என் மலர்
உலகம்

15 மணி நேரம் தொடர்ந்து பேட்டி அளித்து மாலத்தீவு அதிபர் சாதனை
- காலை 10 மணிக்கு தொடங்கினார்.
- உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி முதலில் இருந்தார்.
மாலத்தீவு அதிபராக இருந்து வருபவர் முகமது முய்சு (வயது 46). இவர் தொடர்ந்து 15 மணி நேரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
முகமது முய்சு தனது பத்திரிகையாளர் சந்திப்பை நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கினார். தொடர்ந்து அவர் நள்ளிரவு வரை 14 மணி நேரம் 54 நிமிடம் பேட்டி அளித்து உலக சாதனை புரிந்துள்ளார்.
இதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி 14 மணி நேரம் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தது தான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு முறியடித்து உள்ளார்.
Next Story






