என் மலர்tooltip icon

    உலகம்

    • சீன இறக்குமதிகளுக்கு 245% வரை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா வரிகளை விதித்தது.
    • அமெரிக்காவின் 1.2 டிரில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க உதவும்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரிவிதிப்பை எதிர்த்து சீனா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. இரு உலக வல்லரசுகளும் ஒருவருக்கொருவர் வரிகளை உயர்த்தினர்.

    சீன இறக்குமதிகளுக்கு 245% வரை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா வரிகளை விதித்தது. அதே நேரத்தில் சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரை வரிகளை விதித்துள்ளது. மேலும் அரிய வகை கனிமங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை சீனா நிறுத்தியது.

    இதனால் இரு தரப்பிலும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளால் அமெரிக்கா - சீனா பேசுவார்த்தை நடத்த இறங்கியது. அதனபடி கடந்த 2 நாட்கள் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடந்தேறின.

    அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் மற்றும் வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் உள்ளிட்ட அமெரிக்கக் குழுவிற்கும், துணைப் பிரதமர் ஹீ லைஃபெங் தலைமையிலான சீனக் குழுவிற்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், சீனாவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் இந்த ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்கள் திங்கட்கிழமை பகிரப்படும் என்றும், இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் குறித்து அதிபர் டிரம்ப் இடம் முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், "சீனாவும் அமெரிக்காவும் பயனடைவதையும், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவின் சந்தை திறந்திருப்பதையும் நாங்கள் காண விரும்புகிறோம். பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!" என்று குறிப்பிட்டார்.

    இந்த ஒப்பந்தம், அமெரிக்காவின் 1.2 டிரில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்க உதவும் என்று அமெரிக்க அதிகாரிகள் வட்டம் கூறுகிறது. 

    • இந்த இனப்படுகொலையை இன்னும் ஒரு நாள் கூட தொடர்வது பயனற்றது.
    • ரஷியா தங்கள் போர் லட்சியங்களை வார்த்தை ஜாலங்களுக்குப் பின்னால் மறைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    ரஷியா - உக்ரைன் உடையே கடந்த 2022 ,முதல் போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் எடுத்து வருகின்றன.

    இதற்கிடையே போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.

    மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். பிரச்சினைக்கான காரணங்களை நீக்கவும், அமைதியை நோக்கி செல்வதற்கான வழிமுறைகளைக் காண, பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார். 15ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றும் என்றும் புதின் தெரிவித்தார்.

    இந்நிலையில் இதற்கு பதில் அளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக உள்ளது. இந்த இனப்படுகொலையை இன்னும் ஒரு நாள் கூட தொடர்வது பயனற்றது.

    இருப்பினும், நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை ரஷ்யா உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உக்ரைனும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கும் என்று தெரிவித்தார்.

    மற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முதலில் போர்நிறுத்தத்திற்குப் பிறகுதான் தொடங்கும் என்று ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி தெரிவித்தார். ரஷியா தங்கள் போர் லட்சியங்களை வார்த்தை ஜாலங்களுக்குப் பின்னால் மறைப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்..    

    • ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது போப் லியோ தனது முதல் உரையை ஆற்றினார்.
    • புதிய போப்பின் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடினர்.

    போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிறகு புதிய போப் ஆக லியோ XIV மே 8 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது போப் லியோ தனது முதல் உரையை ஆற்றினார்.

    புதிய போப்பின் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடினர். அப்போது இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அவர் வரவேற்றார்.

    இன்னொரு போர் ஒருபோதும் வரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். போப் லியோ தனது உரையில் உலகெங்கிலும் உள்ள மோதல்கள் குறித்தும் பேசினார்.

    அவர் தனது உரையில், காசாவில் துன்பப்படும் மக்களையும், உக்ரைனில் நடந்த போரினால் இயல்பு வாழ்க்கையை இழந்த மில்லியன் கணக்கான மக்களையும் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் அமைதியின் அதிசயம் நிகழ கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்

    • விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேரில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
    • விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலங்கை நுவரெலியா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இலங்கையின் கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது, மலைப் பகுதியான நுவரெலியா-கம்பளை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென மலையிலிருந்து 100 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விழுந்தது.

    இதில் பயணிகள் பலர் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேரில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.
    • வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

    வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே 89 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    அண்மையில் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது
    • அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக டிரம்ப் சிலை வைத்துள்ளார்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் மாளிகையில் தனக்கு தானே சிலை வைத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

    கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசி கொண்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப், அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக சிலை வைத்துள்ளார்

    இந்த புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    • டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
    • காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் அறிவிப்பு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. நாளை சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைப் பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க வீரதீரமான முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவியது குறித்து நான் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இருவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழ்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
    • இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. நாளை சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்... இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க உங்கள் இருவருடனும் நான் இணைந்து பணியாற்றுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    காஷ்மீர் பிரச்சினையில் 3-ம் தரப்பு தலையீட்டை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கட்சித் தலைவர்கள் பலர் மீது படுகொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • பல அவாமி லீக் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    வங்காளதேச நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவும் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக நடந்து வரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள சாட்சிகள் மற்றும் புகார்தாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அவாமி லீக்கை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றிய கட்சியின் செயல்பாடுகளை முடக்கியது சட்டவிரோதம் என அக்கட்சி தெரிவித்துள்ளது. 77 வயதான ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். மாணவர் தலைமையிலான எழுச்சியைத் தொடர்ந்து, அவர் மற்றும் அவரது மூத்த கட்சித் தலைவர்கள் பலர் மீது படுகொலை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல அவாமி லீக் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.

