என் மலர்tooltip icon

    உலகம்

    • இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
    • 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணை ஆயுத அமைப்பை சோதித்தது.

    ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் ஊடகங்களின்படி, பாகிஸ்தான் தரையிலிருந்து தரைக்கு பாய்ந்து தாக்கும் ஃபதே (Fatah) ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த ஏவுகணை 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் என்று கூறப்படுகிறது.

    ஃபதே ஏவுகணை, ஒரு குறுகிய தூர தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். இது திட எரிபொருள் அடிப்படையிலான ஏவுகணை என்பதால், இதை விரைவாக ஏவ முடியும். இது வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது

    இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தனது ஏவுகணையை சோதிப்பது இது முதல் முறை அல்ல. சமீபத்தில் அது தரையிலிருந்து தரைக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் தாக்கும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணை ஆயுத அமைப்பை சோதித்தது.

    • நிலநடுக்கம் குறித்து நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • பாகிஸ்தானில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்.

    பாகிஸ்தானில் இன்று மாலை 4 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் அருகே பாகிஸ்தானில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.

    காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய ராணுவ வாகனங்களுக்கான இணையதளம் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்துகிறது.

    இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.

    பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையும் பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.

    சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
    • வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    இந்தியா வருமாறு பிரதமர் மோடியின் அழைப்பை ரஷிய அதிபர் புதின் ஏற்றுள்ளார்.

    புதின், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தியாவின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக புதின் மோடியிடம் கூறியதாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    மேலும் இந்த உரையாடலின்போது இந்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள புதினை மோடி அழைத்துள்ளார்.

    இந்த அழைப்பை புதின் ஏற்றுள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரம்ளின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • கடந்த மார்ச் முதல் காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் உதவிப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது.
    • திட்டத்தை நிறைவேற்ற மேலும் ஆயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களை காசாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்த்து ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 அக்டோபர் 7 இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் வரை பலியாகினர். 200 பேர் வரை பணய கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக இன்று வரை காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 52,000த்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

    கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் பொது ஹமாஸ் இஸ்ரேல் பணய கைதிகள் பலரை விடுவித்தது. 1 மாதத்தில் போர் நிறுத்தம் முடிவடைந்து மீண்டும் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

    கடந்த மார்ச் முதல் காசாவுக்குள் செல்லும் உணவு மற்றும் உதவிப் பொருட்களை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. இதனால் காசா மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு (காலவரையின்றி) அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை கூடிய அமைச்சரவையில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், இது ஹமாஸ் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

    இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை தெற்கு காசாவிற்குள் இடம் பெயர்க்கும் சாத்தியக்கூறும் உள்ளது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே போரின் பேரில் காசாவின் பாதி பகுதியில் இஸ்ரேல் கட்டுப்பாடு செலுத்தி வருகிறது. இந்நிலையில் முழுமையான ஆக்கிரமிப்பை இஸ்ரேல் போரின் போர்வையில் நிறுவ முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

    இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்ற மேலும் ஆயிரக்கணக்கான ரிசர்வ் வீரர்களை காசாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இஸ்ரேலின் ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயால் ஜமீர், காசாவின் பல பகுதிகளில் கூடுதல் ராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் என்றும், ஹமாஸ் உள்கட்டமைப்புகள் தொடர்ந்து தாக்கப்படும் என்றுகூறியுள்ளார்.

    • இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • பிரதமர் மோடியை நேற்று இந்திய விமானப்படை தளபதி மார்ஷல் ஏ.பி.சிங் சந்தித்து பேசினார்.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தி னால் தங்களது பொருளாதாரம் மிக மிக படுபாதாளத்துக்கு சென்று விடும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் பயத்தில் உள்ளனர்.

    இதனால் அணுஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் தலை வர்கள் இந்தியாவை மிரட்டியபடியே உள்ளனர். ஆனால் இந்தியா நேரடி போருக்கும், மறைமுக போருக்கும் தீவிரமாக தன்னை தயார்படுத்தி வருகிறது.

    இதையடுத்து பாகிஸ்தான் வெளிநாடுகளிடம் ஆயுத உதவி கேட்டு கெஞ்சத் தொடங்கி இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் வசம் 4 நாட்கள் போருக்கு தேவையான பீரங்கி குண்டுகள் மட்டுமே உள்ளன. எனவே போர் ஏற்பட்டு அது நீடிக்கும்பட்சத்தில் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்று பயப்படுகிறார்கள்.

    இதை சமாளிப்பதற்காக துருக்கி நாட்டிடம் ராணுவ உதவி கேட்டு பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து துருக்கி நாடு தனது போர் கப்பல்களில் ஒன்றை பாகிஸ்தானுக்கு உதவ அனுப்பியது.

    அந்த போர் கப்பல் தற்போது கராச்சி துறை முகத்துக்கு வந்துள்ளது. அந்த துறை முகத்தில் அந்த போர் கப்பல் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பிரதமர் மோடியை நேற்று இந்திய விமானப்படை தளபதி மார்ஷல் ஏ.பி.சிங் சந்தித்து பேசினார். அப்போது அவர் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட ரஃபேல் விமானங்கள் தயார் நிலையில் வைத்து இருப்பதாக பிரதமரிடம் விளக்கி கூறினார்.

