என் மலர்tooltip icon

    உலகம்

    • இரு நாடுகளின் தலைவர்களுடனும் அதிபர் டிரம்புக்கு நல்ல உறவு உள்ளது.
    • இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தணிக்க விரும்புகிறார்.

    வாஷிங்டன்:

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

    இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அதிபர் டொனால்டு டிரம்ப் முடிந்தவரை விரைவில் பதற்றத்தைக் குறைக்க விரும்புகிறார்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

    அவர் இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிக்கிறார் என தெரிவித்தார்.

    • பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
    • இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது.

    வாஷிங்டன்:

    பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

    உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப். அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு 1. 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஐ.எம்.எப். திட்டமிட்டிருந்தது. இந்தக் கடனை வழங்குவுது குறித்து ஐ.எம்.எப். அமைப்பு ஆய்வு செய்ய இருந்தது..

    ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்கவேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐ.எம்.எப். அமைப்பில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. சர்வதேச நிதியத்திடம் இருந்து பெறும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு செலவு செய்கிறது என தெரிவித்தது.

    • உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் ரஷியாவின் சொத்துகளை ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளது.
    • ஐரோப்பிய யூனியன் 1.9 பில்லியன் யூரோஸ் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய உக்ரைனுக்கு வழங்க இருக்கிறது.

    ஐரோப்பிய யூனியனால் முடக்கப்பட்ட ரஷியாவின் சொத்துகளை பயன்படுத்தி நாங்கள் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய 1.9 பில்லியன் யூரோஸ் உதவி செய்ய இருப்பதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.

    சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் டெனிஸ் ஷ்மியால் கூறியிருப்பதாவது:-

    உக்ரைனில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக ஆயுதங்கள் கொள்முதல் செய்ய சுமார் ஒரு பில்லியன் யூரோஸ் உதவியாக கிடைக்க இருக்கிறது.

    600 மில்லியன் யூரோஸ் வெடிப்பொருட்கள் வாங்குவதற்கும், 200 மில்லியன் உக்ரைனின் பாதுகாப்பு சிஸ்டத்தை பலப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

    டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் 1 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஆயுதம் வாங்க உதவி செய்ய இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    ராணுவ உதவி வரலாற்று சிறப்புமிக்கது. ஏனென்றால் ஆயுதங்கள் ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து பெறப்பட்ட வருமானம் மூலம் கொள்முதல் செய்யப்ட இருக்கிறது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இஸ்ரேலைத் தவிர இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவாக இல்லை.
    • உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கின்றன.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலகின் பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

    இந்த நிலையில் எங்களுடைய நண்பர்களான சீனா, துருக்கி, அஜர்பைஜான் இந்தியா- பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு தெளிவான ஆதரவு வழங்க முன்வந்துள்ளன என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் அரசு தினசரி அடிப்படையில் ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, சீனா, கத்தார் உடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளது என்றார்.

    மேலும் "இஸ்ரேலைத் தவிர இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவாக இல்லை. உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கின்றன" என்றார்.

    • பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடு கோரும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    • இந்த உள்நாட்டு எழுச்சி பாகிஸ்தானின் அதிகரித்து வரும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது.

    பாகிஸ்தான் கிழக்கில் இந்தியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் சூழலில் மேற்கில் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

    பாகிஸ்தானிடம் இருந்து தனி நாடு கோரும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவின் தாக்குதலை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

    பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா உட்பட பலுசிஸ்தான் முழுவதும் பல மூலோபாய இராணுவ நிலைகளை கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) கூறியுள்ளது.

    இந்த உள்நாட்டு எழுச்சி பாகிஸ்தானின் அதிகரித்து வரும் நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது.

    BLA செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச்சின் கூற்றுப்படி, அவர்களின் போராளிகள் கெச், மஸ்துங் மற்றும் கச்சி மாவட்டங்களில் ஆறு இடங்களில் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட IEDகள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கையெறி ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தினர்.

    இந்தத் தாக்குதல்கள்களில் குறிப்பாக பாகிஸ்தான் படைகள், அவர்களின் விநியோகத் சங்கிலிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு குறிவைக்கப்பட்டன. 

    • நேற்று இரவு முழுவதும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியாவும் தாக்குதல் நடத்தின.
    • சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன்களுக்காக பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுக்கிறது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் இந்திய பகுதிகளில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் பகுதிகளில் இந்தியாவும் தாக்குதல் நடத்தின.

    இதற்கிடையே ஏற்கனவே பொருளாதர ரீதியாக பாதிக்கப்பட்டு பாகிஸ்தான் உலக வங்கி மற்றும் உலக நாடுகள் உதவி பெற்று வரும் சூழலில் தற்போது ஏற்பட்ட மோதல் அந்நாட்டுக்கு பெரிய அடியாக மாறியுள்ளது.

    இதன் காரணமாக இந்தியாவால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசு நட்பு நாடுகளிடம் கூடுதல் கடன்களைக் கோருகிறது.

    பாகிஸ்தான் அரசின் பொருளாதார விவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "எதிரிகளால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்குப் பிறகு, சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடன்களுக்காக பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுக்கிறது.

    அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதார நெருக்கடியைக் குறைக்க உதவுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இதை மறுத்துள்ள பாகிஸ்தான் அரசு, தங்கள் பொருளாதர அமைச்சகத்தின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

    • சீனாவின் நிலைப்பாட்டை நேற்று இருநாடுகளின் தரப்பிலும் தெரிவித்து விட்டோம்.
    • அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தயார் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் இடையில் நிலவும் தற்போதைய நிலவரம் கவலை அளிக்கிறது. நிலைமையை மேலும் சிக்கலாக்காமல் நிதானம், அமைதி, பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை கடைபிடிக்க வேண்டும்.

