search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஜென்சாகி, ஜோ பைடன்
    X
    ஜென்சாகி, ஜோ பைடன்

    அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

    அமெரிக்க அதிபர் ஜே பைடனுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளராக பணியாற்றும் ஜென்சாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரஸ்ஸல்ஸ் நகருக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன்பு ஜென்சாகிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    இதையடுத்து அதிபருடனான தமது பயணத்தை ரத்துச் செய்த ஜென்சாகி, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

    பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, ஜே பைடனுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    பைடன் மற்றும் சாகி இருவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×