என் மலர்tooltip icon

    உலகம்

    • ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்.
    • இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பாக தடுத்து அழித்தது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா கடந்த 7ம் தேதி நள்ளிரவில் சுமார் 25 நிமிடத்திற்குள் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகளை தாக்கி அழித்தது.

    இதனால், பாகிஸ்தான ராணுவம் இந்திய எல்லையில் தன்னிச்சையாக அத்துமீறி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர்.

    இதற்கிடையே நேற்றிரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    குறிப்பாக அவந்திபூரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட்டு, அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, அதாம்பூர், பதிண்டா, சண்டிகார், நநல், பலோடி, உட்டார்லை, பூஜ் ஆகிய இடங்கில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் சரமாரி தாக்குதல் நடத்தியது.

    இந்திய விமானப்படை எஸ்-400 சுதர்ஷன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை சிஸ்டம் மூலம் அவைகள் தாக்கி அழிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பாக தடுத்து அழித்தது. மேலும், லாகூரில் இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், லாகூர் நகரை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    லாகூரை விட்டு வெளியேற முடியவில்லை என்றால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    • இன்று காலை இந்திய ராணுவ இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்.
    • இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பல்வேறு இடங்களை குறிவைத்து இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷேன் சிந்தூர் என்ற பெயரில் 07-05-2025 அன்று 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 9 இடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் (LoC) பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தன்னிச்சையாக அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே இன்று காலை டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் 15 இடங்களில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் (Indian Air Force S-400 Sudarshan Chakra air defence missile systems) வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது.

    அதேவேளையில் இந்தியா பாகிஸ்தானை நோக்கி டிரோன்களை செலுத்தியது. இந்த டிரோன்கள் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற இடங்களை தாக்கியது. இதில் லாகூர் வான் பாதுகாப்பு சிஸ்டம் தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் இந்தியாவின் 25 டிரோன்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகத் துறை {Inter-Services Public Relations (ISPR)} தெரிவித்துள்ளது.

    இதுவரை இந்தியாவால் செலுத்தப்பட்ட இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட 25 ஹெரோப் டிரோன்களை பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் இருந்து டிரோன்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. எதிரிகள் மற்றும் எதிரிகளின் அனைத்து நோக்கங்களையும் அழிக்கும் வகையில் பாகிஸ்தான் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

    • ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் பயங்கரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

    பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவுஃப் அசார் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    IC-814 விமான கடத்தல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவன் அப்துல் ரவுஃப் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ட்ரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவத்தால் தடுக்க முடியவில்லை.
    • ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தெரியவில்லை.

    'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலை மத்திய அரசு நடத்தியது.

    இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலை வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூரில் இன்று காலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள வால்டன் விமான தளத்தை குறி வைத்து தாக்குதல் நடந்தது. இதில் ராணுவத்தினர் 4 பேர் காயமடைந்தனர்.

    இதற்கிடையே லாகூரை தொடர்ந்து பாகிஸ்தானில் மேலும் 8 நகரங்களில் டிரோன் தாக்குதல்கள் நடந்துள்ளது. கராச்சி, ராவல்பிண்டி, குஜ்ரன்வாலா, சக்வல், பகவல்பூர், மியானோ, சோர், அட்டோக் ஆகிய நகரங்களிலும் ட்ரோன் தாக்குதல் நடந்தது. நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை தற்கொலை படை ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.

    இதனால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்திருந்தனர். இதற்கிடையே 9 நகரங்களில் 12 டிரோன் தாக்குதல் நடந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இந்த ட்ரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவத்தால் தடுக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது யார் என்பது தெரியவில்லை. நேற்று அதிகாலை பாகிஸ்தான் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய பிறகு அதற்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தானில் 9 நகரங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடந்துள்ளது.

    • பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே இன்று காலை குண்டு வெடித்தது.
    • லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை போலீசார் உறுதி செய்தனர்.

    'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலை மத்திய அரசு நடத்தியது.

    இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலை வருகிறது.

    பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே இன்று காலை குண்டு வெடித்தது. விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

    மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறினர். மேலும் லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.

    லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை போலீசார் உறுதி செய்தனர். விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வால்டன் சாலையில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் கராச்சியிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று காலை லாகூரில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த நிலையில் தற்போது கராச்சியிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துள்ளது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் கராச்சியில் மக்கள் பதற்றமடைந்தனர்.

    • 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
    • ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ள நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    புதிய போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்படும் வரை கார்டினல்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதற்காக அவர்களது செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டும், அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே சிறப்பு திருப்பலி நடந்த பின்னர் வாக்கெடுப்பில் ரகசியம் காப்பது தொடர்பாக பீடத்தின் முன்பு நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. அதில் 3-ல் 2 பங்கு ஆதரவு (89 வாக்குகள்) பெறும் கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.

    போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதனை தெரிவிக்கும் விதமாக மரபுபடி கார்டினல்கள் எழுதி வைத்திருந்த காகிதங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டு ஆலய சிம்னி வழியாக கரும்புகை வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் புதிய போப் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறும். புதிய போப் தேர்வு செய்யப்பட்டால் ஆலய சிம்னி வழியாக வெண்புகை மூலம் வெளியுலகுக்கு தெரிவிக்கப்படும்.

    இன்று 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
    • பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை

    காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

    இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரை யாற்றினார். அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றத்தில் இருந்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    "பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துவிட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவின் தாக்குதல்கள் கோழைத்தனமானது.

    பாகிஸ்தான் பின்வாங்கும் என்று இந்தியா நினைத்திருக்கலாம், ஆனால் தங்கள் நாட்டிற்காகப் போராடத் தெரிந்த ஒரு நாடு பாகிஸ்தான் என்பதை இந்தியா மறந்துவிட்டது. இந்தியாவின் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 46 பேர் காயமடைந்த னர். இங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் பழிவாங்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.

    பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் பாகிஸ்தான் மீது இந்தியா தவறான காரணங்களுக்காக குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டுவதற்கு முன்பு, விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை.

    இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஒரு மணி நேர வான்வழிப் போரில் நமது விமானிகள் எதிரிகளின் ஜெட் விமானங்களை வெடிக்கச் செய்தனர். எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் தொடர்ச்சியான சண்டை நடந்து வருகிறது. அங்கு பாகிஸ்தான் ராணுவம் தங்கள் துணிச்சலைக் காட்டிப் போராடி வருகிறது.

    எனது பாகிஸ்தான் மக்களே உங்கள் சொந்த பாதுகாப்பிற்காக, நமது ராணுவத்துக்கு எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். நாம் நிச்சயமாக அவர்களை (இந்தியாவை) எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம். நாட்டின் பாதுகாப்பிற்காக, பாகிஸ்தான் மக்களின் தைரியம் எனக்கு தேவை" என்று பேசினார்.

    • விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.
    • பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது.

    விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அங்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது. அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

    மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து அவசரமாக வெளியேறினர். மேலும் லாகூர் விமான நிலையத்திலும் அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர்.

    லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை போலீசார் உறுதி செய்தனர். விமானநிலையத்திற்கு அருகிலுள்ள வால்டன் சாலையில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு நடந்தது என்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    முன்னதாக நள்ளிரவில் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு தனது வான்வெளியை மூடியதாக அறிவித்தது. இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமா பாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

    • ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேரும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் கொல்லப்பட்டனர்.
    • கராச்சி விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின.

    'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேரும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் கொல்லப்பட்டனர்.

    'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலையடுத்து பாகிஸ்தான் தனது வான்வெளியை மூட நேற்று நள்ளிரவு முடிவு செய்தது.

    அதன்படி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. இருப்பினும் கராச்சி விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது.

    லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

    • பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.
    • பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

    சிங்கப்பூர்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் நேற்று ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ராணுவம் தெரிவித்தது.

    இந்நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

    • நாங்கள் இரு நாடுகளுடனும் நன்றாகப் பழகுகிறோம்.
    • அவர்கள் நிறுத்துவதை பார்க்க விரும்புகிறேன் என்றார்.

    வாஷிங்டன்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஓ, இது மிகவும் மோசமானது. என் நிலைப்பாடு என்னவென்றால் நான் இருவருடனும் ஒத்துப்போகிறேன்.

    எனக்கு இருவரையும் நன்றாகத் தெரியும். அவர்கள் அதைச் சரிசெய்வதை பார்க்க விரும்புகிறேன். அவர்கள் நிறுத்துவதை பார்க்க விரும்புகிறேன்.

    இப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் மோசமாகிவிட்டார்கள், எனவே இப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் இரு நாடுகளுடனும் நன்றாகப் பழகுகிறோம்.

    இருவருடனும் நல்ல உறவுகள் உள்ளன. அது நின்றுவிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏதாவது உதவி செய்ய முடிந்தால், நான் அங்கே இருப்பேன் என தெரிவித்தார்.

    • 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது இந்தியா.
    • 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் சொல்கிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. 9 முகாம்கள் மீது 26 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதேவேளையில் ரஃபேல் விமானங்கள் உள்பட 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தான் பிரதமர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பின் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீபின் ஆலோசகர் ராணா சமானுல்லா கூறுகையில் "இந்தியா மேற்குகொண்டு எந்த பதற்றத்தையும் அதிகரிக்கவில்லை என்றால், பாகிஸ்தான் எந்தவொரு பொறுப்பற்ற நடவடிக்கையையும் எடுக்காது என்பதை உலகிற்கு அரசு மற்றும் ராணுவம் உறுதிப்பூண்டுள்ளது.

    நாங்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளோம். இந்தியா மேலும் நடவடிக்கை மேற்கொண்டால், அதன்பின் கூடுதலாக பதிலடி கொடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

    ×