என் மலர்
நீங்கள் தேடியது "பிரெட்ரிக் மெர்ஸ்"
- சமீபத்தில் நடந்த ஜெர்மனி அதிபர் தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார்.
- பிரெட்ரிக் மெர்சுக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற ஜெர்மனி அதிபர் தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் வென்ற மெர்சுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்சுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இருவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளும் ஒற்றுமையாக செயல்படுவது என ஒருவருக்கொருவர் உறுதிமொழி அளித்தனர்.
- பாராளுமன்றத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார்.
- மெர்சுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பெர்லின்:
ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் உள்ளடக்கிய கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றது.
இதற்கிடையே, அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
630 இடங்களைக் கொண்ட ஜெர்மனி பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் பிரதமர் ஆவதற்கு 316 வாக்குகள் தேவைப்பட்டன.
310 வாக்குகளை பெற்ற அவரால் முதல் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியவில்லை. அதன்பின் நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில் பிரெட்ரிக் மெர்ஸ் 325 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஜெர்மனியின் 10-வது அதிபர் ஆகிறார் பிரெட்ரிக் மெர்ஸ்.
ஜெர்மனி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் மெர்சுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






