என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து"

    • இரு தலைவர்களின் சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
    • இஸ்ரேலின் புதிய அயன் பீம் லேசர் அமைப்பை இந்தியா வாங்க விரும்புகிறது.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.

    பின்னர் ஜெருசலேமுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடிக்கு நெசெட் சபாநாயகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மோடிக்கு இஸ்ரேல் பாராளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா அணிவித்தார்.

    ஜெருசலேமில் நடந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியில் மோடியும், நெதன்யாகுவும் கலந்து கொண்டு பார்வையிட்டனர். கண்காட்சிக்கு செல்வதற்கு இரு தலை வர்களும் ஒரே காரில் பயணம் செய்தனர்.

    இஸ்ரேல் பயணத்தில் தனது 2-ம் நாளான இன்று பிரதமர் மோடி மதியம் யாத் வாஷேம் பகுதிக்கு சென்று அங்கு, நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

    இதைத்தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து இரு தரப்பு பேச்சு நடத்துகிறார். அதன்பின் பிற்பகல் 2.40 மணிக்கு பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யா குவும் தூதுக்குழுமட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

    இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார ஈடுபாடு, புதுமை, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கிறார்கள்.

    இந்தியாவின் உள்நாட்டு வான் பாதுகாப்பு கேடயமான சுதர்சன் சக்ரா அமைப்புக்கு இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பின் தொழில்நுட்பத்தை இந்தியா பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ் இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது. இது தொடர்பாக இரு தலைவர்களின் சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

    மேலும் எதிரி ஆயுதங்களுக்கு எதிராக 'ஒளி-வேக', செலவு குறைந்த பாதுகாப்பை வழங்கும் இஸ்ரேலின் புதிய அயன் பீம் லேசர் அமைப்பை இந்தியா வாங்க விரும்புகிறது. இது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

    இந்த சந்திப்பில் இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. பேச்சுவார்த்தைக்கு பின் இரு தலைவர்களும் கூட்டு அறிக்கை வெளியிடுகிறார்கள்.

    மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி இஸ்ரேலில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 5.50 மணிக்கு மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார்.

    • வில்சன் பவர் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்.
    • பிரிட்டானியா ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். இந்த பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரிட்டனில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    இதில், வில்சன் பவர் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. திருப்பூர், நாமக்கல்லில் முதலீடு செய்வதன் மூலம் 543 புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    பிரிட்டானியா ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    மேலும், ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது செயல்பாட்டை விரிவாக்கம் செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடல்சார் மேலாண்மை, காப்பீடு, கப்பல் கண்காணிப்பு பகுப்பாய்வு ஆகிய வற்றுக்காக லாயிட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்த நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார்.
    • பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று நடக்கிறது.

    தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து, பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தில் இன்று நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தாய்லாந்து புறப்பட்டார்.

    அங்கு அவருக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பிறகு தாய்லாந்து அரசு இல்லத்தில் அந்த நாட்டு பிரதமர் ஷினவத்ராவை சந்தித்தார். அங்கு அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று மாலையில் கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை மேற்பார்வையிட தாய்லாந்து, வங்காள விரிகுடா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பிம்ஸ்டெக் தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.

    இந்நிலையில், இருதரப்பு சந்திப்புக்கு பிறகு தாய்லாந்து பிரதமர் ஷின வத்ரா - பிரதமர் மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா - தென்கொரியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் அதிபர் மூன் ஜே-இன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.
    புதுடெல்லி :

    தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் இந்தியாவில் 5 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவி மற்றும் அந்நாட்டின் மந்திரிகள், உயரதிகாரிகள் ஆகியோர் கடந்த 8-ம் தேதி டெல்லி வந்தடைந்தனர். தென் கொரிய அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மூன் ஜே-இன் மற்றும் அவரது மனைவியை வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து, மூன் ஜே-இன், மோடி மற்றும் இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்ற சந்திப்பு நடைபெற்றது. இதில், இந்தியா தென்கொரியா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

    இந்தியா - தென்கொரியா விரிவான கூட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தொலைத்தொடர்பு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி பொருளாதாரம் போன்ற துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக 11 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.

    சந்திப்பிற்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி கூறுகையில், ‘ஒவ்வொரு நடுத்தர இந்திய குடும்பங்களிலும் கொரியாவில் தாயாரிக்கப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இடம்பெற்றிருக்கும். கொரிய தயாரிப்பு பொருட்கள் தனித்துவம் வாய்ந்தது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தென் கொரியா இணைந்ததன் மூலம் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்’ என தெரிவித்தார்.

    மோடியை தொடர்ந்து பேசிய மூன் ஜே-இன், ‘இந்தியா - தென் கொரியா இடையே கடந்த 45 ஆண்டுகளாக நல்லுறவு நிலவி வருகிறது. 2015-ம் ஆண்டு தென்கொரியாவிற்கு மோடி வருகை தந்த பிறகு இருநாடுகளுக்கு இடையேயான  நல்லுறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. நான்காவது தொழில் புரட்சியில் மக்களின் வளம் மற்றும் அமைதியை ஊக்குவிக்க மோடியும் நானும் தீர்மானித்துள்ளோம். எதிர்கால வளர்ச்சியை தோற்றுவிக்கும் நோக்கில் இருநாடுகளும் பரஸ்பரம் சிறந்த ஒத்துழைப்பு நல்கும்’ என கூறினார்.
    ×