என் மலர்
இந்தியா

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒற்றுமையாக செயல்படுவோம்: ஜெர்மன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு
- சமீபத்தில் நடந்த ஜெர்மனி அதிபர் தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார்.
- பிரெட்ரிக் மெர்சுக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற ஜெர்மனி அதிபர் தேர்தலில் பிரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் வென்ற மெர்சுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்சுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இருவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளும் ஒற்றுமையாக செயல்படுவது என ஒருவருக்கொருவர் உறுதிமொழி அளித்தனர்.
Next Story






