என் மலர்
உலகம்
- PUBக்கு சென்றதும் பின் அங்கிருந்து வெளிவந்ததும் பதிவாகி உள்ளது.
- இந்த சம்பவத்துக்கு இந்து கனேடிய அறக்கட்டளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆரய்ந்ததில் 2 நபர்கள் முதலில் அப்பகுதியில் இருந்த PUBக்கு சென்றதும் பின் அங்கிருந்து வெளிவந்து கோவிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
அந்த நபர்கள் Hoodie அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை கனடா போலீஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால், கனடாவில் இந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கனடா காவல்துறை தெரிவித்தது. மேலும் இந்த சம்பவத்துக்கு இந்து கனேடிய அறக்கட்டளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
- நிறுவனங்களின் பட்டியலில் கூடுதலாக 27 நிறுவனங்களைச் சேர்த்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா உயர்த்தியுள்ளது.
அதன்படி ஏப்ரல் 10 முதல் அனைத்து அமெரிக்க பொருட்களின் இறக்குமதிக்கும் 34 சதவீத வரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
கணினி பாகங்கள் மற்றும் மின்சார வாகன பேட்டரிகள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அரிய மண் தாதுக்கள் மீது கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகக் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வர்த்தகத் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் பட்டியலில் கூடுதலாக 27 நிறுவனங்களைச் சேர்த்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உலக வர்த்தக மையத்தில் அமெரிக்கா மீது சீனா வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளது.
- கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி ராணுவ அவசர சட்டத்தை அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று பிறப்பித்தார்.
- யூன் சுக் இயோல் மீது கிளர்ச்சி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது
தென் கொரியாவில் கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி ராணுவ அவசர சட்டத்தை அதிபர் யூன் சுக் இயோல் திடீரென்று பிறப்பித்தார். வடகொரியாவுடன் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடுவதாக கூறி ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்ததால் ராணுவ சட்டத்தை திரும்ப பெற்றார். இவ்விவகாரத்தில் யூன் சுக் இயோல் மீது கிளர்ச்சி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தென் கொரிய சட்டப்படி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்க தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இன்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அரசியலமைப்பு கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பளித்தது.

ராணுவச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது நடைமுறைகளை யூன் சுக் இயோல் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என தெரிவித்துள்ளது. அரசியலமைப்பை மீறியதற்காக அவரை பதவி நீக்கம் செய்ய நீதிபதிகள் குழு ஒருமனதாக வாக்களித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், யூனின் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிர்வாகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகின்றன. இதன் மூலம் அரசியலமைப்பு ஒழுங்கையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. ஜனநாயகக் குடியரசின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இதனால் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்கிறோம் என்று தெரிவித்தனர். மேலும், புதிய அதிபரை தேர்வு செய்வ–தற்காக 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட 2-வது தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆவார். இதற்கு முன் 2017-ம் ஆண்டு அரசியல் குற்றச்சாட்டு காரணமாக அப்போதைய அதிபர் பார்க் குவென்-ஹே அதிபர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பிட்ட கல்லை மட்டும் எடுத்தாள்.
- ஒரு தொல்பொருளை கண்டுபிடித்ததை உணர்ந்தோம்.
இஸ்ரேலில் மூன்று வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது ஒரு பழங்கால புதையலைக் கண்டுபிடித்ததன் மூலம் ஒரே இரவில் பிரபலமடைந்துள்ளார்.
தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அசேகாவின் தொல்பொருள் தளத்திற்கு சென்றிருந்தபோது, 3,800 ஆண்டுகளுக்கு முந்தைய கானானிய சமூகங்களைச் சேர்ந்ததாக நம்பப்படும் ஒரு ஸ்காராப் தாயத்தை ஷிவ் நிட்சான் என்ற சிறுமி கண்டுபிடித்தார்.
இதுதொடர்பாக சிறுமியின் சகோதரி கூறுகையில், "நாங்கள் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, ஷிவ் குனிந்தாள். அவளைச் சுற்றி நிறைய கற்கள் இருந்தது. ஆனால் அவள் இந்த குறிப்பிட்ட கல்லை மட்டும் எடுத்தாள். அந்த கல் பார்ப்பதற்கே அழகாக இருந்தால் என் பெற்றோரை அழைத்தேன். அப்போதுதான் நாங்கள் ஒரு தொல்பொருளை கண்டுபிடித்ததை உணர்ந்தோம்," என்றார்.

பின்னர் அந்தக் குடும்பத்தினர் இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக இஸ்ரேலின் தொல்பொருள் ஆணையத்திடம் (IAA) தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுமி ஷிவ்வுக்கு நல்ல குடியுரிமைக்கான பாராட்டுச் சான்றிதழை வழங்கினர்.

இதனிடையே இஸ்ரேலின் தொல்பொருள் ஆணைய இயக்குனர் கூறுகையில், "இஸ்ரேல் நாட்டின் தேசிய பொக்கிஷத்தை கண்டுபிடித்து ஒப்படைத்த ஷிவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு நன்றி. அனைவரும் அதைப் பார்த்து மகிழ முடியும். பஸ்கா பண்டிகையை முன்னிட்டு, இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு கண்காட்சியில் இந்த முத்திரையை நாங்கள் வழங்குவோம்" என்று கூறினார்.
- டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
- அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.
அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இதில் இந்தியா மீது 27 சதவீத வரியை விதித்து உள்ளார்.
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா்.
இதனால் அந்த நாட்டுப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் பல லட்சம் கோடியை இழந்தன.
அமெரிக்காவுக்கு சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி கொடுக்க உள்ளதாக கூறியதையடுத்து 2020-ம் ஆண்டுக்குப் பிறகு (கொரோனா காலம்) அமெரிக்க பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் உலக பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிந்தன.
இந்த நிலையில் டிரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டியின் போது பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது, விரைவில் சந்தைகள் ஏற்றம் பெறப்போகின்றன. பங்குகள் ஏற்றம் பெறப்போகின்றன. நாடு ஏற்றம் பெறப்போகிறது.
இந்த வரி விதிப்பு அறிவிப்பு உலகளவில் சந்தைகளை உலுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற ஒரு அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறோம். அது மிகவும் நன்றாக நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு நமது நாட்டிற்கு வரும். ஒரு ஒப்பந்தத்தை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பல நாடுகள் பார்க்க விரும்புகின்றன.
யாராவது அற்புதமான சலுகையை கொடுக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அமெரிக்காவை மற்ற நாடுகள் நீண்ட கால மாக பயன்படுத்தி வருகின்றன. அதை நிறுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு 7.39 மணியளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
ஐஸ்லாந்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு 7.39 மணியளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.85 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 32.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
- தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்த நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார்.
- பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று நடக்கிறது.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து, பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தாய்லாந்து புறப்பட்டார்.
அங்கு அவருக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகு தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்த நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார். அங்கு அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று மாலையில் கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட தாய்லாந்து, வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், இருதரப்பு சந்திப்புக்கு பிறகு தாய்லாந்து பிரதமர் ஷின வத்ரா - பிரதமர் மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
- இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
நைபிடாவ்:
மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது. 458 பேர் காயம் அடைந்துள்ளனர். 221 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- காசா முனையில் அதிகமான இடங்களை பிடித்து பாதுகாப்பு பகுதியாக்க இஸ்ரேல் முடிவு.
- காசா முனையில் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளோம் என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காசா முனையில் அதிகமான இடங்களை பிடித்து, இஸ்ரேலின் பாதுகாப்பு பகுதியாக்குவோம். இதனால் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளோம் என நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு காசா முனையின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 50 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நசேர் மருத்துவமனைக்கு 14 உடல்களுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஐந்து குழந்தைகள், நான்கு பெண்கள் அடங்குவர். கான் யூனிஸ் அருகில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு 19 இடங்களில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அதில் 1 முதல் 7 வயதுடைய ஐந்து குழந்தைகள் அடங்குவர். ஒரு கர்ப்பிணி பெண் உடலும் அடங்கும். காசா நகரில் உள்ள அலி மருத்துவமனைக்கு 21 உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் ஏழு குழந்தைகள் உடல்கள் அடங்கும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காசா முனை முழுவதும் புதிய பாதுகாப்பு பகுதியை இஸ்ரேல் உருவாக்கும். ரஃபா பகுதியில் இருந்து மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பகுதியை பாலஸ்தீனத்தின் மற்ற பகுதியில் இருந்து துண்டிப்பதாகவும் கூறினார்.