    1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அவாமி லீக், 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசம் விடுதலை பெறுவதில் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகளின் பங்கையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
    • 'ஜனநாயகத்தின் நிழலில் செயல்படும் எதேச்சதிகார ஆட்சி' என்று அறிக்கை பாகிஸ்தானை வர்ணிக்கிறது.

    இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஊடகங்களின் நிலை மோசமாக இருப்பதாகஉலகில் வேறெங்கும் இல்லாத அளவில்.. இந்தியா பற்றி தெற்காசிய பத்திரிகை சுதந்திர அறிக்கையில் பகீர்(2024-25) கூறுகிறது.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவு போன்ற இடங்களில் ஊடக நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் திட்டமிட்ட முயற்சிகள் தொடர்கின்றன.

    நம்பிக்கையின்மை, சுயாதீன டிஜிட்டல் தளங்கள் மீதான ஒடுக்குமுறைகள், ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தான சூழ்நிலைகள், அத்துடன் போலி தகவல்களின் பெருக்கம் உள்ளிட்ட பல சவால்களை ஊடகத் துறை எதிர்கொள்கிறது என்பதை அறிக்கை கூறுகிறது.

    'ஜனநாயகத்தின் நிழலில் செயல்படும் எதேச்சதிகார ஆட்சி' என்று அறிக்கை பாகிஸ்தானை வர்ணிக்கிறது. சமீப காலங்களில் எட்டு ஊடக ஊழியர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.

    மேலும் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதில் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஐடி பிரிவுகளின் பங்கையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    இந்தியாவில் ஊடக சுதந்திரத்தைத் தடுக்க சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.

    அரசாங்கத்தை விமர்சிக்கும் அறிக்கைகளை வெளியிடுவதற்காகப் பத்திரிகையாளர்களும் ஊடக நிறுவனங்களும் சட்ட சவால்களை எதிர்கொள்கின்றன. அரசாங்கம், தேசத்துரோகம், UAPA மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் போலிச் செய்திகளின் போக்கு அதிகமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 

    • ராஜதந்திரம் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க வங்காளதேசம் எங்கள் இரு அண்டை நாடுகளையும் தொடர்ந்து ஆதரிக்கும்,
    • சுழலில் இருந்து வெளியேறுவதற்கான முதல், முக்கியமான படியாகும்.

    3 நாட்கள் தொடர் தாக்குதலை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மாலை சண்டையை நிறுத்த ஒப்பந்தம் செய்தன. அடுத்தகட்ட பேச்சுரவார்த்தை மே 12 இல் நடக்க உள்ளது. சண்டையை நிறுத்த அமெரிக்கா பெரிய வங்கு வகித்ததாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

    இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றன.

    இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறுகையில், "இரு நாடுகளுடனும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினேன். தெற்கு ஆசியாவில் அமைதியை நிலை நாட்ட இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

    வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பையும் நான் மிகவும் மனதாரப் பாராட்டுகிறேன்.

    அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்க் ரூபியோ ஆகியோரின் பயனுள்ள மத்தியஸ்தத்திற்கும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜதந்திரம் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க வங்காளதேசம் எங்கள் இரு அண்டை நாடுகளையும் தொடர்ந்து ஆதரிக்கும்," என்று பதிவிட்டுள்ளார்.

    "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தம், போர் விரிவுபடும் சுழலில் இருந்து வெளியேறுவதற்கான முதல், முக்கியமான படியாகும். உரையாடல் முக்கியமானது" என்று ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.

    துருக்கி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். போர் நிறுத்தத வாய்ப்பை பயன்படுத்தி நேரடி மற்றும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையை ஏற்படுத்துமாறு இரு தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

    தெற்காசியாவில் நிலையான ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, பயங்கரவாதம் மற்றும் இதுபோன்ற மோதலை தடுப்பதற்கான பேச்சுவார்த்தை வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. முன்னதாக துருக்கி பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் செய்தது குறிப்பிடத்தக்கது. 

    • டார்பூரில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இந்த போரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 1.3 கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை), வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தின் தலைநகரான எல்-ஓபெய்டில் உள்ள ஒரு சிறைச்சாலையின் மீது RSF ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 45 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நகரம் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. RSF தாக்குதல்கள் இங்கு நிலைமையை மேலும் மோசமாகியுள்ளன.

    முன்னதாக வெள்ளிக்கிழமை மாலை, டார்பூரில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் RSF ஆல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தத் தாக்குதல்களுக்கு முன்னர், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகரான போர்ட் சூடானில், RSF தொடர்ந்து ஆறு நாட்கள் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களில் முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமாகின. இவற்றில் மின்சார கட்டமைப்பு மற்றும் சிவில் விமான நிலையம் ஆகியவை அடங்கும்.   

    ×