என் மலர்tooltip icon

    உலகம்

    • பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ராணுவக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்தார்

    இது தொடர்பாக பேசிய ஐநா சபை பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர், "எல்லை கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐநா சபை பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அதிகபட்ச இராணுவ நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுக்கிறார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலை உலகம் தாங்காது" என்று தெரிவித்ததாக கூறினார்.

    • பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

    பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    இந்நிலையில், இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. லாகூர், சியால்கோடி விமான நிலையங்கள் மூடப்பட்டன.

    • ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
    • இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக பிரிவு தலைவர் அகமது ஷெரீப் சவுதிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இது கோழைத்தனமானது. எதிரி இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பஹ்வல்பூர், கோட்லி, முசாபராபாத் ஆகிய 3 நகரங்களில்

    வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளது.

    • பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:

    நாங்கள் ஓவல் மைதானத்தின் வாசலில் நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிக் கேள்விப்பட்டோம்.

    கடந்த காலத்தின் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏதோ நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

    அவர்கள் பல தசாப்தங்களாகப் போராடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பற்றி யோசிக்கும்போது பல நூற்றாண்டுகளாக. இல்லை, அது மிக விரைவாக முடிவடையும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார்.
    • மெர்சுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் உள்ளடக்கிய கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

    630 இடங்களைக் கொண்ட ஜெர்மனி பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் பிரதமர் ஆவதற்கு 316 வாக்குகள் தேவைப்பட்டன.

    310 வாக்குகளை பெற்ற அவரால் முதல் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியவில்லை. அதன்பின் நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில் பிரெட்ரிக் மெர்ஸ் 325 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஜெர்மனியின் 10-வது அதிபர் ஆகிறார் பிரெட்ரிக் மெர்ஸ்.

    ஜெர்மனி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் மெர்சுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
    • ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாதுகாப்பு, அச்சுறுத்தல் கறித்து கேட்டறிந்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நிதி நீர் ஒப்பந்தம் சஸ்பெண்ட் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இருநாட்டு தலைவர்களும் ராணுவ தளபதியுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படலாம் என பற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தலைமையகத்திற்கு சென்றார். அவருடன் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் பல உயர் அதிகாரிகள் சென்றனர்.

    நாட்டின் பாதுகாப்பு முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அப்போது இந்தியாவில் இருந்து வரும் அச்சுறுத்தல், ராணுவத்தின் நிலை, போர் வியூகம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐஎஸ்ஐ தலைவைர் முகமது ஆசிம் மாலிக், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொலைப்பேசி உரையாடல் நடந்தது.
    • வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும்.

    இந்தியா- இங்கிலாந்து இடையே சுதந்திர வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பிரதமர் மோடி - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொலைப்பேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், எனது நண்பர் பிரதமர் கெயர் ஸ்டார்மர் உடன் பேசுவதில் மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாக, இந்தியாவும் இங்கிலாந்தும் பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துள்ளன.

    இது நமது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும், மேலும் நமது இரு பொருளாதாரங்களிலும் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும்.

    பிரதமர் ஸ்டார்மரை விரைவில் இந்தியாவிற்கு வரவேற்பதில் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 

    இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவிக்காலத்தில் இருந்து இரு நாடுகளும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் இந்தியர்களுக்கான விசா பிரச்சனைகள் தீர்வு, கார்கள் மற்றும் ஸ்காட்ச் விஸ்கி போன்ற இங்கிலாந்து ஏற்றுமதிகள் மீதான வரிகள் குறைப்பு ஆகியவையும் அடங்கும்.

    • உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரித்து அதற்காகப் போராடுவீர்கள்? என்று அப்துல் அஜீஸ் கேட்டார்.
    • இங்கே ஒரு கொடூரமான, பயனற்ற அமைப்பு உள்ளது. அது இந்தியாவை விட மோசமானது

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது.

    பாகிஸ்தானின் அமைச்சர்களும் இந்தியா நிச்சயமாகத் தாக்கும் என்று அஞ்சுகிறார்கள். இதற்கிடையில், இஸ்லாமாபாத்தின் லால் மசூதியின் மதகுரு அப்துல் அஜீஸ் காசி தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.\

    ஒரு மேடையில் இருந்து, அங்கு கூடியிருந்த மக்களிடம், "உங்களிடம் ஒரு கேள்வி உள்ளது. சொல்லுங்கள், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் போராடினால், உங்களில் எத்தனை பேர் பாகிஸ்தானை ஆதரித்து அதற்காகப் போராடுவீர்கள்?" என்று அப்துல் அஜீஸ் கேட்டார்.

    இந்தக் கேள்விக்குப் பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் மௌனம் நிலவியது. கூட்டத்தில் யாரும் கையை உயர்த்தவில்லை.

    இதன்பின் பேசிய மதகுரு அப்துல் அஜீஸ் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்தார். "இன்று பாகிஸ்தானில் அவநம்பிக்கை நிலவுகிறது. இங்கே ஒரு கொடூரமான, பயனற்ற அமைப்பு உள்ளது. அது இந்தியாவை விட மோசமானது" என்று கூறினார்.

    பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்கவாவில் நிலவும் அமைதியின்மை குறித்து பேசிய அவர் பாகிஸ்தான் அரசு அதன் சொந்த மக்களை குண்டுவீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.

    "பலுசிஸ்தானிலும் கைபர் பக்துன்கவாவிலும் அவர்கள் செய்தது அட்டூழியங்கள். அவர்களின் சொந்த குடிமக்களைக் குண்டுவீசித் தாக்குகின்றனர்" என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் குறிப்பாக இந்தியாவில் படு வேகமாக வைரலாகி வருகிறது.  

