search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து முடக்கம்
    X
    சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து முடக்கம்

    கொரோனா பரவல் அதிகரிப்பு: சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து முடக்கம்

    கொரோனா பரவல் காரணமாக பீஜிங்கில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதோடு, ஓட்டல்கள் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பீஜிங் :

    சீனாவை கொரோனா வைரஸ் திணறடித்து வருகிறது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கடந்த ஒரு மாத காலமாக தொற்று பரவல் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த சூழலில் கடந்த 2 வாரங்களாக தலைநகர் பீஜிங்கில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பீஜிங்கில் புதிதாக 53 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பீஜிங்கில் பகுதியளவுக்கு போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அந்த நகரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட சுரங்க ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 158 வழித்தடங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளன.

    மூடப்பட்டிருக்கும் பெரும்பாலான ரெயில் நிலையங்கள் பீஜிங்கின் சோயாங் மாவட்டத்துக்குட்டவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவல் காரணமாக பீஜிங்கில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதோடு, ஓட்டல்கள் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×