search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    வைரஸ் பரிசோதனை
    X
    வைரஸ் பரிசோதனை

    ஒமைக்ரான் பாதிப்பு - இஸ்ரேலில் முதல் உயிரிழப்பு

    ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டவுடன், முதலில் எல்லைகளை மூடிய நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
    ஜெருசலேம்:

    கொரோனாவின் உருமாற்றம் பெற்ற புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

    போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த உருமாறிய வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

    ஒரு சில நாடுகளில் ஒமைக்ரானால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி பீர்ஷெபா நகரின் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், 60 வயது கொண்ட நபர் ஒருவர் ஒமைக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார்.  உடல்நலம் பாதித்த நிலையில் காணப்பட்டார் என தெரிவித்தனர்.

    Next Story
    ×