என் மலர்
உலகம்
- இந்திய விமானங்கள் வான்வெளியை பயன்படுத்த ஏற்கனவே தடைவிதித்திருந்தது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. இதனால் பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதித்தது.
இந்த நிலையில் நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியுள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி (பாகிஸ்தான் ராணுவ தலைமையகம்) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவசரநிலைக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அது பதிலடியாக இருக்காது. பதற்றத்தை அதிகரிக்கும் என ராணுவம் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சந்தித்து பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய பதிலடி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
- பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசு கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என தலிபான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- பாகிஸ்தான் மீது இரவு நேரத்தில் இருளைப் பயன்படுத்தி கோழைத்தனமான தாக்குதலை இந்தியா நடத்தியது.
- வழக்கமான போராக இருந்தாலும் சரி, அணு ஆயுதப் போராக இருந்தாலும் சரி, நாம் யார் என்பதை இப்போது அவர்கள் அறிவார்கள்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஜெய்ஸ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இன்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
தனது உரையில், பாகிஸ்தான் மீது இரவு நேரத்தில் இருளைப் பயன்படுத்தி கோழைத்தனமான தாக்குதலை இந்தியா நடத்தியது. ஆனால் ராணுவம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது என்று தெரிவித்தார்.
மொத்தம் 80 இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த அவர் அவற்றில் மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்துவதில் ராணுவம் வெற்றி பெற்றது என்று தெரிவித்தார்.
மேலும் இரண்டு ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றார். தொடர்து பேசிய அவர், வழக்கமான போராக இருந்தாலும் சரி, அணு ஆயுதப் போராக இருந்தாலும் சரி, நாம் யார் என்பதை இப்போது அவர்கள் அறிவார்கள்" என்று தெரிவித்தார்.
- ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார்.
- பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு அந்நாட்டு அரசு செயலாற்ற முழு அதிகாரம் வழங்கியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல்கள் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார்.
இதுதொடர்பான அறிக்கையில், "இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகளின் தீவிரத்தை உணர்ந்து, சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை வெளிப்படையாக மீறியதற்காக அதை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்" என்று சர்வதேச சமூகங்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.
மேலும், "பாகிஸ்தான் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அமைதிக்கு உறுதிபூண்டுள்ளது, மேலும் அதன் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஒருபோதும் மீற அனுமதிக்காது. அதன் பெருமைமிக்க மக்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய அனுமதிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்தியாவின் கொடிய தாக்குதல்களை பாகிஸ்தான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. அவற்றை போர் நடவடிக்கைகள் என்று அறிவிக்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "இந்திய ராணுவத்தால் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைப்பது ஒரு கொடூரமான மற்றும் வெட்கக்கேடான குற்றமாகும், இது மனித நடத்தையின் அனைத்து விதிமுறைகளையும் சர்வதேச சட்டத்தின் விதிகளையும் மீறுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் ஆயுதப் படைகளுக்கு அந்நாட்டு அரசு செயலாற்ற முழு அதிகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பஹல்காம் தாக்கதலுக்கு பதிலடியாக இந்தியா 9 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.
- பாகிஸ்தானில் உள்ள 3 இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்தியாவின் முப்படைகள் கடும் தாக்குதல் நடத்தின. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. 70 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு சீனா வருத்தம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க தயாராக உள்ளோம் எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சீனா தூதரை அழைத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு "பிராந்திய பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, அனைத்து தொடர்புடைய பகுதிகளிலும் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பைப் பராமரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது" என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு தற்போது சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த விசயத்தில் சீனா விலகியிருக்வே விரும்பும்.
- ஆபரேஷன் சிந்தூர் நடந்த பகுதிகளைச் சுற்றி இருக்கும் அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
- இந்திய - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்"
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க மக்களை எச்சரித்துள்ளது. அதன் அறிவிப்பில்,
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடந்த பகுதிகளைச் சுற்றி இருக்கும் அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
அதேபோல, இந்திய - பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம். பாகிஸ்தான் பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.
இந்திய - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்" என்று கூறியுள்ளது.
இதேபோல், தாக்குதல் நடக்கும் பகுதிகளைவிட்டு அமெரிக்க மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அமெரிக்க வெளியுறவுத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
- வீடியோவை பார்ப்பவர்களுக்கு, தொழில்நுட்பத்தின் அபாயங்கள் தொடர்பான கவலை எழுகிறது.
உலகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் சில நன்மைகளும், சில தீமைகளும் நடைபெறத்தான் செய்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் கொடி கட்டி பறக்கும் சீனா, ரோபோவைக்கொண்டு பல ஆச்சரியமான கண்டுபிடிப்புகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரோபோவை உருவாக்குபவருக்கு அந்த ரோபோவால் ஏற்படும் பிரச்சனை தான் கதை.