2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
- ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
- நேற்றை விட 805 புள்ளிகள் சரிந்துள்ளன.
புதுடெல்லி:
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாடுகளை சேர்ந்த பொருட்களுக்கு பரஸ்பரம் வரிவி திப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தி யாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்ப டும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பு காரணமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் ரூ.11 லட்சம் கோடி ஏற்றுமதி வர்த்தகம் நடை பெற்று உள்ளது. இந்தியாவில் உள்ள விவசாய பொருட்கள் மற்றும் அரிசி, இறால், தேன், காய்கறி ஜூஸ், ஆமணக்கு எண்ணை, மிளகு உள்ளிட்ட பல பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. விவசாய பொருட்கள் மட்டும் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ரத்தின கற்கள், நகைகள், வாகனங்கள், உணவு பொருட்கள் ஆகியவை ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்பட்டு உள்ளதால் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள், பருப்பு வகைகள் ஆகியவை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இந்தியாவில் 52 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வரியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை மறைமுகமாக டிரம்ப் ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இந்திய பொருட்க ளுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருப்பது இந்தியாவில் பங்கு வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பங்கு சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்றை விட 805 புள்ளிகள் சரிந்துள்ளன. இன்று சென்செக்ஸ் 75,653 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிப்டியும் சரிவோடு தொடங்கியது.
வங்கிகள், ரியல் எஸ்டேட், தகவல் தொழில் நுட்பம், நுகர்வோர் பொருட் கள், நிதி சேவைகள் சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. இந்தி யாவில் இருந்து எந்தெந்த பொருட்கள் அமெரிக்கா வுக்கு ஏற்றுமதி செய்யப்படு கிறதோ அந்தந்த பொருட் களை தயாரிக்கும் நிறுவ னங்கள் பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்து உள்ளன.
- ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.
துபாய்:
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு நாடுகளுக்கும் போக்குவரத்து சேவை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கு அடியில் ரெயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி துபாய் மற்றும் மும்பை இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரெயில் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரெயில் பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் ரெயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ. வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கு அடியில் ரெயில் போக்குவரத்தும் இணையவுள்ளது.
இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டால் துபாயில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
இந்த பாதை கடலுக்கு அடியில் அமைக்க வேண்டியது இருப்பதால் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். இதில் நிறைய சவால்களும் உள்ளன.
ரெயில் வேகமாக பயணிக்கும் போது ரெயில் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த பாதையில் ரெயில் பயணிக்கும் போது கடலின் அடியில் உள்ள ரம்மியமான காட்சிகளை பயணிகள் பார்க்கும் வகையில் ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரெயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படும்.
துபாய் மற்றும் இந்தியா இடையே விரைவாக சரக்கு போக்குவரத்தை கையாள முடியும். இது கச்சா எண்ணை உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களை துபாயில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய புதிய மற்றும் குறைந்த செலவிலான வழியை ஏற்படுத்தும்.
இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவைப்படும். இதை திட்ட ரீதியாக தயார் செய்துவிட்டார்கள்.
இதற்கான ஒப்புதலும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்தியா-துபாய் இடையே கடலுக்கு அடியில் போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டால் நிச்சயம் இது உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.
பின்னர் பல முக்கிய நகரங்களை இதேபோன்று இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறும். இந்த திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
- சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அதிக வரிவிதிப்பை அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ஏப்ரல் 2-ம் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப் போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் எனவும் கூறி வந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, "அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது. இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்பொருளாதார போர் என்பது மேற்கு நாடுகளை பலவீனப்படுத்தி விடும்.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு தகுந்த பதில் நடவடிக்கை கொடுப்போம். எதிர்த்து நிற்போம் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.