    ஏற்கனவே கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி பிரதமரை சந்தித்து அரபிக் கடலில் உள்ள இந்திய போர் கப்பல்கள் பற்றி விளக்கி உள்ளார். இதன் மூலம் இந்திய கடற்படை கப்பல்களும், போர் விமானங்களும் தயார் நிலையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது.

    • காலை 10 மணிக்கு தொடங்கினார்.
    • உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி முதலில் இருந்தார்.

    மாலத்தீவு அதிபராக இருந்து வருபவர் முகமது முய்சு (வயது 46).  இவர் தொடர்ந்து 15 மணி நேரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

    முகமது முய்சு தனது பத்திரிகையாளர் சந்திப்பை நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கினார். தொடர்ந்து அவர் நள்ளிரவு வரை 14 மணி நேரம் 54 நிமிடம் பேட்டி அளித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

    இதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி 14 மணி நேரம் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தது தான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு முறியடித்து உள்ளார்.

    • அனைத்து கோணங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்.
    • அதே வேளையில் அதிகரித்து வரும் பதற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.

    காஷ்மீர் பகல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதி பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலா பயணிகள், 1 உள்ளூர் குதிரை ஓட்டி உயிர் இழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலும் துண்டித்து உள்ளது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போல பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது

    இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது. இந்த பதட்டத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

    அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்ல இருக்கிறது. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆக்ரோஷமான இந்தியாவின் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதே போல இந்தியா தரப்பிலும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க இருக்கிறது.

    இது தொடர்பாக ஐ.நா.சபைக்கான கிரேக்கத்தின் நிரந்தர பிரதிநிதியும், மே மாதத்திற்குரிய பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான எவாஞ்சலோஸ் கூறும் போது அனைத்து கோணங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம்.

    அதே வேளையில் அதிகரித்து வரும் பதற்றம் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    12CNI0505025: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஈரானில் செயல்பட்

    காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.  2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.

    காசா போருக்கு எதிராக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கி வருகின்றனர்.  

    நேற்று இஸ்ரேலின் 2-வது பெரிய நகரமாக திகழ்ந்து வரும் டெல்அவிவ் பென்குரியன் சர்வதேச விமான நிலையம் அருகே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.

    போர் தொடங்கிய பிறகு இஸ்ரேல் விமான நிலையம் மீது அவர்கள் முதல் முறையாக இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில் சிலர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விமான பயணிகள் மத்தியிலும் பீதி ஏற்பட்டது.

    ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த காலத்தில் அவர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டோம். எதிர்காலத்திலும் செயல்படுவோம். இனி 1 முறை தாக்குதல் நடத்திவிட்டு ஓயமாட்டோம், தொடர் தாக்குதல் நடத்துவோம். நாங்கள் 2 பணிகளில் கவனம் செலுத்துகிறோம். ஒன்று ஹமாசை அழிப்பது, மற்றொன்று அவர்களிடம் இருந்து பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்பது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.

    • அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
    • அமெரிக்காவில் மீண்டும் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அதிரடி காட்டினார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

    தற்போது டிரம்ப்பின் பார்வை திரைப்படத்துறை மீது திரும்பி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக டிரம்ப் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நமது திரைப்பட தயாரிப்பாளர்களையும், ஸ்டுடியோக்களையும் மற்ற நாடுகள் அமெரிக்காவில் இருந்து பிரிக்க அனைத்து வகையான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் ஹாலிவுட் உள்பட திரைப்பட துறை அமெரிக்காவிற்குள் பேரழிவுக்கு உள்ளாகி வருகிறது.

    இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகும். இது அமெரிக்க திரைப்பட துறைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

    மற்ற நாடுகளிடம் இருந்து போட்டி தீவிரமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனை உடனடியாக செயல்படுத்த வணிகவரித்துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு நான் அதிகாரம் அளித்து உள்ளேன்.

    அமெரிக்காவில் மீண்டும் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
    • இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் நாடியுள்ளது.

    ரஷிய செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்த ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, "இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நல்ல உறவில் இருக்கும் ரஷ்யா, இருநாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.


    • எம்.பி. ஷர் அப்சல்கான் மர்வட் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • நீங்கள் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு எல்லைக்குச் செல்வீர்களா?

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியாவின் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.

    இதனால் பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து பல வீரர்கள் பணியை விட்டுச் செல்வதாக ஊடக அறிக்கைகள் வந்தன. இந்நிலையில் பாகிஸ்தானின் லக்கி மார்வட் தொகுதியை சேர்ந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடைய தெக்ரிக் இ இன்சப் கட்சி எம்.பி. ஷர் அப்சல்கான் மர்வட் கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஒரு நேர்காணலில், ஒரு நிருபர், "இந்தியாவுடன் போர் நடந்தால், நீங்கள் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு எல்லைக்குச் செல்வீர்களா?" என்று கேட்டார்.

    இதற்கு, மர்வட், "போர் வெடித்தால், நான் இங்கிலாந்து செல்வேன்" என்று வெளிப்படையாகப் பதிலளித்தார்.

    பின்னர், "பதட்டங்களைக் குறைக்க இந்தியப் பிரதமர் மோடி பின்வாங்குவார் என்று நினைக்கிறீர்களா?" என்று நிருபர் கேட்டபோது, மர்வட் கிண்டலாக, " நான் சொல்வதைக் கேட்க மோடி என்ன என் அத்தை மகனா?" என்று தெரிவித்தார்.

    ×