அதைப்போலத்தான் சீனாவிலும் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஒரு தொழிற்சாலையில் மனித உருவ ரோபோட்டை உருவாக்கும் பணியில் இருவர் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ரோபோ செயலிழந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்குகிறது. இதனால் அச்சமடைந்தவர்கள் அங்கிருந்து சிறிது தூரம் ஓடி செல்கின்றனர். பின்பு, திரும்பி வந்து ரோபோவை பழைய நிலைமைக்கு கொண்டுவருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு, தொழில்நுட்பத்தின் அபாயங்கள் தொடர்பான கவலை எழுகிறது. மேலும் பேசுபொருளாகி உள்ளது.
- திய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும்.
- கருப்பு நிற புகை வெளியிடப்பட்டால் போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதை குறிக்கும்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ்(வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 26-ந் தேதி ரோமில் உள்ள புனித மேரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்யும். மாநாடு மே 7-ந்தேதி தொடங்கும் என்று வாடிகன் அறிவித்தது. அதன்படி இன்று போப் தேர்வு தொடங்குகிறது. வாடிகனில் உள்ள 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாரம்பரியமிக்க சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் புதிய போப்பை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய ஆலோசனை கூட்டமும், வாக்கெடுப்பும் நடக்கிறது.
இதற்காக வாடிகனில் 250 கார்டி னல்கள் குவிந்துள்ளனர். ஆனால் 80 வயதிற்குட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள கார்டி னால்கள் சிஸ்டைன் தேவா லயத்திற்குள் செல்வதற்கு முன்னர், பைபிள் மீது கை வைத்து ரகசிய காப்பு உறுதி மொழி எடுத்துக்கொள்வார்கள்.
கார்டினல்களை தவிர இரண்டு அவசர கால மருத்துவர்கள், கார்டினால்களுக்கு சமைக்கும் நபர்கள் மட்டுமே சிஸ்டைன் தேவாலயத்திற்குள் அனுமதிக் கப்படுவார்கள். கார்டினல்கள் உள்பட சிஸ்டைன் தேவாலயத்தி்ற குள் செல்லும் அனைவரும் வெளி உலக தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து வாடிகனில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக் கப்படும். சிஸ்டைன் தேவா லயத்திற்கு உள்ளேயும் வெளி பகுதியிலும் தொலை பேசி மற்றும் இணைய சிக்னல்களை தவிர்க்க ஜாமர்கள் பொருத்தப்பட்டிருக்கும். கார்டினல்கள் தங்கும் மாளிகையிலும் தொலைக்காட்சி, வானொலி, செய்திதாள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடை பெறும். ஒவ்வொரு கார்டி னல் வாக்காளரும் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டுகளில் எழுதி தங்களது வாக்குகளை அளிப்பார்கள்.
இந்த நடைமுறைகளுக்கு பின்னர் சிஸ்டைன் தேவா லயத்தில் அண்மையில் பொருத்தப்பட்ட புகை போக்கியில் கருப்பு நிற புகை வெளியிடப்பட்டால் போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதை குறிக்கும்.
வெள்ளை நிற புகை வந்தால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை குறிக்கும். போப் தேர்வு செய்ய கர்டினல்கள் வாக்கு செலுத்திய சீட்டுகள் உடனடியாக எரிக்கப்படும்.
புதிய போப் தேர்வு போட்டியில் இத்தாலியை சேர்ந்த பியட்ரோ பரோலின்(வயது 70), ஹங்கேரியை சேர்ந்த பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), உள்பட 8 பேர் உள்ளனர்.
போப் தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த பிலிப் நேரி பெராவ், பசேலியோஸ் கிளீமிஸ், அந்தோணி பூலா, ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் ஆகிய 4 கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
- இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுடன் பாகிஸ்தான் சமரசத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.
இந்தியா பின்வாங்குவதை தேர்வுசெய்தால், இந்தப் பதற்றத்தைத் தணிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்." என்று தெரிவித்தார்.
- 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- சீனா அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது,
"இந்தியாவில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் வருந்தத்தக்கது, இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் எப்போதும் ஒருவருக்கொருவர் அண்டை நாடுகளாகவே இருக்கும்.
சீனா எல்லா வகையான பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் நலனுக்காக இரு தரப்பினரும் செயல்படவும், அமைதியாக இருக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார்.
- பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
- பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் கட்டிடம் ஒன்று சேதமடைந்ததன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
தங்கள் நடவடிக்கைகள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே என்றும் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.
இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.