    • ல் மாஸ்கோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகள் மீது உக்ரைன் 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியது.
    • மாஸ்கோவில் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல் காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவின் 4 விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

    ரஷியாவில் மாஸ்கோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகள் மீது உக்ரைன் 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியது. இதில் பலவும் இடைமறித்து அழிக்கப்பட்டதாக மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலால் மாஸ்கோவைச் சுற்றியுள்ள நான்கு விமான நிலையங்களும் தற்காலிகமாக விமானங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ரஷியாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, உக்ரைனின் எல்லையிலும் ரஷ்யாவின் உள்பகுதியிலும் டிரோன்கள் தாக்குதல் நடந்துள்ளதால் மற்ற ஒன்பது பிராந்திய ரஷிய விமான நிலையங்களும் தற்காலிகமாக செயல்படுவதை நிறுத்திவிட்டன.

    டிரோன் தாக்குதலில் குர்ஸ்க் பகுதியில் இரண்டு பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஆளுநர் அலெக்சாண்டர் கின்ஷ்டீன் தெரிவித்தார். மேலும் வோரோனேஜ் பகுதியில் சில சேதங்கள் பதிவாகியுள்ளன.

    இரண்டாம் உலகப் போரில் வெற்றி தினத்தைக் குறிக்கும் வகையில் மே 8 முதல் 10 வரை மாஸ்கோவில் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக 3 நாள் போர் நிறுத்தத்திற்கு புதின் அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்த நிலையில் இந்த டிரோன் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 

    • பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், 1 உள்ளூர் குதிரை ஓட்டி உயிர் இழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் துண்டித்து உள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போல பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.

    இதையடுத்து ஐ. நா. பாது காப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடந்தது. இக்கூட்டம் திறந்த ஆலோசனையாக இல்லாமல் மூடிய அறையில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் தங்களது கருத்துக் களை தெரிவித்தன.

    இக்கூட்டம் சுமார் 1½ மணி நேரம் நடந்தது. இதில் சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது குறித்து பாகிஸ்தான் பிரச் சினையை எழுப்பியது.

    இந்த கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. அறிக்கையோ தீர்மானமோ என எந்த ஒரு விஷயமும் எடுத்துக்கொள் ளாமல் கூட்டம் நிறைவு பெற்றது. இதன் மூலம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தொடர்பு குறித்து பாகிஸ்தானிடம் கேள்வி கேட்டனர். மேலும் பாகிஸ்தானின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் மற்றும் அணு ஆயுதப் பேச்சுக்கள் குறித்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.

    இது பதற்றமான நிலைமையை அதிகரித்ததாக கருத்துக்களை தெரிவித்தனர்.இந்தப் பிரச்சினையை இந்தியாவுடன் இருதரப்பு ரீதியாக நாடுமாறு பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் அழைப்பு விடுத்தனர்.

    முன்னதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெ ரெஸ் கூறும்போது, "எந்த காரணத்துக்காகவும் பொது மக்களின் மீதான பயங்கரவாத தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. சமீபத்திய பிரச்சினையால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

    பிரச்சினைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு ஏற்படாது. எனவே இருநாடு களும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும். எந்த தவறும் செய்யாதீர்கள். ராணுவத்தீர்வு ஒரு தீர்வாகாது" என்றார்.

    • பாதுகாப்புத் துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் இந்தியாவின் நிதி நிலையில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும்.
    • நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம் நிதிப் பற்றாக்குறையை அரசாங்கம் இலக்காகக் கொண்டு உள்ளது.

    அமெரிக்காவின் பிரபல உலகளாவிய பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் எந்த நாட்டுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு செய்து அறிவித்துள்ளது.

    நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மூடிஸ் நிறுவனம் இது குறித்து கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், பாகிஸ்தானுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியின் பங்கு 0.5 சதவீதத்துக்கும் குறைவானது ஆகும். இந்தியா பாகிஸ்தானுடன் பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

    இதன் காரணமாக, போர் பதற்றத்தால் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. இந்தியா பாதுகாப்பாக இருக்கும்.

    அதேநேரத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் இந்தியாவின் நிதி நிலையில் சிறு பாதிப்பை ஏற்படுத்தும்.

    2024-25 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதம் நிதிப் பற்றாக்குறையை அரசாங்கம் இலக்காகக் கொண்டு உள்ளது.

    மேலும், 2025 நிதி ஆண்டில் 57.1சதவீதமாக இருந்த கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 2031 நிதியாண்டில் 50 சதவீதமாகக் குறைப்பதையும், 2027 நிதி ஆண்டில் இருந்து வருடாந்திர கடன் இலக்கு கட்டமைப்பிற்கு மாற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

    மக்களின் வலுவான பொது முதலீடு மற்றும் மீள்தன்மை கொண்ட நுகர்வோர் தேவை ஆகியவை இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க வைக்கின்றன.

    ஆனால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் அது பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதில் பாகிஸ்தான் பெரும் பின்னடைவை எதிர் கொள்ளும்.

    தொடர்ச்சியான போர் பதட்ட நிலை பாகிஸ்தானின் வெளிப்புற நிதியுதவியைப் பெறுவதற்கான திறனைக் கட்டுப்படுத்தும். அதன் அந்நியச் செலாவணி இருப்புக்களை பெருமளவில் குறைக்கக்கூடும்.

    இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    • சான் பிரான்சிஸ்கோயில் அல்காட்ராஸ் சிறைச்சாலை செயல்பட்டு வந்தது.
    • 1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் கொடூர குற்றவாளிகளுக்கான அல்காட்ராஸ் (Alcatraz) சிறையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அமெரிக்காவில் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளை அடைத்து வைக்க, சான் பிரான்சிஸ்கோயில் அல்காட்ராஸ் சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது.

    1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்

    தற்போது இச்சிறைச்சாலை சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது

    ×