என் மலர்tooltip icon

    உலகம்

    • ஒரு மூலோபாய கூட்டாளியாகவும், பிரிக்க முடியாத நண்பராகவும் சீனா இருக்கிறது.
    • கடினமான சூழ்நிலைகளிலும் பாகிஸ்தான் நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

    இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த மோதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஜம்மு காஷ்மீர் மீது ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சீனா தொடர்ந்து உதவி வழங்கும் என்றும், அந்நாட்டிற்கு ஆதரவாக நிற்கும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உறுதியளித்தார். வாங் யி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாந்த் தாரை அழைத்துப் பேசினார்.

    பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனா துணை நிற்கும் என்று வாங் யி தெளிவுபடுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில், தற்போதைய நிலைமை குறித்து வாங் யீ -இடம் இஷான் டார் விளக்கினார் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடினமான சூழ்நிலைகளிலும் பாகிஸ்தான் நிதானத்தைக் கடைப்பிடித்து வருவதாகவும், அதன் பொறுப்பான அணுகுமுறையை நாங்கள் பாராட்டுகிறோம் என்றும் வாங் யி கூறியதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எப்போதும் ஒரு மூலோபாய கூட்டாளியாகவும், பிரிக்க முடியாத நண்பராகவும் இருந்து வரும் சீனா, பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக ஆதரவளிக்கும்" என்று கூறியுள்ளது. 

    • இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
    • மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியது. பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு வான்வெளியை பாகிஸ்தான் மீண்டும் திறந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் விமான போக்குவரத்து தொடங்கவுள்ளது.

    • இந்தியா, பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது
    • பிரதமர் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம், அரசியல் திறமைக்கு பாராட்டு

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

    இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. மே 12 ஆம் தேதி இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது பதிவில், "நடுநிலையான இடத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை தொடங்குவதாகவும் அறிவிப்பதில் மகிழ்ச்சி. அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம், அரசியல் திறமைக்கு பாராட்டு" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இரவு முழுவதும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

    இதனையடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டது. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார் 

    • இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இரவு முழுவதும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இரவு முழுவதும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இரு நாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ----------------------------------------------

    • ரஷியா- உக்ரைன் இடையே 30 நாள் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
    • அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் பரிந்துரையை ஆதரவாக இருப்பதாக ஜெர்மனி, இங்கிலாந்து தகவல்.

    உக்ரைன் ரஷியா போர் தொடுத்து 3 வருடங்கள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டன. ஆனால் ரஷியாவும், உக்ரைனும் பேச்சுவார்த்தைக்கு முன்வர சம்மதிக்கவில்லை.

    கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் உக்ரைன்- ரஷியா இடையே 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை வழங்கியது. இதனால் உக்ரைன் ஏற்றுக்கொண்டது. ஆனால் ரஷியா ஏற்றுக்கொள்ளவில்லை.

    கடந்த சில வாரங்களாக அமெரிக்கா பிரான்ஸ், இங்கிலாந்து உளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரஷியாவுக்கு போர் நிறுத்தம் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் உக்ரைன் சென்றுள்ளனர்.

    அவர்கள் உக்ரைன் அதிபரை சந்தித்து பேசினர். அப்போது வருகிற திங்கிட்கிழமையில் இருந்து 30 நாள் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியதாக தெரிகிறது. இதை உக்ரைன் அதிபர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    இது தொடர்பாக உக்ரைன் நிதியமைச்சர் அந்த்ரி சிபிஹா "ரஷியாவோ முழுமையான, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தயாராக உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

    உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், ரஷியாவுக்கு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிகிறது. ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமா? எனத் தெரியவில்லை.

    இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் ரஷியா 3 நாள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், 700-க்கும் மேற்படட முறை அதை மீறியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

    • இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஆப்கானிஸ்தானை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனிடையே ஆப்கானிஸ்தானை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் குற்றசாட்டை ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்

    • 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை வானிலேயே அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
    • இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம்.

    பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.

    இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள்.

    பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்திய ராணுவம் பதிலடி தாக்குதலை தொடங்கியது. இந்தியாவை நோக்கி வந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு தகர்த்து எறிந்தது.

    இந்தியாவின் பதிலடியால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான், பகல் முழுவதும் பதுங்கியது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் 300 முதல் 400 ட்ரோன்களை இந்திய நிலைகளை நோக்கி ஏவியது. குறிப்பாக காஷ்மீரின் லே முதல் குஜராத் மாநிலம் சர்கிரீக் வரை உள்ள எல்லையோரத்தில் உள்ள 36 நகரங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது.

