என் மலர்
நீங்கள் தேடியது "பங்குச்சந்தை வீழ்ச்சி"
- சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர்.
- எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது என அகிலேஷ் தெரிவித்தார்.
லக்னோ:
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் ரூ.33 லட்சம் கோடி மதிப்புள்ள மோசடிகள் மற்றும் முறைகேடுகளை முரண்பாடான தரவுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.19 லட்சம் கோடியை இழந்தனர். எல்.பி.ஜி. சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 அதிகரித்துள்ளது.
நாட்டின் மிக முக்கியமான பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
கான்பூரில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் அமைதியைக் குலைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
- டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
- அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார்.
அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறி இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இதில் இந்தியா மீது 27 சதவீத வரியை விதித்து உள்ளார்.
டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்க தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. சா்வதேச பொருளாதாரச் சூழல் அடியோடு மாறி வருவதால் அமெரிக்க முதலீட்டாளா்கள் அச்சத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டனா்.
இதனால் அந்த நாட்டுப் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தையின் அனைத்து குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டும் பல லட்சம் கோடியை இழந்தன.
அமெரிக்காவுக்கு சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பதிலடி கொடுக்க உள்ளதாக கூறியதையடுத்து 2020-ம் ஆண்டுக்குப் பிறகு (கொரோனா காலம்) அமெரிக்க பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் உலக பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிந்தன.
இந்த நிலையில் டிரம்ப் நிருபர்களிடம் அளித்த பேட்டியின் போது பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தபோது, விரைவில் சந்தைகள் ஏற்றம் பெறப்போகின்றன. பங்குகள் ஏற்றம் பெறப்போகின்றன. நாடு ஏற்றம் பெறப்போகிறது.
இந்த வரி விதிப்பு அறிவிப்பு உலகளவில் சந்தைகளை உலுக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்வது போன்ற ஒரு அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருக்கிறோம். அது மிகவும் நன்றாக நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு நமது நாட்டிற்கு வரும். ஒரு ஒப்பந்தத்தை முடிக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று பல நாடுகள் பார்க்க விரும்புகின்றன.
யாராவது அற்புதமான சலுகையை கொடுக்கத் தயாராக இருந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அமெரிக்காவை மற்ற நாடுகள் நீண்ட கால மாக பயன்படுத்தி வருகின்றன. அதை நிறுத்த விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
- அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியுடன் முடிவடைந்துள்ளது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிந்து 81,183 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.25 புள்ளிகள் சரிந்து 24,852 ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
இன்றைய சென்சக்ஸ் வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 5.31 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. மேலும் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.460.46 லட்சம் கோடியாக உள்ளது.
ஆட்டோ, பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம், தகவல்தொடர்பு , ஐடி உள்ளிட்ட முக்கிய துறைகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி , எஸ்பிஐ வங்கி, இன்ஃபோசிஸ் நிறுவனம் உள்ளிட்ட சென்செக்ஸ் குறியீட்டில் டாப் 30 இல் உள்ள நிறுவனங்கள் மொத்தமாக ஏற்பட்ட 1.24% சரிவில் [1,017.23 புள்ளிகளில்] 538 புள்ளிகளைக் கொண்டுள்ளன.
- இந்தியாவுக்கான அந்நிய முதலீடுகள் குறைந்து வருகின்றன.
- இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் அச்சுறுத்தலாக உள்ளது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியை ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் சந்தித்து பேட்டி எடுத்தார்.
பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி மனம் திறந்து பேசினார். நானும் மனிதன் தான், கடவுள் அல்ல என்று அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமரை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட தொடர் சரிவுக்கு பிறகே பிரதமர் தன்னை தெய்வப் பிறவி இல்லை என்பதை உணர்ந்துள்ளார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
தான் தெய்வப் பிறவி என்று கூறி வந்த பிரதமா் மோடி, பங்குச் சந்தையில் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.1.72 லட்சம் கோடி வெளியேறிய பிறகே, 'தாம் ஒரு மனிதன் தான்' என்று மறுகண்டுபிடிப்பு செய்துள்ளாா்.
இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) தலைவா் மீதான முறைகேடு குற்றச்சாட்டு ஆகியவற்றால் இந்திய வா்த்தகம் மீது அந்நிய முதலீட்டாளா்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பங்குச் சந்தையில் முதலீடுகள் வெளியேறி உள்ளன.
வியட்நாம் , மலேசியாவை ஒப்பிடுகையில் இந்தியாவுக்கான நேரடி அல்லது மறைமுக அந்நிய முதலீடுகள் வெகுவாக குறைந்து வருகின்றன. டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.






