என் மலர்
உலகம்

எல்லை பதற்றம்: வான்வெளியை மூடிய பாகிஸ்தான் - விமான சேவை பாதிப்பு
- ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேரும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் கொல்லப்பட்டனர்.
- கராச்சி விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இந்திய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தின.
'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேரும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் கொல்லப்பட்டனர்.
'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலையடுத்து பாகிஸ்தான் தனது வான்வெளியை மூட நேற்று நள்ளிரவு முடிவு செய்தது.
அதன்படி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. இருப்பினும் கராச்சி விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது.
லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story






