என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரி.. டிரம்ப்-க்கு சீனா பதிலடி!
    X

    அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரி.. டிரம்ப்-க்கு சீனா பதிலடி!

    • வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
    • நிறுவனங்களின் பட்டியலில் கூடுதலாக 27 நிறுவனங்களைச் சேர்த்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.

    அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

    இந்நிலையில் அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா உயர்த்தியுள்ளது.

    அதன்படி ஏப்ரல் 10 முதல் அனைத்து அமெரிக்க பொருட்களின் இறக்குமதிக்கும் 34 சதவீத வரியை விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.

    கணினி பாகங்கள் மற்றும் மின்சார வாகன பேட்டரிகள் போன்ற உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அரிய மண் தாதுக்கள் மீது கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாகக் சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும் வர்த்தகத் தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் பட்டியலில் கூடுதலாக 27 நிறுவனங்களைச் சேர்த்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உலக வர்த்தக மையத்தில் அமெரிக்கா மீது சீனா வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளது.

    Next Story
    ×