஆலோசனை நடத்தினார். வரி விதிப்பு தொடர்பாக அவர் ரோஸ் கார்டனில் நடைபெறும் விடுதலை தின நிகழ்ச்சியில் அறிவிப்பை வெளியிட்டதும் வரிவிதிப்புகள் உடனடியாக அமலுக்கு வரும்.

    அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரியினை விதிக்கிறது. பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவீதம், ஜப்பான் 700 சதவீதம் வரிகளை விதிக்கிறது. வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா சுமார் 300 சதவீதம் வரியை விதிக்கிறது.

    இதுபோன்ற நாடுகளால், அமெரிக்கா நீண்ட காலமாக கடும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதிபர் டிரம்ப் எடுத்த துணிச்சலான முடிவுகள் அமெரிக்காவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

    நமது ஏற்றுமதிக்கு அந்த நாடுகள் விதிக்கும் அளவுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்கா விதிக்க உள்ள பரஸ்பர வரிகளால் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

    • பல இடங்களில் கனரக எந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • மியான்மரில் நிலநடுக்கத்தால் தண்ணீர் விநியோகம், சுகாதார உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    மியான்மரில் கடந்த 28-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.

    இதற்கிடையே நிலநடுக்கத்தில் 2,719 பேர் பலியாகி உள்ளதாகவும், 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் மாயமாகி உள்ளதாகவும் மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல இடங்களில் கனரக எந்திரங்கள் இல்லாததால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை, கர்ப்பிணி பெண் உள்பட 4 பேரை 60 மணி நேரத்துக்கு பிறகு சீன மீட்புப் பணியாளர்கள் குழு மீட்டது.



    இந்த நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் தண்ணீர் விநியோகம், சுகாதார உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    சுவாச தொற்றுகள், தோல் நோய்கள், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்க் கிருமிகளால் பரவும் நோய்கள், தட்டம்மை போன்ற தடுப்பூசி மூலம் தடுக்கக் கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    • எரிவாயு குழாய் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் அந்த குழாய் வெடித்து சிதறியது.
    • முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 3 கியாஸ் நிலையங்களும் மூடப்பட்டன.

    கோலாலம்பூர்:

    மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் கியாஸ் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாசின் எரிவாயு குழாய் மூலம் கியாஸ் கொண்டு செல்லப்படுகிறது.

    இந்தநிலையில் அங்குள்ள எரிவாயு குழாய் திடீரென தீப்பிடித்தது. பின்னர் பயங்கர சத்தத்துடன் அந்த குழாய் வெடித்து சிதறியது.

    அப்போது சுமார் 300 அடி உயரத்துக்கு தீக்குழம்பு மேலெழும்பியது. இது பார்ப்பதற்கு எரிமலை வெடித்து சிதறியது போல இருந்தது. தொடர்ந்து பரவிய தீயால் அங்கு சுமார் 50 வீடுகள் எரிந்து நாசமாகின.

    எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல் முன்னெச்சரிக்கையாக அங்குள்ள 3 கியாஸ் நிலையங்களும் மூடப்பட்டன.

    இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த பணியில் ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. இதனால் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    அதேசமயம் இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேசிய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×