என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
- வில்சன் பவர் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்.
- பிரிட்டானியா ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். இந்த பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரிட்டனில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதில், வில்சன் பவர் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. திருப்பூர், நாமக்கல்லில் முதலீடு செய்வதன் மூலம் 543 புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டானியா ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மேலும், ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது செயல்பாட்டை விரிவாக்கம் செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் மேலாண்மை, காப்பீடு, கப்பல் கண்காணிப்பு பகுப்பாய்வு ஆகிய வற்றுக்காக லாயிட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






