என் மலர்
நீங்கள் தேடியது "world's richest people"
- 2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.
- நிறைய பணம் சம்பாதிப்பதும், அதையெல்லாம் நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும்தான் தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்றார்.
மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூப் பிரபலம் ஜிம்மி டொனால்ட்சன் 27 வயதிலேயே உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார்.
அவரது நிகர மதிப்பு தற்போது 1 பில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ. 8,300 கோடி) எட்டியுள்ளது. இதில் பரம்பரை சொத்து எதுவும் இல்லை. அதாவது, அவர் தனது 27 வயதிலேயே இந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை சொந்தமாக சம்பாதித்தார்.
இளம் வயதிலேயே யூடியூபராக தனது பயணத்தைத் தொடங்கிய மிஸ்டர் பீஸ்ட், தனது புதுமையான சவால்கள், பெரிய அளவிலான பரிசுகள் மற்றும் தொண்டு முயற்சிகளுக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார்.
2017 ஆம் ஆண்டில் "i counted to 100 000" என்ற வீடியோ மூலம் அவர் புகழ் பெற்றார்.
யூடியூப்பைத் தவிர, மிஸ்டர் பீஸ்ட் "பீஸ்ட் பர்கர்" என்ற துரித உணவு கடைகள் மற்றும் "ஃபீஸ்டபிள்ஸ்" என்ற சாக்லேட் நிறுவனத்தையும் வெற்றிகரமான வணிகங்களை நடத்தி வருகிறார். ஜூன் 2024 நிலவரப்படி, யூடியூப்பில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட நபர் என்ற சாதனையையும் மிஸ்டர்.பீஸ்ட் படைத்துள்ளார்.

"பீஸ்ட் பிலாந்த்ரோபி" என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி பல சேவை திட்டங்களை நடத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு கண்பார்வை வழங்குதல், லட்சக்கணக்கான மரங்களை நடுதல் போன்ற திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
மிஸ்டர் பீஸ்ட், இறப்பதற்கு முன் தன்னிடம் உள்ள ஒவ்வொரு பைசாவையும் நன்கொடையாக வழங்குவதாக முன்னதாக அறிவித்தார். நிறைய பணம் சம்பாதிப்பதும், அதையெல்லாம் நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும்தான் தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று அவர் பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
- இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்
- பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது..
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகெங்கிலும் பங்குச் சந்தையும் டிரம்ப் அறிவிப்பால் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்நிலையில் டிரம்ப்பின் வரிவிதிப்பால் பில்லியனர்கள் பலரின் சொத்துமதிப்பு ஒரே நாளில் வெகுவாக சரிந்துள்ளது.
பில்லியனர்களின் சொத்து மதிப்பை கண்காணிக்கும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒட்டுமொத்த பில்லினர்களின் செல்வத்தில் நேற்று ஒரே நாளில் 208 பில்லியன் டாலர் சரிவு ஏற்பட்டுள்ளது.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, இது 13 ஆண்டுகளில் நான்காவது பெரிய ஒரு நாள் சரிவாகும். மேலும் COVID-19 தொற்று காலகட்டத்துக்கு பிறகு இது மிகப்பெரிய சரிவு என்று கூறப்படுகிறது.
பில்லியனர்களில் குறிப்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 17.9 பில்லியன் டாலர்களையும், ஜெஃப் பெசோஸ் 15.9 பில்லியன் டாலர்களையும், எலான் மஸ்க் 11 பில்லியன் டாலர்களையும் இழந்துள்ளனர்.
- 342 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் எலான் மஸ்க் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்
- இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது.
தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து பட்டியலில் சீனா (516) மற்றும் இந்தியா (205) பில்லியர்களை கொண்டுள்ளன. 342 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 2 வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.
முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
ஆனால் கடந்தாண்டு 116 பில்லியன் டாலராக இருந்த அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 92.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளதால் அவர் உலகளவில் பணக்காரர் பட்டியலில் 18 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 56.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 28வது இடத்தில் உள்ளார்.
- 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணி
- 268 பில்லியன் டாலர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை நிர்வகித்து வருகிறார் மேயர்ஸ்
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வணிக, பொருளாதார, பங்கு சந்தை ஊடகம், ப்ளூம்பர்க் (Bloomberg). இந்நிறுவனம், உலகின் முன்னணி கோடீசுவரர்களை, அவர்களின் நிகர சொத்து மதிப்பை வைத்து உருவாக்கும் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம்.
இப்பட்டியலின்படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேஷன் ஆடை மற்றும் ஒப்பனை துறையில் முன்னணியில் உள்ள லோரியல் (L'Oreal) நிறுவனத்தின் தலைவரான, 70 வயதாகும் ஃப்ரான்காய் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers), 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணியாக இடம் பிடித்துள்ளார்.
மேயர்ஸ், உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ள 268 பில்லியன் டாலர் நிறுவனமான லோரியல் தலைமை பொறுப்பை அவரது இரு மகன்களுடன் நிர்வகித்து வருகிறார்.
கிறித்துவ மக்களின் புனித நூலான பைபிள் குறித்து 5 பாகங்கள் மற்றும் கிரேக்க கடவுள் குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ள மேயர்ஸ், பல மணி நேரங்கள் இடைவிடாது பியானோ வாசிக்கும் திறன் படைத்தவர்.
2017ல் தன் தாயிடமிருந்து லோரியல் நிர்வாக பொறுப்பை ஏற்ற மேயர்ஸ், இன்று வரை திறம்பட நிர்வகித்து வருகிறார்.
கொரோனா காலகட்டத்தில் ஒப்பனை பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தாலும், சில மாதங்களிலேயே விற்பனையை பல மடங்கு உயர்த்தி காட்டினார், மேயர்ஸ்.
தற்போது உலகின் முன்னணி கோடீசுவரர்களில் 12வது இடத்தை பிடித்துள்ளார் மேயர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சேனல், யூனிலீவர், ரெவ்லான் என இத்துறையில் பல போட்டி நிறுவனங்கள் இருந்தாலும், ஒப்பனை, சரும பாதுகாப்பு, சிகை பாதுகாப்பு, சிகை நிறம் கூட்டுதல் மற்றும் ஆண்கள் ஒப்பனை என பல கிளைகளில் விற்பனையை விஸ்தரித்து நம்பர் 1 இடத்தில் லோரியல் நிறுவனத்தை மேயர்ஸ் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1909ல் மேயர்ஸின் தாத்தா யூகின் ஷுயல்லர் (Eugene Schueller) என்பவர், தான் கண்டுபிடித்த தலை சாயத்தை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம், லோரியல் இன்று உலகெங்கும் கொடி கட்டி பறக்கிறது.