    சீனாவின் நிலைப்பாட்டை நேற்று இருநாடுகளின் தரப்பிலும் தெரிவித்து விட்டோம். அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறோம். உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியுள்ளார்.

    முன்னதாக, இந்தியா- பாகிஸ்தான் மோதலில் நாங்கள் தலையிட மாட்டோம். இருநாடுகளுக்கிடையே இது பிராந்திய போராகவோ, அணுஆயுத போராகவோ மாற வேண்டாம் என எதிர்பார்க்கிறோம். அதிகபட்சமாக போர் பதற்றத்தை குறைக்க முயற்சி எடுக்க முடியும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கராச்சி துறைமுகம் தாக்கப்பட்ட சித்தரிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
    • கராச்சி துறைமுக கள தகவல்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளன.

    ஆபரேஷன் சிந்தூா் எதிரொலியாக நேற்று இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

    இதற்க்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்நிலையில் அரபிக் கடலில் பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் அதிநவீன போர்க் கப்பலான விக்ராந்த், பாகிஸ்தானின் கராச்சி நகரைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கராச்சி துறைமுகம் தாக்கப்பட்ட சித்தரிக்கும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இவை போலியானவை என்று உண்மை சரிபார்ப்பு மூலம் தெரிய வருகிறது. காசாவில் 2020 நடந்த தாக்குதலின் புகைப்படத்தை தவறாக கராச்சி துறைமுகம் என்று பகிரப்படுவதாக தெற்காசியாவில் தவறான தகவல் போக்குகளைக் கண்காணிக்கும் அங்கிதா மஹலனோபிஷ் தெரிவித்தார்.

    மேலும் எக்ஸ் தளத்தின் குரோக் சாட்பாட்டும் இதை அவை போலியானவை என்று உறுதி செய்துள்ளது. மேலும் கராச்சி துறைமுக கள தகவல்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளன.

    • ஜம்மு மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டன.
    • இந்தியாவுடன் பாகிஸ்தானின் மோதல் விரிவடையும் தெளிவான சாத்தியக்கூறு உள்ளது.

    இந்தியாவின் எல்லை பகுதிகளான ஜம்மு மற்றும் உதம்பூர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ராணுவ தளங்களையும், பஞ்சாபில் உள்ள பதான்கோட்டையும் பாகிஸ்தான் நேற்று இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியது.மேலும் இதனால் அப்பகுதிகளில் மின்சாரம் துணிக்கப்பட்டது. இந்திய ராணுவம் பெரும்பாலான பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன்களை வெற்றிகரமாக அழித்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதான்கோட், ஜெய்சால்மர் மற்றும் ஸ்ரீநகர் மீது பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் பரப்பும் ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது .

    இந்த கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டவை மற்றும் பாகிஸ்தானை அவதூறு செய்வதை நோக்கமாகக் கொண்ட பொறுப்பற்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். நம்பகமான விசாரணை இல்லாமல் பாகிஸ்தான் மீது சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளை இந்தியா மீண்டும் மீண்டும் சுமத்துகிறது" என்று வெளியுறவு அலுவலகம் குற்றம் சாட்டியது. 

    இதற்கிடையே தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீரில் நடைபெறும் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பொறுப்பல்ல என்று என்று கவாஜா ஆசிப் தெரிவித்தார். "நாங்கள் தாக்கிவிட்டு, பின்னர் அதை மறுக்க மாட்டோம்," என்ற ஆசிப், பாகிஸ்தான் தாக்க முடிவு செய்யும்போது அது உலகம் முழுவதும் அறியப்படும் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.

    இருப்பினும், இந்தியாவுடன் பாகிஸ்தானின் மோதல் விரிவடையும் தெளிவான சாத்தியக்கூறு இருப்பதாக ஆசிப் எச்சரித்தார். 

    • ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
    • இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் நிலைகுலைந்து காணப்பட்டது.

    வாஷிங்டன்:

    பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.

    இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் நாங்கள் தற்போது தலையிடப் போவதில்லை.

    பதற்றத்தைத் தணிப்பதற்கு முயற்சி செய்வோம்.

    இரு நாடுகளையும் ஆயுதங்களைக் கைவிடும்படி நாங்கள் கூறமுடியாது.

    இது மிகப் பெரிய போராகவோ, அணு ஆயுத பிரச்சனையாகவோ மாறாது என நம்புகிறோம் என தெரிவித்தார்.

    • புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
    • முதல் நாள் நடந்த வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    வாடிகன் சிட்டி:

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), கடந்த மாதம் 21-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

    புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாடிகனில் உள்ள தேவாலயத்தின் சிம்னியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது.

    இந்நிலையில், புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைனில் இருந்து அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்கா ஒப்பந்தம்.
    • இந்த ஒப்பந்தத்தை உக்ரைன் பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி படையெடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கிய நிலையில் ரஷியா ஏராளமான பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து பல பகுதிகளை மீட்டது. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது.

    இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுத்துக் கொள்ள உக்ரைனுடன் ஒப்பந்தும் போட்டுக்கொள்ள டிரம்ப் விரும்பினார். முதலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு உக்ரைன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஒருமனதாக ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. வாக்கெடுப்பு வெற்றிபெற 226 வாக்குகள் தேவை என்ற நிலையில், 338 வாக்குகள் ஆதரவாக விழுந்தன. எந்தவொரு உறுப்பினரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணிக்கவில்லை என உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ×