என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Friedrich Merz"

    • ஜெர்மனி அதிபர் பிரெட்ரிச் மெர்ஸ் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார்.
    • அவர் சீனாவின் யுனிட்ரீ ரொபொடிக்ஸ் தொழில் நிறுவனத்திற்கு சென்றார்

    பீஜிங்:

    கிரீன்லாந்து விவகாரத்தில் தனக்கு ஆதரவளிக்காத ஐரோப்பிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதலாக வரிகள் விதித்தை அடுத்து, பல்வேறு முன்னணி நாடுகள் சீனா உடனான உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதமர்களைத் தொடர்ந்து ஜெர்மனி அதிபர் பிரெட்ரிச் மெர்ஸ் சீன தலைநகர் பீஜிங் சென்றுள்ளார்.

    முதல் முறையாக சீனா சென்றுள்ள அவர் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து உரையாடுகிறார். இரு நாடுகளிடையே சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

    உலக அளவிலான மிகப்பெரிய அரசியல் பிரச்சனைகளை சீனாவின் ஈடுபாடின்றி முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றும், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட நெருக்கடிகள் மற்றும் போர்களைத் தீர்க்க சீனாவின் ஒத்துழைப்பு தேவை என ஜெர்மனி அதிபர் மெர்ஸ் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜெர்மன் அதிபர் மெர்ஸ் சீனாவின் யுனிட்ரீ ரொபொடிக்ஸ் தொழில் நிறுவனத்திற்கு சென்றார். அப்போது அங்கு மனிதர்களைப் போல வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் வரிசையாக நின்று நடனமாடி அசத்தின. மேலும் பாக்சிங் மற்றும் குங்பூ சண்டையிட்டுக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

    ரோபோ அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொண்ட ஜெர்மன் அதிபர், அந்த நிறுவனத்தின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    • சமீபத்தில் நடந்த ஜெர்மனி அதிபர் தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார்.
    • பிரெட்ரிக் மெர்சுக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற ஜெர்மனி அதிபர் தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் வென்ற மெர்சுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்சுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இருவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளும் ஒற்றுமையாக செயல்படுவது என ஒருவருக்கொருவர் உறுதிமொழி அளித்தனர்.

    • பாராளுமன்றத்தில் இன்று நடந்த வாக்கெடுப்பில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார்.
    • மெர்சுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் உள்ளடக்கிய கன்சர்வேடிவ் கூட்டணி வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

    630 இடங்களைக் கொண்ட ஜெர்மனி பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் பிரதமர் ஆவதற்கு 316 வாக்குகள் தேவைப்பட்டன.

    310 வாக்குகளை பெற்ற அவரால் முதல் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியவில்லை. அதன்பின் நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில் பிரெட்ரிக் மெர்ஸ் 325 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஜெர்மனியின் 10-வது அதிபர் ஆகிறார் பிரெட்ரிக் மெர்ஸ்.

    ஜெர்மனி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் மெர்சுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ×