

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. நாளை சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்... இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க உங்கள் இருவருடனும் நான் இணைந்து பணியாற்றுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையில் 3-ம் தரப்பு தலையீட்டை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் முன்வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
US President Donald Trump posts, "I am very proud of the strong and unwaveringly powerful leadership of India and Pakistan... I am proud that the USA was able to help you arrive at this historic and heroic decision. While not even discussed, I am going to increase trade… pic.twitter.com/SSHkoYcChD