    இவற்றையெல்லாம் நமது இந்திய ராணுவம் நடுவழியில் மறித்து ஏவுகணைகள் மூலம் அழித்தது. மேலும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்திய ராணுவம் தாக்கி, வலுவான பதிலடி கொடுத்தது.

    இதனிடையே நேற்று உச்சகட்டமாக காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலை வானிலேயே அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோயிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம். இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பரிசீலிப்போம். பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கூறி உள்ளார்.

    • எல்லைப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
    • கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள்

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லைப்பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கொல்லப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொல்லப்பட்டவர்களில் 3 பேர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கடந்த 7-ந்தேதி இந்தியா நடத்திய தாக்குதலில் 5 பேரும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக, இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பின்பு, மசூத் அசார் உயிரோடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொல்லப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, இந்தியாவுடனான மோதல் போக்கை பயன்படுத்தி பாகிஸ்தானில் மொத்தமாக 39 இடங்களில் பலூசிஸ்தான் போராளிக் குழுவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். 

    • இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • நேற்று முதன்முறயைாக பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா "ஆபரேசன் சிந்தூர் (Operation Sindoor)" என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதில் முக்கிய பயங்கரவாத குழுவின் தளபதி கொல்லப்பட்டார். 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் ஏவுகணை, டிரோன்கள் மூலம் இந்தியாவில் உள்ள பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்தியா முறியடித்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு முதன்முறையாக பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஃபட்டா-1 மற்றும் ஃபட்டா-2 ஆகிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணை வைத்துள்ளது. இந்த இரண்டு ஏவுகணைகளும் நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இந்த பாகிஸ்தான் நாட்டின் உள்தயாரிப்பு ஏவுகணையாகும்.

    நேற்று பாகிஸ்தான் ஃபட்டா பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி டெல்லியை தாக்க முயற்சித்துள்ளது. இதை இந்தியா வெற்றிகரமாக இடைமறித்து அளித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்றைய தாக்குதல் மூலம் பாகிஸ்தான் "ஆபரேஷன் பன்யன்-அல்-மர்சூஸ்" நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    பன்யன் அல்-மர்சூஸ் (Bunyan al-Marsoos) அல்லது பன்யன் அல் மர்சூஸ் (Bunyan Ul Marsoos) அல்லது பன்யன்-அன்-மர்சூஸ் (Bunyan-un-Marsoos) அல்லது பன்யனுன் மர்சூஸ் (Bunyanun Marsoos) என அழைக்கப்படுகிறது.

    இதற்கு ஈயத்தால் ஆன சுவர் என்பது பொருள் எனவும், கட்டிடம் போல் தனது பாதையில் அணிவகுப்பது என்பது போல் பொருள்படும் எனவும் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

    இந்தப் பெயருடன் பாகிஸ்தான் தன்னை ஒரு அசைக்க முடியாத சுவராகவோ அல்லது கட்டமைப்பாகவோ சித்தரிக்க விரும்புகிறது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    பட்டா-2 ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். ஈது 400 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன்கொண்டது. எதிரி நாடுகளின் மிகவும் உள்பகுதிகள், ராணுவ தளங்கள், தகவல்தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை தாக்கக்கூடியதாகும்.

    ஆபரேஷன் சிந்தூர் பெயர் காரணம்

    'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்குப் பின்னால் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. சிந்தூர் என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தம் 'திலகம்' எனப் பொருள். அதாவது இந்து கலாச் சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர்.

    பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • பெரும்பாலான உலக நாடுகள், இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்தை தணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதியில் உள்ள மாநிலத்தின் முக்கிய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடத்தும்போது இந்தியா அவற்றை வெற்றிகரகமாக முறியடிக்கிறது. மேலும், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் டிரோன் தாக்குதல் நடத்துகிறது.

    இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் அண்டை நாடான சீனா இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைதி, நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என மிகவும் கடுமையாக சீனா வலியுறுத்தியுள்ளது.

    இந்தியாவை விட சீனா பாகிஸ்தானுக்கு மிகவும் நட்பு நாடாகும். இருந்தபோதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் தாங்கள் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது.

    இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டபோது, வர்த்தம் அளிப்பதாக சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தில், எங்களுக்கு தெளிவான ஆதரவு தர சீனா முன் வந்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

    • எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து இஸ்லாமாபாத்தில் பெட்ரோல் பங்குகளை பாகிஸ்தான் அரசு மூட உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று காலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு இஸ்லாமாபாத் எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் பெட்ரோல் பங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    எரிபொருள் பற்றாக்குறையை அடுத்து இஸ்லாமாபாத்தில் பெட்ரோல் பங்குகளை பாகிஸ்தான் அரசு மூட உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் பங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ×